News
ரணிலிடம் அறிக்கை கையளிப்பு
கடந்த வியாழக்கிழமையன்று உயர்கணக்கியல் கற்கை நெறி மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதல் தொடர்பில் ஆரம்ப விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திலக் மாரப்பன இந்த அறிக்கையை கையளித்துள்ளார். இந்தநிலையில் அறிக்கையின் அம்சங்களை கொண்டு இது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பொலிஸாரின் நடவடிக்கை பிழையானது என்று கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார்.
கராத்தே வீரரின் கொலை முக்கியஸ்தரும் கைது
கராத்தே வீரரும் இரவு களியாட்டகத்தின் உரிமையாளருமான வசந்த சொய்ஸா அநுராதபுரத்தில் வைத்து அண்மையில் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முக்கிய சந்தேகநபரான எஸ்எப் லொக்கா என்ற இரான் ரணசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். சிலாபம் பகுதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எஸ்எப் லொக்காவின் சகோதரர் உட்பட்ட 20பேர் வரை வசந்தவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ், அக்ஸாவை மீட்பதில் திட்டவட்டம்
– அபூஷேக் முஹம்மத்- பாலஸ்தீன முக்கிய போராட்ட அமைப்புகள் ஹமாஸ், பத்தாஹ் , இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புக்கள் இடையே லெபனானில் சந்திப்பு நடந்தது. சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் விவரமாவது, தற்பொழுது இஸ்ரேலுக்கு எதிராக நிகழும் பாலஸ்தீனர்களின் மூன்றாம் கல் புரட்சிப் போராட்டத்தை சிறப்பாக வழிநடத்திச்செல்ல வேண்டும். அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட்டு பாலஸ்தீன விடுதலைக்கு போராட வேண்டும் . அந்த வெற்றி மஸ்ஜித் அல்-அக்ஸாவை மீட்டப்படுப்பதில் இருக்க வேண்டும். பாலஸ்தீனத்தில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் புனித…
316 ஆசனங்களை வாரிச் சுருட்டியது எர்துகானின் கட்சி
துருக்கியில் ஐந்து மாதங்களுக்குள் இரண்டாவது முறையாகவும் நேற்று பாராளுமன்ற தேர்தல் இடம்பெற்றது. தேர்தலில் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துகானினால் உருவாக்கப்பட்ட ஆளும் ஏ.கே. கட்சி பெரும்பான்மை வாக்குகளை பெற்றுள்ளது. தனது கட்சி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாக ஜனாதிபதி எதிர்துகான் வாக்குறுதி அளித்துள்ளார். துருக்கியின் ஆட்சியாளர்கள் துருக்கியை சீரழித்து கொண்டிருந்த நிலையில் நிண்ட காலத்திர்கு பிறகு துருக்கி அதிபர் ரஜப் எர்துகான் அவர்கள் மீண்டும் துருக்கியில் ஒரு இஸ்லாமிய சூழலை உருவாக்கினார் ரஜப் எர்துகான் அதிபராக உயர்ந்து விட்டாலும்…
ஹயஸ் வாகனம் தடம்புரண்டு வீட்டுக்குள் புகுந்தது
வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் பகுந்த சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வாகனம் ஏ9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் பயணித்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனால் வாகனம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீடும் சேதமடைந்துள்ளது. வாகனத்தில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுடன் மயிரிழையில்…
அமைச்சர் றிஷாத் மைத்திரிக்கு அவசர கடிதம்
மன்னார் சிலாவத்துறையில் கடற்படையினர் வசமுள்ள மக்களின் காணிகளை மீண்டும் அம்மக்களுக்கு பெற்று்க் கொடுப்பதற்கான உதவிகளை செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். 2009 ஆம் ஆண்டு வடக்கில் மன்னார் சிலவாத்துறையில் கடற்படைக்கான தளமொன்றினை பிரதேசத்தின் பாதுகாப்பு நோக்கம் குறித்து தற்காலிகமாக அமைக்கப்பட்டது.அதன் பிற்பாடு இது நிரந்தரமானதொரு முகாமாக மாற்றப்பட்டுவருகின்றது. சிலவாத்துறையின் பிரதான சனநெருக்கடி மிக்க பிரதேசத்தில் இந்த முகாம் இருப்பதால்,வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரிதும் சிரமங்களை…
அல் அக்ஸாவின் ஒரு கல்லைகூட விட்டுத் தரமாட்டோம் – பள்ளியின் இமாம் சூளுரை
கடந்த சில நாட்களாக பலஸ்தீனில் பலஸ்தீனர்களுக்கும் இஸ்றேலியர்களுக்கும் இடையே அக்ஸா பள்ளியை மையமாக கொண்டு தொடர்ந்து பிரச்சனைகள் வளர்ந்து வருகிறது. இளைஞர்களை பள்ளியில் தொழுகைக்கு அனுமதிக்க மாட்டோம் முதியவர்களை மட்டுமே அல்அக்ஸா பள்ளிக்கும் அனுமதிப்போம் என கூறி இஸ்றேல் அடாவடிதனம் செய்து வருகிறது. கடந்த வெள்ளியன்று பலஸ்தீன இளைஞர்கள் இந்த தடையை தகர்த்து எறிந்தனர் 30 ஆயிரத்திர்கும் அதிகமான பலஸ்தீன முஸ்லிம் இளைஞர்கள் அக்ஸா பள்ளிக்குள் தொழுகைக்காக நுழைந்தனர் இதனை தொடர்ந்து இஸ்றேல் பள்ளிக்குள் நுழைவதர்கு விதித்திருந்து…
அறிஞர் PJ யின் இலங்கை, வருகையை முன்னிட்டு…!
