News
கருணாவுக்கு உதவிய அலிசாகிர் மௌலானாவின் வாக்குமூலம்!
கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப்பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப்பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலி சாகிர் மௌலானா, அதுபற்றிய தகவல்களை கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார். ‘கருணாவின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த போது, அதுபற்றித் தாம் பிரதமராக இருந்த…
யாழ்.முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள் – அமைச்சர் றிஷாத்
யாழ்ப்பாணத்திலிருந்து 1990 ஆம் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யபட்ட முஸ்லிம்கள், தமது தாயகமான அப்பிரதேசத்தில் மீள்குடியேற ஆவலுடன் காத்திருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- “யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற மிகவும் அவலுடன் காத்திருக்கிறார்கள். இருந்தபோதும் அங்கு காணிகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. 1990 ஆம் ஆண்டு ஒரு குடும்பமாக இருந்தவர்கள் இன்று 2 குடும்பங்களாக அதிகரித்துள்ளனர். இந்த 25 வருட அகதி வாழ்க்கையானது குடும்ப அங்கத்தவர்களை அதிகரிக்கச் செய்துள்ளது. “இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற…
பிள்ளையான் சற்று முன்னர் கைது
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்கள் குறித்த இடத்தில் குமிந்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரவித்தன. பிள்ளையானின் சட்டத்தரணி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளிவரும் போது சிவனேசதுரை சந்திரகாந்தன் விசாரணைக்காக இங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
ஊடக நிறுவனங்கள் சில என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்க முயற்சிக்கின்றன : ஜனாதிபதி
ஊடகவியலாளர் காணாமல் போவதை தடுத்து நிறுத்தி, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்திய போதிலும் சில ஊடக நிறுவனங்கள் என்னை அரசியல் ரீதியாக இல்லாதொழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற இலங்கை பத்திரிகை கலை சங்கத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நான் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டது சம்பந்தமாக ஒரு…
எழுத்தாளர் ப.ஆப்டீன் காலமானார்
எழுத்தாளர் நாவல்நகர் ப.ஆப்டீன் அவர்கள் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் (09.10.2015- இரவு11.55) காலமானார். -Memon Kavi-
உலகின் மிக ஒல்லியான பேக்பேக் அறிமுகம்
தினசரி வேலைகளுக்கு லேப்டாப் மட்டும் போதும் என எண்ணுகின்றீர்களா? உங்களுக்கான முதுகில் மாட்டும் பை அறிமுகமாகியுள்ளது. வேலைக்காகவே, கல்விக்காகவோ, புதிய ஊருக்குள் குடிபுகுந்து, மாபெரும் லேப்டாப் பேகை முதுகில் மாட்டி, கூட்ட நெரிசலான பேருந்திலும், ரெயிலிலும் ஏறுபவர்களுக்குத்தான் தெரியும், பொதுமக்களின் கோபப்பார்வையைப் பற்றி! இத்தகைய சூழலிலிருந்து தப்பித்துக்கொள்ள இந்த உலகின் மிக ஒல்லியான முதுகில் மாட்டும் பேக்ப்பேக் கைக்கொடுக்கும் என நிச்சயம் நம்பலாம்! இதற்குள், ஒரு லேப்டாப், நோட்டு மற்றும் அதன் சார்ஜர் அல்லது ஸ்மார்ட்போன் போன்றவற்றை…
மவுசாகலையில் மண்சரிவு அபாயம்: 249 பேரை வேறு பிரதேசங்களில் குடியமர்த்த நடவடிக்கை
அப்புத்தளை மவுசாகலை பெருந்தோட்டத்தின் 63 தொழிலாளர் குடும்பத்தினரைக் கொண்ட 249 பேரை மண்சரிவு அபாய நிலையற்ற டியகலை, பண்டாரயெலிய, பிட்டரத்மலை ஆகிய இடங்களில் குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரப்பத்தனை பிளான் டேசன் பொறுப்பிலுள்ள மவுசாகலை பெருந்தோட்டம் மண்சரிவு அபாயம் ஏற்பாடும் பகுதியாக தேசிய கட்டட ஆய்வகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அத் தோட்டத்தின் தொழிலாளர் குடும்பங்களை அத் தோட்டத்திலிருந்து உடன் வெளியேற்ற வேண்டுமென்று ஆய்வகத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊவா மாகாண சபை உறுப்பினர்களான ஏ.கணேசமூர்த்தி, ஏ….
