News
சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்ட நபர் கொழும்பில் கைது
மாலைதீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது
அரசியல்வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்களின் வறுமையைத் தவறாகப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பொலனறுவை இரகாந்தகற்று வெவ வித்தியாலயத்தின் புதிய தொழில்நுட்பக் கூடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்களின் வறுமையை அரசியல் வாதிகள் தாம் அதிகாரத்துக்கு வருவதற்குப் பயன்படுத்துகின்றனர். தேர்தல் வரும்போது அதி காரத்தில் உள்ள அரசியல்வாதி கள் எவராக இருந்தாலும் அரச நிதி வளங்களைப் பயன்படுத்து கின்றனர். குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு…
நோயாளரை பார்க்கச் சென்ற இருவர் வைத்தியசாலையில் கைது
மாரவில வைத்தியசாலைக்கு மதுபோதையில் நோயாளர் ஒருவரை பார்ப்பதற்கு சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர்கள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
31 வருடகல்விச் சேவையிலிருந்து விடைபெற்றார் அதிபர் பாறூக்..!
– காரைதீவு நிருபர் – சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அதிபர் எச்எம்.பாறுக் தனது 31வருடகால கல்விச்சேவையிலிருந்து 19ஆம் திகதி திங்கட்கிழமை தனது 60வது வயதில் ஓய்வுபெறுவதையொட்டி பாடசாலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. காலை ஆராதனையில் பாடசாலையில் பயிலும் சுமார் 400மாணவர்களின் மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. காலைநிகழ்வில் தேசிய மாணவர் படையணியின் வரவேற்புடன் ஆசிரியர்களால் மாலைகள்சூட்டப்பட்டு ஆராதனை மேடைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கு ஆசிரியர்கள் மற்றும் வலயக்கல்விப்பணிமனை சார்பில் கலந்தகொண்ட உதவிக்கல்விபப்ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உரையாற்றினர்….
வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சம்பவமானது அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த துயரத்துடனான அவல வாழ்க்கைக்கு இட்டுச்சென்றுள்ளது. இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சகல விதமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து மீள்குடியமர்த்துவதிலேயே தங்கியிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு இலங்கையில் கொடூர யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் கடந்தாயிற்று. ஆயினும் இதுவரை முஸ்லிம்…
வீதி விபத்துக்களினால் 9 மாதங்களில் 2,200 பேர் பலி
இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் வீதி விபத்துக்களினால் 2,200 பேர் உயிர் இழந்துள்ளனர். கடந்த வருடம் இதே மாத காலப்பகுதியில் 349 பேரே உயிர் இழந்துள்ளனர் என போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வீதி விபத்துக்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது குறித்து தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையில் நடைபெற்ற கூட்ட மொன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2014ஆம் ஆண்டு 36,050 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் அவற்றில் 2,440 பேர்…
கொண்டைய்யா தொடர்ந்தும் விளக்கமறியலில்
கொடதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த குறித்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த வழக்கு தொடர்பில் கைதாகி தானே குற்றத்தை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ள கொண்டையாவின் சகோதரர் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அத்துடன், கொண்டைய்யாவின் சகோதரராக சமன் ஜெயலத்தின் மரபணுப் பரிசோதனை அறிக்கை, சிறுமியின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மரபணுக்களுடன் ஒத்துப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த வழக்கில் முதலில்…
அப்துல்கலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்க முடியாது : இந்திய அரசு !
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை இந்திய அரசு நிராகரித்துள்ளது. அப்துல் கலாம் டெல்லியில் வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மத்திய் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கு பதிலளித்து உள்ள உள்துறை அமைச்சகம், தலைநகர் டில்லியில் இதுவரை எந்த தலைவருக்கும் நினைவிடங்கள் அமைக்கப்படவில்லை என்றும், அதனால் கலாம் வாழ்ந்த வீட்டை நினைவில்லமாக மாற்ற முடியாது என்றும் தெரிவித்துவிட்டது….
இந்திய மாணவர்களின் தொழில்நுட்பத்தை திருடிய ஆப்பிள் நிறுவனம்
இந்திய ஆராய்ச்சியாளர்கள் உள்பட 4 பேர் கொண்ட குழுவின் தொழில்நுட்பத்தை அனுமதியின்றி திருடி பயன்படுத்தியதற்காக ஆப்பிள் நிறுவனம் ஆயிரத்து நானூறு கோடி ரூபாயை இழப்பீடு வழங்க வேண்டுமென அமெரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் குரிந்தர் சோஹி, இந்தியாவிலுள்ள பர்டே பல்கலைகழகத்தின் மின்னணுதுறை பேராசிரியர் டெரனி விஜயகுமார். இவர்கள் இருவரும் ராஜஸ்தானிலுள்ள பிட்ஸ் பிலானி பல்கலைக்கழகத்தில் மின்னணு தொழில்நுட்பத்தில் பி.டெக்., பட்டம் பெற்றவர்கள். இவர்களை உள்ளடக்கிய 4 பேர் கொண்ட…
ஈரான் மீதான பொருளாதார தடை நீக்க ஒபாமா உத்தரவு
ஈரானுக்கும், வளர்ச்சியடைந்த, 6 நாடுகளுக்கும் (அமெரிக்கா,பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜெர்மனி) இடையே, நடைபெற்று வந்த அணு ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தை, கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்தது. அமெரிக்கா தலைமையிலான நாடுகளுக்கு இடையிலான ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமான உறவு மேம்பட்டுள்ளது. இதனை அடுத்து ஈரான் மீதான விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடை நீக்க தேவையான…
தரச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
– அஸ்ரப் .ஏ சமத் – லங்கா எக்ரோ பொரோசிசிங் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு எஸ்.எல்.ஏ மற்றும் ஜ.எஸ்.ஓ 22000 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு 18ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் கோட்டலில் நடைபெற்றது. இக் கம்பனி 1970 களில் ஒரு அரிசி, மா அரைக்கும் ஆலையாக ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது வத்தளையில் மாபெரும் ஏற்றுமதி உள்ளுர் பருப்பு, சோளம், குரக்கன் போன்ற பல வா்த்தக தானியங்களை கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் உள்ளுரிலும் “அங்கா்…
மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இரு மீனவர்கள் பலி
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திகிலிவெட்டை ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இரு மீனவர்கள் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் திங்கட்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதில் கோ.கிருஸ்ணரூபன் (வயது 26), இ.புலேந்திரன் (வயது 35) ஆகிய இருவருமே ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது மின்னல் தாக்கத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். தற்போது சடலம் கிராம சேவகரின் அனுமதியுடன் உறவினர்களினால் மீட்கப்பட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு பொலிசாரின் உதவியுடன் எடுத்து…