-A. அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Turkey- சமகால அறிஞர்களில் நான் பலதரப்பட்ட கொள்கை கோட்பாடுகளை கொண்ட அறிஞர்களை வாசித்துள்ளேன். அவர்களின் சிந்தனை செல்நெறிகளில் காணப்பட்ட சமூக அக்கறைகளையும் தியாக உணர்வுகளையும் கண்ட பின் அவர்களில் உள்ள முரண்பட்ட நிலைகளை மாத்திரம் வைத்து அவர்களை அனுக என்னால் முடியவில்லை. நான் அதிகம் முரண்படும் உஸ்தாத் மௌதூதி,சிந்தனை சிகரம் அஸ்ஷைக் ரஷீத் ரிலா,முஹம்மத் அல் கஸ்ஸாலி,கலாநிதி முஸ்தபா மஹ்மூத் போன்றவர்களை இஸ்லாமிய சமூக எழுச்சிக்கு சேவையாற்றியவர்கள் என்றே கருதுகிறேன்….
இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் பிரமிக்க வைக்கும் நிகழ்வு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் அன்று என்ன பேசியதோ அவையனைத்தும் இன்று உலகில் நடப்பதை பல ஆண்டுகளாக உலகமே வியந்து வருகிறது. அப்படிப்பட்ட வியப்புகளில் இதுவும் ஒன்று…. அல்லாஹ் தன்னுடைய திருமறை திருக்குர்ஆனில் கூறுகிறான்… “பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா ? என்று அவர் கூறினார். கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றைஏற்படுத்தியுள்ளான் என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார்.” (திருக்குர்ஆன் 19:23.24)என்று திருக்குர்ஆன் பேசுகிறது. திருக்குர்ஆனின் அந்த வசனத்திற்கும் கீழே உள்ள செய்தியையும்…
ஒரு குழந்தை கொள்கையை கைவிடும் சீனா
சீனாவில் 1979-முதல் பின்பற்றப்பட்டு வந்த ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை கொள்கை முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக சீனா திகழ்கிறது. அந்நாட்டில் ‘ஒரு தம்பதி, ஒரு குழந்தை’ என்ற கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் ஏற்கனவே சில மாகாணங்கள் இந்த கொள்கையை தளர்த்தி உள்ளன. இந்த கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார்கள். ஆரோக்கியமான, நிலைத்து நிற்கக்கூடிய வளர்ச்சிக்கு…
பாகிஸ்தானியருக்கு, சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானை சேர்ந்தவர் அமல் ஜன். சவூதியில் வசித்து வந்த இவர் இந்தோனேசியாவை சேர்ந்த பாம்பாங் சுகியாட்டோ, சூர்யாதி வித்யாஸ்துதி என்ற தம்பதியரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அவர்களை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்து விட்டார். இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்று தெரியவில்லை. இதுதொடர்பான வழக்கில் அமல் ஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ரியாத்தில் அமல் ஜன்னின் தலையை துண்டித்து மரண தண்டனை நேற்று நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி அங்கு…
அமைச்சர் றிஷாத் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் முழுமையான மீள்குடியேற்றத்தை 2 வருடங்களுக்குள் நிறைவேற்றித்தாருங்கள் என கைத்தொழில், வணிகத் துறை அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாத் பதியுதீன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தார். வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் 25 வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு கொழும்பில் இடம் பெற்றது. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும்,வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அங்கத்தினர் என்ற வகையிலும் இந்த…
