News
காலத்தை தேடி மக்கள் பயணமாகின்றனர் : டில்வின் சில்வா
கடந்த காலத்தில் எமது பயணம் சேகுவாராவின் வழியில் பயணித்தது இன்று மாற்றத்தினை தேடிய பயணமாக எமது பயணம், மக்களின் பயணம் காலத்தை தேடி பயணமாகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.. மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் சோசலிச சங்கத்தின் எற்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய இளைஞர் மாநாடு நேற்று யாழ். மாவட்ட றிம்பர் மண்டபத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய விமல் ரத்னாயக்க தலைமையில் நடைபெற்றது….
இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் – சீன உதவி வெளிவிவகார அமைச்சர்
இலங்கைக்கு சகல உதவிகளையும் வழங்க சீனா தயார் என சீன உதவி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளார். சீன உதவி வெளிவிவகார அமைச்சரின் தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழு நேற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தது. இதன்போது, இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, சீனாவுக்கு தான் மேற்கொண்ட விஜயத்தின்போது சீன ஜனாதிபதியும் அரசாங்கமும் தனக்கு வழங்கிய முழுமையான ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி திருப்தி வெளியிட்டார். ஜெனீவா மனித உரிமைகள்…
நீண்டநாள் கொள்ளையர்கள் அகப்பட்டனர்
ஆனமடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயதுச் சிறுவன் ஒருவனுடன் இராணுவத்திலிருந்து தப்பி வந்து மறைந்திருக்கும் 26 வயது இளைஞனையும் கைது செய்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டுள்ள இச்சந்தேக நபர்கள் இருவரும் புத்தளம் பொலிஸ் பிரிவினுள் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளவர்கள் எனவும், கடந்த பல வருடங்களாக மிகத் தந்திரமான முறையில் இவ்விருவரும் ஆனமடு, புத்தளம், கல்கமுவ, நிக்கவெரட்டி, வாரியபொல போன்ற பிரதேசங்களில் வீடுகள்…
முகமது நபி (ஸல்) அவர்களின் கண் கலங்க வைக்கும் எளிய வாழ்கை!
ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். முகமது நபி அவர்களின் வீட்டில் பதனிடப்பட்ட மூன்று தோல் துண்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி பார்லி அரிசியும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேறு பொருட்கள் எதுவும் தென்படவில்லை. உமர் அழத் தொடங்கினார். ‘உமரே ஏன் அழுகிறீர்கள்?’ என்று முகமது நபி கேட்டார். அதற்கு உமர் ‘இறைவனின் தூதரே! நான் ஏன்…
லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கும் படி பொலிஸ் தலைமையகம்தெரிவித்துள்ளது. இதற்கமைய 071 859 1753, 071 859 1770 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கும் படி பொலிஸ் தலைமையகம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
விரைவில் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை
அரசியலமைப்பு பேரவை வெகுவிரைவில் கூடவுள் ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முடிவுகளைப் பொறுத்து அடுத்த வாரமளவில் கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கவுள்ள தாகவும் குறிப்பிடுகின்றது. அரசியலமைப்புப் பேரவை கூடுவது தொடர் பில் கடந்த வாரத்தில் இருந்து அதிகளவில் எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமளவில் பேரவை கூடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அரசாங் கம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக பிரதமர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அரசியலமைப்புப் பேரவை கூட முடியாது போனதாகவும் அமைச்சரவை பேச்சாளர்…
எக்னெலிகொட : கொலை செய்யப்பட்டிருக்கலாம், பல்வேறு தகவல்கள் அம்பலம்
கடத்தப்பட்டு காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கிரித்தலை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, அங்கிருந்து வெலிக்கந்த முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன் பின்னர் வெலிக்கந்த முகாமில் அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தற்போது விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விரைவில் வெலிக்கந்த முகாமை சோதனைக்கு உட்படுத்த மன்றின் அனுமதியை சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட சோதனை அனுமதியின்…
‘ஷரிஆ’ சட்டத்தை எதிர்த்தவர்கள், மரண தண்டனையை வலியுறுத்துவது விரோத அரசியலாகும் – டிலான்
“ஷரிஆ” சட்டத்தை இச் சபையில் எதிர்த்தவர்கள் இன்று மரண தண்டனை எமது நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமென இச் சபையின் பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பரஸ்பர விரோத அரசியலை வெளிப்படுத்தியுள்ளனர் என பிரதியமைச்சர் டிலான் பெரேரா நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதியமைச்சர் டிலான் பெரேரா இவ்வாறு தெரிவித்தார். பிரதியமைச்சர் சபையில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராவாவாரா? அனுர…
(வீடியோ இணைப்பு) பாலியல் லஞ்சம் கேட்ட அதிபரை போட்டுத் தாக்கிய தாயார்
(வீடியோ இணைப்பு) பாலியல் லஞ்சம் கேட்ட அதிபரை போட்டுத் தாக்கிய தாயார்
இனி எந்தவொரு மத அடிப்படைவாதத்துக்கும் இடமில்லை
கடந்த காலத்தில் பொதுபல சேனா போன்ற அடிப்படைவாதிகள் இந்நாட்டின் பள்ளிவாசல்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, இஸ்லாமிய மக்களின் மத சுதந்திரத்துக்கு ஊறு விளைவித்ததை இந்நாடு கண்டது. அதற்கு எதிரான போராட்டத்தில் நாம் முதன்மை வகித்தோம். இன்று நாங்கள் பாடுபட்டு பெற்றுக் கொடுத்துள்ள சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி இந்நாட்டு இந்து, இஸ்லாமிய, பெளத்த, கத்தோலிக்க மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எவரையும் அனுமதிக்க முடியாது. என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், கொழும்பு மாவட்ட எம்.பியுமான…
விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ரோஸி தாக்கல் செய்த வழக்கு இன்று ஆராயப்பட்டது
முன்னாள் அமைச்சரான ரோஸி சேனநாயக்க தாக்கல் செய்த தேர்தல் தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்பட்டது. புவனேக அலுவிஹாரே, பியந்த ஜயவர்தன மற்றும் அனில் குணரத்ன ஆகிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு ஆராயப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட தனக்கு கிடைத்த வாக்குகளை மீள எண்ணுமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு ரோஸி சேனநாயக்க மனுவில் குறிப்பிட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தாம் வெற்றிபெற்றுள்ளதாக ரோஸி…
175 ஆண்டுக்கு முன் உலகில் வெளியிடப்பட்ட முத்திரையை, இலங்கை மீண்டும் வெளியிடுகிறது
உலகில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை புதிய முத்திரையாக இலங்கையில் மீள வெளியிடப்படவுள்ளது. 1840ம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி உலகின் முதல் முத்திரை வெளியிடப்பட்டது. அப்போதைய பிரிட்டன் அரசியான விக்டோரியா மகாராணியின் மார்பளவு புகைப்படம் இந்த முத்திரையில் பதிக்கப்பட்டிருந்தது. இந்த முத்திரையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி (பவுண்ட்சின் சத அலகு) ஆகும். இந்த முத்திரை வெளியிடப்பட்டு தற்போதைக்கு 175 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் உலக தபால் தினத்தை முன்னிட்டு உலகில் முதலாவதாக வெளியிடப்பட்ட முத்திரையை…
