News
முஸ்லிம் பாடசாலைக்கு இரண்டி மாடிக்கட்டிடம்: ஜனாதிபதி அடிக்கல் நாட்டினார்
பொலன்னறுவை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கான புதிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாட்டிவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பொலன்னறுவை எழுச்சி (பிபிதெமு பொலன்னறுவ) என்றொரு அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வார இறுதிநாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்திட்டத்தின் கீழான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பொலன்னறுவையில் தங்கியிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வைபவங்களின் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இத் திட்டத்தின் கீழ்…
ஐ.நா.பிரேரணையால் நாட்டுக்கு பாதிப்பில்லை
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை யினால் பொதுமக்களுக்கோ நாட்டிற்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதனை திட்டவட்டமாக நான் கூறுகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய நாடுகளினால் வெளியிடப்படவிருந்த பாரதூரமான அறிக்கையை மாற்றியமைப்பதற்கு புதிய அரசாங்கத்தினால் முடிந்தது. இருந்தபோதிலும் முன்னைய அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்திருந்தால் இந்த அறிக்கை மிகவும் காரம் கூடியதாக அமைந்திருக்கும். அதிலிருந்து நாம் நாட்டை பாதுகாத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை,முன்னாள்…
வெளிநாட்டு நீதிபதிகள் வந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் உள்ளக விசாரணை நடைபெறுமாயின் அது அரசியலமைப்பை மீறுவதாகவே அமையும். அவ்வாறு அரசிய லமைப்பை மீறும் செயற்பாடுகளை மேற்கொண்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நாம் தயங்க மாட்டோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அறிவித்துக்கொண்டுள்ள மஹிந்த அணியின் முக்கியஸ்தர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்கம் உள்ளக விசாரணை என்ற போர்வையில் சர்வதேச விசாரணையே நடத்துவதற்கு முயற்சிக்கிறது. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். மேலும் அரசாங்கமானது உள்ளகப் பொறிமுறை செயற்பாட்டை…
வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க தயங்கவில்லை
விசாரணை பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளை பெற்றுக் கொள்வதற்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்க வேண் டியுள்ளது. அதாவது வெளிநாட்டு நீதிபதிகள் ஆலோ சனை வழங் கவா? அல்லது விசாரணை செய்யவா? அழைக்கப் படவேண்டும் என்பது குறித்து தீர்மானம் எடுக்கவேண்டியுள்ளது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உலகநாடுகளின் கடற்படை கலங்கள் வருவதற்கான அளவுகோலொன்றை நாங்கள் வகுத்துள்ளோம். அதனடிப்படையில் நீர்மூழ்கிகள் உட்பட அனைத்து கடற்படை கலங்களும் இலங்கைக்கு வரலாம். எங்களை பொறுத்தவரை…
424 பேர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்
1976 ஆம் ஆண்டு முதலாக விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்பட்ட அழிவுகள், குற்றச்செயல்கள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் விடுதலைப்புலிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி புரிந்த 424 பேர் தொடர்பிலும் விசாரணை நடத்த வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை கையளித்ததாக புத்திஜீவிகளின் குரல் அமைப்பு தெரிவித்தது. கொழும்பில் வியாழக்கிழமை அவ்வமைப்பு நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அதன் இணைச்செயலாளர் சட்டத்தரணி தினேஷ் தொடம்கொட இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், கடந்த 1976ஆம் ஆண்டு முதல்…
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக களமிறங்குவோம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிளவுபடும் இதனை தடுக்க முடியாது எனத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார,எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியாக நாம் களமிறங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,எதிர்காலத்தில் மைத்திரி, ஐக்கிய தேசிய கட்சி கூட்டணிக்கு எதிராக எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். உள்ளூராட்சி தேர்தலில் ஒன்றுபட்ட எதிர்கட்சியாக இணைந்து நாம் போட்டியிடுவோம். மைத்திரி எந்தச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கினாலும் நாம் அதனை எதிர்ப்போம். ஐக்கிய தேசிய கட்சியையும்…
மக்களுக்கு சலுகை வழங்கும் வகையிலான வரவு–செலவு திட்டத்தை முன்வைப்போம்
ஊழல் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட, மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக, கல்விக்கு முதன்மை இடம் வழங்கப்படும் எனவே பொய்யான பிரசாரங்களுக்கு ஏமார வேண்டாம் என்றும் குறிப்பிட்டார். நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வீண் செலவுகளுக்கே வரவு செலவுத் திட்டத்தில்…
பலஸ்தீன் சொந்தங்களுக்கு ஆதரவாக, உலகெங்கும் போராட்டம் (படங்கள்)
– அபூஷேக் முஹம்மத் – ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! ஸ்காட்லாந்த் நாட்டில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி! எகிப்து நாட்டில் பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவான மக்கள் எழுச்சி ! அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக மக்கள் எழுச்சி ! ஸ்வீடன் நாட்டில் ஸ்டாக் ஹோமில் ஜியோனிச தூதரகம் முன் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக போராடும் மனிதநேய மக்கள் ! பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கனடாவில் மக்கள் எழுச்சி !
