News
மரண தண்டனையை வலியுறுத்தும், ஆர்ப்பாட்டதில் கலந்துகொள்ள அழைப்பு
மரண தண்டனையை வலியுறுத்தும், ஆர்ப்பாட்டதில் கலந்துகொள்ள அழைப்பு
தந்தை ஆசைப்பட்ட அமைச்சு, மகனுக்கு கிடைத்தது
தந்தை எதிர்பார்த்த அமைச்சுப் பதவி எனக்கு கிடைத்துள்ளதாக பெருந்தேட்டத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இளைய தலைமுறையினரின் காணி மற்றும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க சகல முயற்சிகளும் எடுக்கப்படும் என நவீன் திஸாநாயக்க தலவாக்கலை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். 1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன ஆட்சிக் காலத்தில் தனது தந்தை காமினி திஸாநாயக்க இந்த அமைச்சு பதவியை எதிர்பார்த்திருந்தார். அந்தக் காலத்தில் காணப்பட்ட மிகவும் பலம்பொருந்திய அமைச்சு பெருந்தோட்டத்துறை அமைச்சாகும்….
விசாரணைகள் பூர்த்தி.. ஜனாஸாவை நல்லடக்கம் செய்யப் படுகிறது
ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த அனுமதியை வழங்கியுள்ளார். தாஜூடீனின் சடலம் குறித்த விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் கோரியுள்ளனர். கடந்த மாதம் 10ம் திகதி தாஜூடீனின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டிருந்தது. சடலத்தை எதிர்வரும் 18ம் திகதி மீளவும் நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். தாஜூடீனின் மூத்த சகோதரி பாதிமா…
இவரது மரண நாளே இவர் செய்த நல்லறங்களை சுட்டி நிற்கின்றது
– துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – சம்மாந்துறையில் உதித்த அரசியல் வாதிகள் இளம் வயதில் பூத்துக் காய்த்து குலுங்கிக் கொண்டிருக்கும் அழகினை தனக்கு ஆபத்தை கருதிய எதிரிகள் நேரடியாக அரசியல் மூலம் எதிர்க்க சக்தி இன்றி அவர்களினை புறமுதுகில் குத்தி வீழ்த்தி இருந்தனர்.அவ்வாறே மரணித்த அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் மரணமும் நிகழ்ந்தது எனலாம்.மரணத்தின் காரணங்கள் இயற்கை போன்று ஜோடிக்கப்பட்டாலும் அதில் சில மர்மங்கள் பொதிந்திருப்பதனையும் யாரும் மறுக்க முடியாது. “அன்வர் இஸ்மாயிலிற்காய் மாடு அறுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது” என்ற…
நாட்டில் மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுங்கள் – சிங்கள ராவய
பௌத்த நாடான இலங்கையில், நாட்டில் மாடுகள் அறுப்பதை முற்றாகத் தடைசெய்யுமாறும் முஸ்லிம்கள் தமது சமயக் கடமையான குர்பானை நிறைவேற்றுவதற்கு மாத்திரம் தனியான விஷேட சட்டமொன்றினை நிறைவேற்றுமாறும் சிங்கள ராவய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கள மற்றும் இந்து மக்கள் மாடுகள் அறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இது தடைசெய்யப்பட்டால் மாத்திரமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளது. சிங்கள ராவயவின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு வேண்டுகோள்…
வில்பத்து தொடர்பான வழக்கு இன்று
– வாஜித் – பேரினவாத சமூகம்,இனவாத ஊடகங்கள் மற்றும் வங்குரோத்து அரசியல்வாதிகள் ஒன்றாக சேர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட இருக்கின்றது. அமைச்சர் மீது சுமத்தபட்ட குற்றசாட்டுக்கள் றிஷாட் பதியுதீன் வில்பத்து காடுகளை அழித்து முஸ்லிம் வலையம் ஒன்றை உருவாக்குகின்றார்,காட்டு யானைகளை அழிக்கின்றார் என்றும் இன்றும் பல போலியான குற்றசாட்டுகளை சுமத்தியும் ஆறுக்கு மேற்பட்ட வழக்குகளை தொடுத்து உள்ளார்கள். வில்பத்து…
கொடதெனியாவ கொலை; சிறுமியின் தந்தை மீது வழக்கு
கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடதெனியாவயில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் தந்தையான உப்புல் சாந்த மீதும் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர் நீர்கொழும்பில் பிரபல பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், சிறுவர் துஷ்பிரயோக வழக்கொன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்தவரென தெரிவிக்கப்படுகின்றது. அவர் மீதும் அவருக்கு உதவியாக இருந்த இன்னொரு ஆசிரியருக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் துஷ்பிரயோக வழக்கொன்றும் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் …
குறைவடையும் ‘கீச் கீச்’ சத்தங்கள்
நகரமயமாக்கத்தின் விளைவு இந்த சிறிய பறவைகளின் வாழ்வாதாரத்தை பறித்து விட்டது. ஓட்டுவீடுகள் மறைந்து சிமெண்டு கட்டிடங்கள் அதிகரிக்க அதிகரிக்க சிட்டுக்குருவிகளின் ‘கீச் கீச்’ சத்தங்கள் குறைந்து வந்த நிலையில், செல்போன் டவர்களின் வருகை இந்த பறவைகளின் வாழ்வியல் இயக்கத்தையே அடியோடு புரட்டி போட்டு விட்டது. செல்போன் டவர்களில் இருந்து வெளியாகும் கதீர்வீச்சுகள் சிட்டுக்குருவிகளின் உடல் இயக்கத்தையே சிதைத்து விடுகின்றன. என்றுதான் சொல்ல வேண்டும். குழந்தை பெற்று கொள்ள முடியாது என்ற சூழல் மனித இனத்துக்கு ஏற்பட்டால் எத்தகையை…
பர்கர், பீட்சா உணவுகளால் மூன்றே நாட்களில் சர்க்கரை நோய் வரலாம்!
