Headlines

இன்று நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்

– எம்.ஆர்.எம்.வஸீம் – துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு இன்று மாலை மஹ்ரிப்தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடுகின்றது. இம்மாநாட்டில் அகிலஇலங்கை ஜம் இய்யதுல் உலமா,கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள்,முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப் பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பி னர்கள் மற்றும் உலமாக்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நாட்டின் எப்பாகத்திலாவது தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் 0714817380, 011 2432110 fax 011 2390783 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக்குழு…

Read More

நாமலும் – கோத்தாபயும் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவில்..

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர்  நிதிக்குற்ற விசாரணைப்பிரிவுக்கு சென்றுள்ளனர். நிதிக்குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் பெறவே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More

சிரியா மக்களை “அகதிகள்’ என அழைக்க நாங்கள் விரும்பவில்லை – சவூதி அரேபியா

சிரியாவில் உள்நாட்டுச் சண்டை ஆரம்பமானது முதல் அங்கிருந்து வெளியேறிய 25 லட்சம் அகதிகளை வரவேற்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. “சிரியா அகதிகளை சவூதி அரேபியா அலட்சியம் செய்கிறது’ என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாடு அவ்வாறு கூறியுள்ளது. இதுகுறித்து சவூதி அரேபிய அரசுச் செய்தி நிறுவனம் கூறியுள்ளதாவது: சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து, அங்கிருந்து தப்பி வந்த 25 லட்சம் பேரை நாங்கள் வரவேற்றுள்ளோம். அவர்களில் லட்சக்கணக்கானோருக்கு சவூதி அரேபியாவில் தங்குவதற்கான உரிமை…

Read More

மக்கா விபத்து; மன்னர் நோயாளிகளை சந்திப்பு

வெள்ளிக்கிழமை மக்கா அல் மஸ்ஜிதுல் ஹராமில், தனியார் கொம்பனிக்கு சொந்தமான மாபெரும் கிரேன் விழுந்து ஏற்பட்ட பாரிய விபத்தில் ஈரான், பாகிஸ்தான், இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா, துருக்கி, எகிப்து, அல்ஜீரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 107 பேர் பலியானதுடன், 238 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டதுடன், விபத்துக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு அதிகாரிகளை பணித்ததாக அந்நாட்டு…

Read More

பிரதமர் இன்று இந்தியாவுக்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உட்பட இந்தியாவின் சிரேஷ்ட தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

Read More

இஸ்ரேலிய காவல்துறை- பாலஸ்தீன இளைஞர்கள் மோதல்

ஜெருசலேத்தில் உள்ள அல்-அக்ஸா வளாகத்தில் பாலஸ்தீன இளைஞர்கள் இஸ்ரேலிய காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். யூதர்களின் புத்தாண்டு பிறப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வளாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்குள் நுழைந்த இஸ்ரேலிய காவல்துறையினர் அங்கு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பாலஸ்தீன தரப்பினர் கூறுகின்றனர். கிழக்கு ஜெருசலேத்தில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதலின்போதே இந்த மோதல் சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதி நிலவுவதாக கூறப்படுகின்றது. எனினும் ‘பழைய நகரம்’ பகுதியில்…

Read More

பிரதியமைச்சர் அமீர் அலி கடமைகளை இன்று பெறுப்பேற்பு

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜக்கிய தேசிய முன்னணயின் பட்டியலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு முதன்மையாக தெரிவாகிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பதவி கிடைக்கப் பெற்றதையடுத்து அவர் நாளை திங்கட்கிழமை தமது கடமையினை ஆரம்பிக்கவுள்ளார். இன்று பிற்பகல் 1.00 மணிக்கு இந்த நிகழ்வு புன்சி பொரள்ளையில் அமைந்துள்ள அமைச்சில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

றிஷாத் பதியுதீன் குழுவினர் அட்டாளைச்சேனைக்கு விஜயம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அம்பாரை மாவட்டத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து வருகின்றனர். நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கு மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் ஏ.சீ.எம் சமீர் ஹாஜி அவர்களின்…

Read More

ACMCயின் நன்றி நவிலும் நிகழ்வுகளும், மக்கள் பிரதிநிதிகளின் அனுபவப் பகிர்வும்

– அபூ அஸ்ஜத் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற இயக்கம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களின் நலனை மையப்படுத்தியே தமது செயற்பாட்டினை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஒக்டோபர் மாதமளவில் கட்சியின் செயற்பாடுகள் விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார். அம்பாறை மாவட்டத்தில் இரண்டாவது நாளான சூறாவளி சுற்றுப் பயணத்தின் போது மாவடிப்பள்ளியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அமைச்சர்…

Read More

சாய்ந்தமருது மக்கள் சந்திப்பும் நன்றி நவில்தல் நிகழ்வும்

– அகமட் எஸ். முகைடீன் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனின் சாய்ந்தமருது மக்கள் சந்திப்பும் நன்றி நவில்தல் நிகழ்வும் (12.09.2015) சனிக்கிழமை மாலை 9 மணியளவில் கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் சாய்ந்தமருது இல்லத்தில் நடைபெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமாகிய சிராஸ் மீராசாஹிப் தலைமையில் பெருந்திரளான ஆதரவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற…

Read More

இந்திக குணவர்த்தன காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான இந்திக குணவர்த்தன தனது 72 ஆவது வயதில் காலமானார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தனவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

ஒலுவில் கடலரிப்பு பிரதேசங்களை றிஷாத் பதியுதீன் பார்வை

அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் பிரதேசத்தில் துறை முகத்தினை அண்டிய கடற்பகுதி கடலரிப்புக்குள்ளாகிவருவதனால் அப்பிரதேச மக்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த கடலரிப்பு பிரதேசத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீன் .இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்து நிலைமையினை பார்வையிட்டதுடன்,பிரதேச மக்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார். இந்த கடலரிப்பால் கொண்டுள்ள இழப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி,பிரதமர் ஆகியோரை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தவுள்ளதாகவும்,கப்பல;.துறைமுக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க,மற்றும் கடற்றொழில்,நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவையும் இந்த…

Read More