பாத்திமா அஸ்ராவின் மரணம் போன்று, வேறு யாருக்கும் வரக்கூடாது (படங்கள்)
-JM.Hafeez- கடந்த வியாழக்கிழமை (15.10.2015) கண்டி, கட்டுகாஸ்தோட்டை பிரதான வீதியில் நித்தவலை சந்தியில் மழைநீரால் அள்ளப்பட்டுச் சென்ற கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிய பாத்திமா அஸ்ராவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென அப்பிரதேச்தில் வாழும் மக்கள் இன மத பேதமின்றி பிராத்தித்து வருகின்றனர். இவ்வாறான ஒரு அவலம் மீண்டும் யாருக்கும் வரக் கூடாது என்று அவர்கள் இறைவனை வேண்டிக் கொண்டது மட்டும்லலாது அங்கு இயங்கி வரும் அறநெறிப்பாடசாலை மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து மெளுகுவர்தி ஏற்றி அவருக்காக…
மீண்டும் மரண பயம்
கஹாவத்தை, கொட்டகெதன பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் ஆயுதத்துடன் மறைந்திருந்து தப்பியோடித் தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாட்டின் பின்னர் கொட்டகத்தெனவில் மீண்டும் மரணபயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. தாயும் மகளும் மட்டுமே வாழ்கின்ற வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் மறைந்திருந்துள்ளவரைக் கண்ட அவ்வீட்டிலிருந்த 29 வயதான யுவதி, கூச்சலிட்டதையடுத்தே அவர் தப்பியோடியுள்ளார். அரைகாற்சட்டை மட்டுமே அவர் அணிந்திருந்துள்ளார் என்றும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டகத்தென பகுதியில் உள்ள வீடுகளுக்கு இரவிரவாக செல்லும்…
பலஸ்தீனர்களை கொலை செய்வது, யூத மதத்துக்கு செய்யவேண்டிய கட்டாய கடமை யூதமத போதகர் !
– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன போராளிகளை கொன்று குவிப்பது யூத மதத்துக்கு செய்ய வேண்டிய கட்டாய கடமை – முத்ஜவி யூதமத போதகர் ! பலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் புரட்சி செய்யும் பாலஸ்தினர்களை அடித்து உதைப்பது, கொலை செய்யலாமா? யூத போதகர் முத்ஜவிடம் கேள்வி கேட்ட போது, பலஸ்தீனர்களின் தலையை பிடித்து, தரையில் கடுமையாக அடியுங்கள் ,கடைசி மூச்சு போகும் வரை கொலை செய்ய வேண்டும். மேலும் இது யூத மதத்திற்கு செய்ய வேண்டிய…
“ராணுவம் செய்வதை, பாலஸ்தீனர்களின் எழுச்சியும் கற்களும் செய்துவிட்டன!
இஸ்லாமிய அறிஞர்களின் சர்வதேச உறுப்பினரான டாக்டர் ஆயிழ் கர்னீ அவர்கள் , பாலஸ்தீனர்களை நோக்கி பின்வருமாறு கூறிய செய்திகள் மகிழ்ச்சியை தருகின்றன. உங்களது இடத்தை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் .இறைவன் மூலமாக வலிமை பெறுங்கள், அவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் .பிறகு உங்களின் மீது நம்பிக்கை வையுங்கள். ஏனெனில் இந்த உலகமோ மற்ற விடயங்களில் ஓய்வில்லாமல் பரபரப்பாக இருக்கின்றனர் . இன்னும் அவர்களுடைய விடயத்தில் அவர்களே எஜமானர்களாய் இருக்கின்றனர் “ராணுவம் மற்றும் ஏவுகணைகள் செய்வதை, பாலஸ்தீனர்களின் எழுச்சியும்…
