News
லஞ்சத்திற்கு மன்னிப்பு கிடையாது
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரது தராதரம் பற்றி கவனம் செலுத்தப்படாது என லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் தெரிவித்துள்ளார். குற்றம் சுமத்தப்பட்டுள்ள முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் பெரியவர்களா, அந்தஸ்தானவர்களா என்பது பற்றி கவனிக்கப்படாது. பணிகளை சிறந்த முறையில் செய்வதனையே ஆணைக்குழு முதன்மையாக கருதும். லஞ்சத்திற்கு மன்னிப்பு கிடையாது. இது தொடாபில் திமிங்கலம், சுறா, நெத்தலி எல்லோருக்கும் சட்டம் ஒரே விதமாக அமுல்படுத்தப்படும். இந்த ஆண்டில் இதுவரையில் 3095 முறைப்பாடுகள்…
வாழைச்சேனை விகாராதிபதியின் இறுதிக் கிரியைகள் – முஸ்லிம்களும் பங்கேற்பு
-அனா- வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதி நாவானே அபேவன்ச லங்கார தேரரின் இறுதிக் கிரிகைகள் இன்று (17.10.2015) மாலை விகாரை வளாகத்தில் இடம் பெற்றது. கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட நாவாநே அபேவன்ச லங்கார ஹிமி 2010ம் ஆண்டு தொடக்கம் வாழைச்சேனை ஸ்ரீ புத்த ஜயந்தி விகாரையின் தலைமை விகாராதிபதியாக நியமிக்கப்பட்டு அன்று தொடக்கம் மரணிக்கும் வரை வாழைச்சேனையிலயே விகாராதிபதியாக கடமை புரிந்தார். கடந்த 14ம் திகதி இரவு சுகயீனம் காரணமாக…
காணாமல் போன சிறுமியை மீட்டுத் தருமாறு ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பாலைநகர் பகுதியினைச் சோ்ந்த 13 வயதுடைய மாணவி முஹம்மது அலியார் பாத்திமா அஸிமா கடந்த 27ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும்போது காணாமல் போயுள்ளார். இவரை கண்டுபிடித்து தருமாறும்.இதன் சூத்திரதாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு இக்குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றுகோரி தியாவட்டவான் ஹுசைனியா ஜிம்மா பள்ளிவாயல் மற்றும் பாலை நகர் றகுமானியா ஜும்மா பள்ளிவாயல்கள் இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்பு குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர்….
‘மஹிந்தவை தோற்கடித்தது நானே” : பொன்சேகா
– ஜவ்பர்கான் – நாட்டில் மக்கள் எதிர்பார்த்த நல்லாட்சி இன்னும் மலரவில்லை. அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த திசையில் செல்ல வேண்டுமானால் மஹிந்தவுடன் ஒட்டியிருந்தவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். மேலும் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்த பெருமை என்னையே சாரும் என ஜனாநாக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார். மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாவட்ட பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவத்தார். எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் ஜனாநாயக கட்சி…
அரசியல் கைதிகளை விடுவிப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை : பொன்சேகா
– எஸ்.ரவிசான் – விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்ற அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கடந்தக் காலங்களில் எமது நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று முழுவதுமாக ஒத்துழைப்பு தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வெறுமனே இவர்களை மட்டும் அரசியல் கைதிகளாக எந்த ஒரு விசாரணைகளும்…
இலங்கையில் ஆண்களுக்கு தட்டுப்பாடு
நாட்டின் சனத்தொகையில், 100 பெண்களுக்கு 93 ஆண்கள் மாத்திரமே இருப்பதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜனத்தொகை அதிகரப்புக்கு ஏற்ப, நாட்டின் ஆண்களின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கிறது. இதற்கு தொற்றா நோய்களால் ஆண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளே காரணம் என்றும் தெரியவந்துள்ளது. குறிப்பாக மதுபாவனை மற்றும் வாகன விபத்துக்களால் அதிக ஆண்கள் மரணிப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், சிறுவர் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு சமாந்தரமாக முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நான்கு நபர்களில் ஒருவர்…
ஹிஜாபுக்கு ஆதரவாக முஸ்லிம் அல்லாத மக்கள் ஆர்பாட்டம்! (வீடியோ இணைப்பு)
முஸ்லிம் பெண்கள், முகத்தை மறைக்கும் ‘ஹிஜாப்’ அணிய அனுமதித்தால் நாடு பிளவு பட்டுவிடும் என்று கூறிய ‘கனடா’வின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அல்லாத மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ‘வின்னிபெக்’ பகுதியில் செண்ட்ரல் மசூதிக்கு அருகில் செவ்வாயன்று (13-10-2015), ஒன்று கூடிய 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம் அல்லாத மக்கள், முஸ்லிம்களின் ஹிஜாபுக்கு ஆதரவாக பேரணி நடத்தி தங்கள் ஆதரவை பதிவு செய்துள்ளனர்.
