News
ஐ.எஸ் மீது, அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா தீர்மானம்
ரஷ்ய விமானத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்கியிருக்கலாம் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. எகிப்து நாட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட ரஷ்ய பயணிகள் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 224 பேரும் பலியானார்கள். இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களில், ‘ரஷ்ய விமானத்தை நாங்கள் தான் சுட்டு வீழ்த்தினோம்’ என ஐ.எஸ் தீவிரவாதிகள்…
கொழும்பில் இன்று பாரிய மாணவர் போராட்டம்!
கொழும்பில் இன்று பாரியளவில் மாணவர் போராட்டமொன்று நடத்தப்பட உள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சபையின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எதிரில் நடத்திய போராட்டத்தின் மீது, பொலிஸார் நடத்திய தாக்குதல்களை கண்டிக்கும் வகையிலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமன்றி தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவர்களும்…
ஜனக பண்டார இன்று நீதிமன்றில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். மாத்தளை திம்புல்கமுவ பிரதேசத்தில் கடந்த 1999ம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித படுகொலை தொடர்பிலான சந்தேகத்தின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்பய்பட்டிருந்தார். கடந்த மாதம் 20ம் திகதி சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். சந்தேக நபரை மருத்துவ சான்றிதழுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு…
கட்சி ஆதரவாளர்கள் அதிருப்தி! புத்திக்க பத்திரண
பதவி வழங்கப்படாமை குறித்து என்னை விடவும் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அதிகளவில் வருந்துவதாக மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார். எனது அரசியல் வாழ்க்கையில் பதவிகள் பட்டங்கள் வழங்கப்படாமை எனக்குப் பிரச்சினையில்லை. பதவி கிடைக்கவில்லை என்று மாத்தறை மாவட்ட கட்சி ஆதரவாளர்களே கவலைப்படுகின்றனர். 2009ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நெருக்கடியான தருணத்தை எதிர்நோக்கிய காலத்தில் கட்சி உறுப்பினர்களை பாதுகாத்து பச்சைக் கொடியின் கீழ் ஆதரவாளர்களை அணி திரட்டியிருந்தேன். எனது இந்த தலைமைத்துவம்…
சேயா கொலை தொடர்பான வழக்கினை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு கோரிக்கை
கொட்டாதெனியாவ நான்கரை வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் மஜிஸ்திரேட் நீதிமன்றிடம் கோரியுள்ளனர். சேயா கொலை தொடர்பான வழக்கு நேற்று மினுவன்கொட மஜிஸ்திரேட் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணைகளை உயர் நீதிமன்றிற்கு மாற்றுமாறு புலனாய்வுப் பிரிவினர் கோரியிருந்தனர். இந்த வழக்கு எதிர்வரும் 16ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் டி.ஏ.ருவன் பத்திரண அறிவித்துள்ளார். சேயா கொலை தொடர்பிலான முழு விசாரணைகளையும்…
இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் சிறுவன்: மீட்டுதர தாயார் வேண்டுகோள்
பாகிஸ்தானின் கராச்சி அருகே உள்ள ஒரங்கி என்ற பகுதியை சேர்ந்த ரசியா பேகம் என்பவரின் 15 வயது மகனான முகமது ரமசான், கடந்த 2008-ம் ஆண்டு வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் தற்போது போபாலில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளார். ரமசான் இந்தியாவில் இருப்பதை சமீபத்தில் கண்டறிந்த ரசியா பேகம், தனது மகனை பாகிஸ்தானுக்கு திரும்ப வைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் பலனளிக்கவில்லை. மேலும் ரமசானிடம் போதுமான…
இலங்கையில் இஸ்ரேல்: அமைச்சர் பௌசி அதிரடி
இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலுக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் இடமளிக்க முயற்சிக்கின்றமையினால் முஸ்லிம்கள் அரசின் மீது அதிருப்தியடைந்துள்ளனர். அவ்வாறான நிலைமை உருவானால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் ஐ..தே க. கட்சியையும் ஸ்ரீ.ல.சு. கட்சியையும் புறந்தள்ளி விட்டு ஜே.வி.பி. க்கே வாக்களிப்பார்கள் என தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ.ல. சு. கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவருமான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் இது பற்றி இலங்கை முன்னணி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், எமது நாட்டின்…
மக்களுக்கு சுமையில்லாத வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்
அடிப்படையான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரவு செலவு திட்டம் ஒன்றை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் மீது சுமையை செலுத்தாத வகையில் அந்த வரவு செலவுத்திட்டம் தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்று குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – கிங்ஸ்பேரி நட்சத்திர ஹேட்டலில் நடைபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 15ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித்…
“வீடுகளை உடனடியாக கட்டித் தா” : மீரியபெத்தை மக்கள் ஆர்ப்பாட்டம்
பதுளை மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வீடுகளை கட்டித்தர வேண்டும் என கோரி இன்று பண்டாரவளையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்சரிவு இடம்பெற்று ஒருவருடம் முடிவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட மக்கள் பூனாகலையில் உள்ள 200 வருட பழமையான தொழிற்சாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமக்கு மூன்று மாதத்தில் வீடுகள் கட்டித் தருவதாக அரசியல் வாதிகள் வாக்களித்த போதும் ஒரு வருடம் நிறைவடைந்து வீடுகள் கட்டித் தரவில்லை. மக்கள்தெனிய என்ற இடத்தில் புதிதாக வீடுகள் கட்டப்படுகின்ற போதும்…
சேயா செதவ்மி படுகொலை : சமன் ஜயலத்துக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
கொட்டதெனியாவ சிறுமி சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சமன் ஜயலத்தை தொடர்ந்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வீட்டு தொகுதிகள் மற்றும் பள்ளிவாயல் திறந்து வைப்பு
முசலி – கொண்டச்சி கிராமத்தில் கட்டார் செம்பிறை சங்கத்தின் நிதியுதவினால் இலங்கை ஐமாதே இஸ்லாமியின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 60வீடுகள், கடைதொகுதி, பள்ளிவாசல், தண்ணீர் தொகுதி மற்றும் கல்வி கூடம் ஆகியவற்றை இன்று அமைச்சர் றிஷாத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கட்டார் செம்பிறை சங்க உறுப்பினர்கள். இலங்கை ஐமாதே இஸ்லாமியின் வெளிவிக்கார பணிப்பாளர் மொளலவி அப்துர் றஹ்மான், ஊர்மக்கள் உற்பட பலர் கலந்துகொண்டனர்.
திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
கடந்த 29ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸாரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து இன்று திருகோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் மாணவர்களால் கண்டன பேரணி நடத்தப்பட்டது. திருகோணமலை மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30.மணியளவில்ஆரம்பித்த குறித்த பேரணியானது, டொக்கையார்ட் வீதி ஊடாக தபால் நிலைய வீதியை அடைந்து தொடர்ந்து உட்துறைமுக வீதி ஊடாக ஆளுனர் செயலகத்தினை வந்தடைந்தது. தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுனரிடம் மாணவர்கள் கையளித்தனர். பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து…
