News
ரணில்- மோடி சந்திப்பு
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஆஸி.பிரதமர் அபாட் அவுட் : புதிய பிரதமராக டர்ன்புல்
அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் தலைமை போட்டியில் தோல்வியடைந்த டோனி அப்போட் பிரதமர் பதவியை இழந்த தோடு அந்நாட்டுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்தாவது பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இழுபறி நீடித்த லிபரல் கட்சியின் தலைமைக்காக நேற்று நடத்தப்பட்ட அவசர வாக்கெடுப்பில்அப்போட் அந்த கட்சியைச் சேர்ந்த அமைச்சரவை உறுப்பினரான மல்கம் டர்ன்புல்லிடம் தோல்வியடைந்தார். ஏற்கனவே மோசமான கருத்துக் கணிப்பை பெற்றிருந்த அப்போட் கட்சி உறுப்பினர்களின் ரகசிய வாக்கெடுப்பில் 44 வாக்குகளையே வெல்ல முடிந்தது. டர்ன்புல் 54 வாக்குகளை வென்று…
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் : அனுரகுமார
இறுதி யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என தமிழர் தரப்பினருக்கும் சர்வதேச தரப்புக்கும் ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கவேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். குற்றங்கள் இடம்பெற்றிருப்பின் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எனினும் உள்ளக விசாரணை பொறிமுறைகளை பலப்படுத்தி அதனூடாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை மீதான அறிக்கை கடுமையானதாக அமையும் என செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இலங்கையின்…
25இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு
நகரங்கள், கிராமங்கள் தோறும் 25 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கும் பொறுப்பினை தன்னிடம் முன்னெடுக்குமாறு பிரதமரும் ஜனாதிபதியும் பணித்துள்ளதாக தெரிவித்துள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ வீட்டுப் பிரச்சினைகளை கண்டறிய ஒவ்வொரு பிரதேச மாவட்ட மட்டத்தில் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 15 முதல் 20 இலட்சம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இல்லாது பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுக்கின்றன. இந்தப் பாரிய பிரச்சினையை தீர்ப்பதற்கான மிகப்பெரும் பொறுப்பை…
அடுத்த ஐந்து வருடத்தில் லயன் வாழ்க்கைக்கு முடிவு
அடுத்த ஐந்து வருட காலத்தில் மிகவும் துன்பகரமான தோட்டப்புற லயம் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டு அனைத்து வசதிகளுடனும் கூடிய மலையகத்தில் புதிய கிராமங்களை உருவாக்கவுள்ளோம் என மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்தார். முன்னைய ஆட்சியின் போது மலையகத்திற்கு எந்தவொரு அபிவிருத்தியையும் கொண்டுவராத அராஜகப் போக்கிலான அரசியலை நாம் மீண்டும் தொடரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். மலையக புதிய கிராமம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றதன்…
சர்வதேச தலையீடுகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை மீதான அறிக்கை உள்ளக விசாரணைகளை பலப்படுத்தும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கை குறித்த சர்வதேச தலையீடுகளை இலங்கை அரசாங்கம் சரியான முறையில் கையாளும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். தவறியேனும் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காவிடின் தொடர்ந்தும் மஹிந்தவின் ஆக்கிரமிப்பில் நாடு இருந்திருந்தால் எமது இராணுவ வீரர்கள் நிச்சயமாக சர்வதேச நீதிமன்றில் தண்டிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது…
சிறுமியின் கொலை: கம்பஹாவில் ஆர்ப்பாட்டம்
5வயதுச் சிறுமி கொட்டதெனியாவில் ஈவிரக்கமின்றி வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு துணித் துண்டு ஒன்றினால் கழுத்து இறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமையை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமியின் கொலைக்கான குற்றவாளியை கைது செய்து மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கம்பகாவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தடயங்கள் மற்றும் சிறுமி உறங்கிய கட்டில் மெத்தையில் காணப்படும் கால் தடங்கள் தொடர்பாக பொலிஸார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையுடன்…
கம்பஹா முக்கொலை : சந்தேக நபர் கைது
கம்பஹா – உடுகம்பொல, தெவலபொல பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி குறித்த பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலம் மீட்கப்பட்டதுடன் சிறுமியின் சடலம் வீட்டிற்கு அருகிலிருந்து மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை பசியாலை பிரதேசத்தில் வைத்து நேற்று பொலிஸார் கைது செய்தனர். பொலிஸார்…
ஊவா முதலமைச்சராக சாமர சம்பத் சத்தியப்பிரமாணம்
ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்ண்டார். இவர் ஊவா மாகாண முதலமைச்சராக இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் வழங்க கோரி பேரணி
-அனா- மேல் மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான ஆஸாத் சாலிக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற பிரதி நிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று வழியுறுத்தி நேற்று (திங்கள் கிழமை) மாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மீறாவோடையில் அமைதிப் பேரணி இடம் பெற்றது. நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஆஸாத் சாலி தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் கேட்ட போது தேர்தலில் போட்டியிட வேண்டாம் உங்களுக்கு தேசிப்பட்டடியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படும்…
ஞானசார தன்னுடைய இனப்பற்றை நிரூபிக்க முன்வருவாரா?
-முஹம்மது நியாஸ்- கடந்த வருடம் அதாவது 15.06.2014 அன்று இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள அளுத்கம என்னும் நகரத்தில் பொதுபல சேனா என்னும் பௌத்த பயங்கரவாதிகளினால் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைச்சம்பவங்கள் சர்வதேசமே நன்கறிந்த ஒன்றாகும். இது மாத்திரமல்லாது இப்பயங்கரவாதிகளால் இஸ்லாமிய சமூகத்தின் மீது சுமார் நான்கு வருடங்களாக திட்டமிட்ட வகையில் கட்டவிழ்த்து விடப்பட்டு வருகின்ற அத்தனை வன்முறை சார் செயற்பாடுகளுக்கும் “இலங்கை நாட்டில் பௌத்த மதம் இஸ்லாமியர்களால் களங்கப்படுத்தப்பட்டு வருகிறது” என்ற பொதுபல சேனா அமைப்பின்…
“அநகாரிக தர்மபால என்பவர் யார்?” – ஜனாதிபதி விளக்கம்
கெட்ட குணமுள்ள, ஒழுக்கமற்ற சிங்கள மக்கள் வாழும் பக்கமாக தலைவைத்துக்கூட உறங்கமாட்டேன் என அன்று அநகரிக தர்மபால தெரிவித்தார். ஏனென்றால் அவரது சிந்தனைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளே இவ்வாறான கருத்தை வெளியிடும் நிலைமையை ஏற்படுத்தியது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று சில அடிப்படைவாத தேசப்பற்றாளர்கள் அநகாரிக தர்மபாலவை இனவாதியாக சித்தரிக்க முயல்கின்றனர். இதனை எதிர்க்கின்றேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்ரீமத் அநகாரிக தர்மபாலவின் 151 ஆவது ஜன்ம தினத்தை முன்னிட்டு நேற்று திங்கட்கிழமை பன்னிப்பிட்டிய…