இறைதூதர் லூத் (அலை) வாழ்ந்த நகரம் கண்டுபிடிப்பு.!
குர்ஆனில் பெயர் குறிப்பிட படும் இறைதூதர்களில் லூத் (அலை) அவர்களும் ஒருவர். இவர்கள் இப்றாஹிம் நபி (அலை) அவர்கள் காலத்தில் வாழ்ந்ததாக திரு குர்ஆன் குறிப்பிடுகிறது. இந்த நபியின் சமுதாயத்தவர் ஓரின சேர்க்கையில் நாட்டம் உள்ளவர்களாக வாழ்ந்தனர். இவர்களை லூத் (அலை) அவர்கள் மூலம் இறைவன் கடுமையாக எச்சரித்தான். இறைவனின் அறிவுரையை ஏற்க மறுத்த இந்த சமூகம் இறைவனின் கோப பார்வைக்கு உள்ளானது. வானில் இருந்து கல் மழையின் மூலமும் அவர்கள் வாழ்ந்த பகுதிகளை தலைகீழாக இறைவன் புரட்டி போட்டதின் மூலமும் அந்த சமுகத்தை…
சதொச; சிங்கப்பூர் சில்லறை வர்த்தகதுறையை பின்பற்ற வர்த்தக அமைச்சர் உறுதி!
இலங்கைச் சந்தையில் மிக முக்கியமான பொருட்களின் விலைகளை அறிவிக்கும் செயற்பாடுகளையுடய அரசுக்ககு சொந்தமான சதொச மலிவு விற்பனை நிலையத்தை விஸ்தரித்து நவீன மயப்படுத்தும் பணிகள் முன்னெடுபப்பட்டு வருகின்றது. சதொசவை புதுப்பிக்கவும் விஸ்தரிக்கவும் சிங்கப்பூர்னுடைய சில்லறை வர்த்தகதுறை மாதிரியினை பின்பற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என கைத்தொழில் மற்றும் அமைச்சர் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறினார.; விசேட மரியாதை அழைப்பொன்றின் நிமித்தம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிற்கு…
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் : நவ. 7 க்கு முன்னர் நிரந்தர தீர்வு ; ஜனாதிபதி உறுதி
– ஆர். ராம் – சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நிரந்தரத் தீர்வு பெற்றுத் தரப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரன் தெரிவித்தார். அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் , தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமக்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று காலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் சார்பில் அவர்களின் கோரிக்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட…
சுகாதார துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள.. – ஜனாதிபதி
சுகாதார துறையின் சவால்களை வெற்றிக்கொள்ள அரசாங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கண்டி பொது மருத்துவமனையில் 7 மாடி கட்டடதொகுதியை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை கண்டி ஜனாதிபதி மாளிகையில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன்போது, கண்டி நகரிற்கு அஞ்சுறுத்தல் ஏற்படுத்தும் அதிக வாகன போக்குவரத்து நெரிசல், குப்பைகூழ பிரச்சினைகள் தொடர்பிலும்…
முன்னாள் ஜனாதிபதியிடம் சாட்சியங்கள் பதிவு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இன்று பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவில் முன்னிலையாகினர். ஆணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா இதனை செய்தி சேவைக்குத் தெரிவித்தார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான 200 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்தப்படவில்லை. இது தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்யும் நோக்கிலே அவர்கள் ஆணைக்குழுவிடம் முன்னிலையாகியுள்ளனர். இதேவேளை, பாரிய நிதி மோசடி…