பாதுகாப்பை பலப்படுத்தும் அப்பிள்
ஆப்பிள் நிறுவனம், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, தனது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து பல அப்ளிகேசன்களை நீக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் போன் பயனாளர்களின் விபரங்கள், சம்பந்தமில்லாத மற்றொருவரின் கண்காணி்ப்பிற்கு உள்ளாக்கப்படுவதாக வந்த தொடர் புகார்களை அடுத்து, ஆப்பிள் நிறுவனம், இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடனான உறவை பலப்படுத்த சீனா முயற்சி
இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக சீன விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின் இவ்வாறு விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா மற்றும் ஜப்பானுக்கான விஜயங்களை மேற்கொண்ட நாடு திரும்பியுள்ள நிலையில், சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லியு ஏற்கனவே பல தடவைகள் இலங்கைக்கு…
யால தேசிய சரணாலயத்திற்கு கட்டுபாடு
யால தேசிய சரணாலயத்திற்குச் செல்வோருக்கும் மற்றும் அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலும் புதிய ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சரணாலயப் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்தார். அதன்படி, வாகனங்களின் வேகம், ஒலி எழுப்புதல் என்பவற்றில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. அத்துடன், பொலித்தீன் உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் கொண்டுசெல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துப்பரவு தொழிலாளியாக பணியாற்றிவரை திருகுர்ஆன் பள்ளியின் இமாமாக மாற்றியது !
படத்தில நீங்கள் பார்க்கும் நண்பரின் பெயர் அப்துல் வஹாப் வயது 25 பங்களாதேசை சார்ந்தவர் சவுதி அரேபியாவின் அல்பாஹா நகராட்சியில் துப்பரவு தொழிலாழியாக பணியாற்றியவர் இவர் தனது நிறுவன பணியான வீதிகளின் குப்பைகளை பொறுக்கி வீதகளை சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது சவுதி நாட்டவர் ஒருவர் அவரை பற்றி விசாரிக்கிறார் அந்த துப்பரவு தொழிலாழி தாம் திருகுர்ஆனை மனனம் செய்த ஹாபிழ் என்று தெரிவிக்கிறார் ஆச்சிரியமடைந்த சவுதி நாட்டவர் திருகுர்ஆனை முழுமையாக மனதில் சுமந்து கொண்டு நீன்…
பிரிட்டனில் இஸ்லாம் பரவுவதற்குக் காரணம் என்ன?
கான் பாகவி ஆ ன் இஸ்லாம் (on Islam) இணையதளத்தின் பெண் நிருபர் கேத்தரீன் ஷக்டாம் அண்மையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ‘பிரிட்டிஷார் இஸ்லாத்தை ஏன் ஏற்கிறார்கள்?’ என்ற தலைப்பில் அவர் குறிப்பிட்டிருந்த தகவல்கள் ‘அல்அலூகா’ அரபி இணையதளத்தில் வெளியாகியுள்ளன. பிரிட்டனின் சமய வரலாற்றில் கிறித்தவம் பிரிக்கவே முடியாத ஓர் அங்கமாக விளங்கிவருகிறது. அதே நேரத்தில், கடந்த சில தசாப்தங்களாக இஸ்லாம் வலுவான போட்டியாக உருவெடுத்துள்ளது. ஒவ்வோராண்டும் ஆயிரக்கணக்கோனோர் இஸ்லாத்தில் இணையும் செய்தி பதிவாகிவருகிறது. சமய ஒப்பாய்வு…
