News
தலைமன்னார் – இராமேஸ்வரம் பாலம் குறித்து மோடி ஆராய்வு
இலங்கையின் தலைமன்னாரையும் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும் தரை வழியாக இணைக்கும் பாலத்தை அமைக்கும் திட்டம் தொடர்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களுடன் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இந்தியாவின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக, பெரும் தொழில் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள், வங்கிகளின் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் தரைவழி…
சஷிந்ர ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷிந்ர ராஜபக்ஷ தற்போது விசாரணைக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பிலேயே இவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன்
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான சிறுவர்களின் வாழ்வாதார த்தை மேம்படுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு புதிய அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்தப்பணியினை உரிய வகையில் நான் மேற்கொள்வதுடன் தேசிய ரீதியிலும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சராக அவர் செய்தியா ளர்களிடம் உரையாற்றுகையிலேயே இவ் வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தத்தில் தாய், தந்தையரை இழந்த ஆயிரக்கணக்கான சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து…
யாழ்.பல்கலையில் பதற்றம்
யாழ்.பல்கலைக்கழகத்தில் இரு மாணவக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்.பல்கலையின் சிரேஷ்ட மாணவர்களுக்கும் கனிஷ்ட மாணவர்களுக்கும் இடையில் இன்று காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு கோப்பாய் பொலிஸார் விரைந்து சென்ற போதும், பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்ல பொலிஸாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும்இ நிலமை தொடர்பில் பொலிஸார் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சு பதவியை, நிராகரித்த அரசியல்வாதி
மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து கடமையாற்றத் தாம் தயாரில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார். இதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சுப் பதவி சிறிபால கம்லத்திற்கு வழங்கப்படவிருந்தது. நேற்று நடைபெற்ற பதவிப் பிரமாண நிகழ்வுகளில் கம்லத் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் பிரதேசத்தில், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு
-Muhajireen Buhary- ஒலுவில் பிரதேசம் கடலரிப்பினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதை அரசாங்கத்தினதும் அரசியல்வாதிகளினதும் கவனத்திற்கு கொண்டு வரும் நோக்கில் வெள்ளிக்கிழமை (11) ஒலுவிலில் மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளன. ஒலுவிலுள்ள பள்ளிவாயல்களின் நிருவாக சபைகள், சமூக சேவை அமைப்புக்கள், பொது நிறுவனங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்றன ஒன்றிணைந்து ஒழுங்கு செய்துள்ள இவ்வார்ப்பாட்டப் பேரணி, ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து பி.ப. 1.15 மணியளவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஒலுவில்…
‘105 பயணிகளின் உயிர் காக்கப்பட்டது’
விமானியின் சாமர்த்தியத்தால் 105 பயணிகள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இந்திய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு, இலங்கையில் இருந்து 105 பயணிகளுடன் நேற்று இரவு விமானம் ஒன்று சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றது. அப்போது விமானத்தின் சக்கரத்தில் பழுது ஏற்பட்டிருப்பதை விமானி கண்டு பிடித்தார். இதையடுத்து மிகவும் லாவகமாக அந்த விமானத்தை தரை இறக்கினார். விமானியின் சாமர்த்தியத்தால் சக்கரம்…
சீனி, உருளைக்கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பு
இன்று முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் சீனிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, இறக்குமதி செய்யப்படும் சீனியின் கிலோ ஒன்றுக்கான வரி ரூபா 12 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் சந்தையில் கிடைப்பதாலும் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்…
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட பலர் விபத்தில் பலி
மினுவாங்கொட, யாகொடமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அதிகாரி உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பஸ்கள் மற்றும் ஜீப் ஒன்றுடன் ஒன்று மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த ஐவர் இதுவரை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கமாக மாற்றவுள்ளோம் – பிரதமர்
புதிய பாராளுமன்றத்தில் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தமக்கு வரும் கேள்விகளு க்கு பதில் அளிக்கும் வகையில் கட்டா யம் பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திரு க்க வேண்டும். இதற்கான விசேட கட்டமைப்பினை நாம் கொண்டு வரவுள்ளோம். இதன் பிரகாரம் அமைச்சர்களுக்கான வெளிநாட்டு பயணங்களையும் மட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மோதிக் கொண்டிருந்த இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. இது நாட் டின் வரலாற்று புரட்சியாகும். மேலும் நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும்…
பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக்கப்படும் – சுப்பிரமணியன் சுவாமி
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா யுத்தத்தை பிரகடனப்படுத்தாது. ஆனால், இந்த முறை யுத்தம் நடந்தால் பாகிஸ்தானை இந்தியா 4 நாடுகளாக பிளவுபடுத்திவிடும் என்று பா.ஜ.க.தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் கனரக ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியா- , பாகிஸ்தான் இடையே போர் மூண்டால் இந்தியாவுக்குதான் பேரிழப்பு ஏற்படும் என்று பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக…
புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மின்வெட்டு
புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிமனை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மின் கம்பி கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலாவி தொடக்கம் கற்பிட்டிக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது ….