நம் உணவுப் பழக்கத்திலும் ஒன்றிவிட்ட பர்கர், பீட்சாக்களில் மாவில் கலக்கும் அதீத சர்க்கரை அதனுடன் குடிக்கும் குளிர்பானங்களில் இருக்கும் சர்க்கரை என இவற்றை தொடர்ந்து உட்கொண்டாலே மூன்றே நாட்களில் நீரிழிவு நோய் வரும் ஆபத்து உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பிலிடெல்பியா நகரில் உள்ள டெம்பிள் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அமெரிக்க உணவுப் பழக்கங்களை மூன்றே நாட்களில் தொடர்ந்து கடைபிடித்தாலே நீரிழிவு நோய் வரும் என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வுக்காக சிறப்பான உடல்நலம் கொண்ட 6…
எத்தனை வாழைப்பழங்களை உட்கொண்டால் உயிர் இழப்பு ஏற்படலாம்?
வாழைப்பழங்களில் உள்ள ‘பொட்டாசியம்’ இதயம், சீறுநீரகத்தின் சீரான இயக்கத்துக்கு அத்தியாவசியமானதுதான். ஆனால், அதுவே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்தாகலாம் என்ற எண்ணத்துடனேயே வாழைப்பழத்தை பலர் உண்ணத் தயங்குகின்றனர். சிலர் ஒரு நாளைக்கு ஆறு வாழைப்பழம் மட்டுமே உண்ணலாம் என்றும், ஏழாவது வாழைப்பழம் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் எனவும் ஆணித்தனமாக நம்புகின்றனர். ஒரு நாளைக்கு நமது உடளுக்கு சுமார் 4800 மில்லி கிராம் பொட்டாசியம் தேவைப்படும். ஆனால், ஒரு வாழைப்பழத்தில் சுமார் 400 மில்லி கிராம்களே உள்ளது. அதிலும், நமது…
புலமைப் பரிசில் வினாத்தாளில் சிக்கலான கேள்வியால் சர்ச்சை
நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த சிக்கலான கேள்வி ஒன்றினால் மாணவர்களும், ஆசிரியர்களும் அசெளகரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர்கள் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார். சிவனொளிபாதமலை எந்த மாகாணத்துக்கு உரியது என்று இந்தமுறை புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் வினா ஒன்று எழுப்பப்பட்டிருந்தது.அளவையியல் திணைக்களத்தின் படி, சிவனொளிபாதமலை சப்ரகமுவ மாகாணத்துக்கு உரியது. ஆனால் வரைபடத்துக்கு அமைய இது மத்திய மாகாணத்துக்கு உரியதாகக் காணப்படுகிறது. எனவே இது சிக்கலுக்குரிய ஒரு வினா என்று…
முசலி பிரதேசத்தில் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை
– எஸ்.எச்.எம்.வாஜித் – மன்னார்-முசலி பிரதேசத்தில் உள்ள மாணவர்களின் நலன் கருதி இன்னும் ஓரு சில மாதங்கள் அல்லது வருடத்தில் அணைத்து வசதிகளுடன் கூடிய சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான வாசிகசாலை ஒன்றினை அமைத்து தருவதாக நேற்று மாலை இடம்பெற்ற வன்னி விடியல் சமூகவலை தள கலந்துறையாடல் குழுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இப்படியான சமூக நல திட்டங்களை மக்கள் மத்தியில்…
