News
ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கான இலங்கை படையினர்
ஐ.நா. அமைதிகாக்கும் படைக்கான இலங்கை படையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமென இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்
வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின் அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…
அடுத்தாண்டு சுதந்திர நிகழ்வினை மாலை வேளையில் நடத்த யோசனை
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வு மாலை வேளையில் நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் ஆண்டு இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின கொண்டாட்டங்கள் மாலை வேளையில் நடாத்தப்படும் என உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. பொதுவாக இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் முற்பகலில் நடாத்தப்படுவதே வழமையானதாகும். எனினும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வு மாலையில் நடத்தப்பட உள்ளது. அடுத்த நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் பற்றிய…
ஓடையில் விழுந்த மாணவி பாத்திமா அஸ்ரா பலி
– J.M.Hafees – கட்டுகஸ்தோட்டை – நித்தவலை பகுதியில் நேற்று மாலை வீதி ஓரமான சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் ஓடை ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவி கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் 16 வயதுடைய பாத்திமா அஸ்ரா சகாப்தீன் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…
மஹிந்தவின் ஆட்சேபனை நிராகரிப்பு
முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனத்தை, பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நிராகரித்துள்ளது. இன்றைய தினம் பாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ள, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மற்றும் அவர் சார்ந்த தரப்பினருக்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியை விசாரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இருக்கின்றதா? என்பது குறித்து…
உரியவர்கள் மோ. சைக்கிள், சைக்கிளை பெறலாம்
கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று கேட்டுக் கொண்டுள்ளது. நெடுந்தீவுச் சந்தைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லுமாலா சைக்கிள் ஒன்றை நெடுந்தீவுப் பொலிஸார் மீட்டு ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவ்வாறு கடந்த மே மாதம் ஊர்காவற்றுறைப் பொலிஸார் என்.பி.ஜே.கியூ இலக்கமுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு நீதிமன்றில் ஒப்படைத்துள்ளனர். அவற்றை உரியவர்கள் பெற்றுக் கொள்ளுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றப் பதிவாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெலே சுதா போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளார்
அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதைப் பொருள் வர்த்தகர் கம்பல விதானகே எனப்படும் வெலே சுதா கண்டி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது வெலிக்கடைச் சிறைச்சாலை மிகக் கடுமையான பாதுகாப்பிற்கு மத்தியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெலே சுதாவுடன் கடந்த காலங்களில் இரகசியமாக பணம் பெற்றுக்கொண்ட 12 சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்ர்களின் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. வெலே சுதாவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் எதிரான பாதாள உலகக் குழுக்களைச்…
பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்குச் சென்று விடுவேன்
பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊரான பொலன்னறுவைக்கு சென்று எனது வீட்டில் வசிப்பேனே தவிர ஜனாதிபதிக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையின் நிலத்துக்கடியில் உள்ள இரண்டுமாடிக் கட்டட பராமரிப்பு செலவை தவிர்க்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கை பத்திரிகை நிறுவனப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது, நான் ஓய்வு பெற்ற பின்னரும் தற்போது நான் பயன்படுத்தும் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ…
4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நுவரெலியா, பதுளை, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள்
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர் களின் உறவினர்களின் பெயர்களில் வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள் உள்ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். இந்த வங்கிக் கணக்குகள் தொடர்பில் தற்போது விசாரணை நடத்தப்படு கின்றது. அதன் முடிவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் அவர் கூறினார். எவன்கார்ட் நிறுவனம் தொடர்பில் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள் ளார். அதன்படி…
அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்களும் பங்கேற்பர்
மாகாணசபைகளுக்கு உட்பட்ட விடயங்களை ஆராய்வதற்காக மாகாண முதலமைச்சர்கள் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சரவை கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர். மத்திய அரசாங்கத்தரப்பு இதனை தெரிவித்துள்ளது. அமைச்சரவை இணைப்பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் இது தொடர்பில் சமர்ப்பித்த யோசனையை ஜனாதிபதி ஏற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார் இதேவேளை நாடாளுமன்ற குழுக்களின் தலைவர்களும் மாதமொருமுறை அமைச்சரவைக் கூட்டத்துக்கு சமுகமளிக்கவுள்ளனர் இதற்கான யோசனையை பிரதமர் ரணில் முன்மொழிந்துள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம்
மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மரம் வெட்டுதல், மணல், மண் அகழ்வு தொடர்பில் அரசாங்கம் புதிய சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சட்ட மீறல்களில் ஈடுபடுவோருக்கு எவ்வித அரசியல் அழுத்தமும் இன்றி சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சாதாரண நபர் ஒருவர் வீடு கட்டுவதற்கு கட்டடம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்கு இந்த சட்டத்தில் எவ்வித தடையும்…
