News
பொங்கியெழுந்த தென்கிழக்குப் பல்கலை மாணவர்கள் (படங்கள்)
வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஐ.நா விசாரணைப் பொறிமுறைக்குள் உள்வாங்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம் மஜ்லிஸ் பிரகடனமும் கவனயீர்ப்புப் போராட்டமும் இன்று(04) பல்கலைக் கழகத்தின் ஒலுவில் வளாக முன்றலில் இடம்பெற்றது. இக்கவனயீர்ப்புப் போராட்டத்தின் போது வட புல முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் இலங்கை முஸ்லிம்களின் ஒட்டு மொத்த சுயநிர்ணய உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்திய வாசகங்கள் பொதிந்த பதாதைகளை மாணவர்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓலுவில் வளாகத்திலிருந்து அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் மாணவர்கள் ஒன்றுசேர்ந்து கவனயீர்ப்பு…
பிள்ளையை ரயில் முன் தள்ளிவிட முயற்சித்த தாய் கைது
கண்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் தனது பிள்ளையை ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர். தனது பிள்ளையை பராமரிக்க முடியாமையினாலேயே இவ்வாறு ரயில் முன்தள்ளிவிட்டு கொலை செய்ய முயச்சித்தாக கைது செய்யப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 36 வயதுடைய தாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குமார் குணரத்தனம் கைது
முன்னிலை சோஷலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினரான குமார் குணரத்னம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கேகாலை பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவரது கட்சி தெரிவித்துள்ளது.
அரசியலமைப்புச் சபை இன்று கூடுகின்றது
அரசியலமைப்புச் சபையின் மற்றுமொரு கூட்டம் சபாநாயகரின் தலைமையில் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதில் இதுவரை உறுப்பினர்கள் நியமிக்கப்படாத சுதந்திர ஆணையங்கள் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெண்: மட்டக்களப்பில் சம்பவம்
பிறந்து 29 நாட்களேயான ஆண் சிசு ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று வாழைச்சேனை பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைதாகியுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் குறித்த சிசுவின் தாய், அதனை வாங்க முற்பட்ட பெண் மற்றும் தரகர் ஒருவருமே எனத் தெரியவந்துள்ளது. மேலும் இதன் நிமித்தம் சிசுவின் தாய்க்கு 20,000 ரூபாய் பணம் தரகர் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு…
முன்னாள் கடற்படை தளபதியிடம் இன்று வாக்குமூலம் பெறப்படுகிறது
முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக்க திஸாநாயக்கவை இன்று பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது ரக்னா லங்கா ஆயுதக்கப்பல் தொடர்பில் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஆயுதக்கப்பல் தொடர்பில் ஏற்கனவே வெளியாகியுள்ள தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே சோமதிலக்க அழைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ரக்னா லங்கா நிறுவன தலைவர் விக்டர் சமரவீர ஆகியோரிடம் வாக்குமூலங்கள்…
தூண்டிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கின்றீர்களா? பிரதமர் கேள்வி
மாணவர்களை தூண்டிவிட்டு அவர்களை கொலை செய்ய திட்டமிடுகின்றீர்களா? கடந்த காலங்களில் உங்கள் ஆட்சியில் கண்ட “இரத்த வெள்ளம்” போதாதா? என மஹிந்த ஆதரவு அணியினரை நோக்கி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதன்போது சபைக்குள் மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியின் எதிர்ப்பு கோஷங்களுடன் பதாதைகளை ஏந்தியவண்ணம் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இச் சந்தர்ப்பத்தின்…
பௌத்தத்தை தாக்குவதே அரசின் நோக்கம்!- சிங்கள ராவய
பௌத்த மதத்தை தாக்குவதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும் என சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் வீடுகளில் இருக்கும் யானைகளை ஏதேச்சாதிகாரத்தில் கைது செய்து வருகின்றது. பெரஹராவிற்கு கொண்டு செல்லப்படும் யானைகளை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது கைது செய்கின்றனர். எதிர்வரும் காலங்களில் பெரஹராவிற்கு யானைகள் கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்படும். இது தான் நல்லாட்சியாகும். இந்த அரசாங்கத்;திற்கு தேவை பௌத்தம் மீது தாக்குதல் நடத்துவதேயாகும். அரச சார்பற்ற நிறுவனங்களின்…
ஆபாச தளங்களுக்கு தடை விதிக்கக் கோரி கையெழுத்து வேட்டை
பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையிலான இணையத்தளங்களுக்கு தடை விதித்து, அந்த இணையத்தளங்களுக்கு பிரவேசிக்கும் மார்க்கங்களை தடை செய்யுமாறு கோரி கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை இன்று நடைபெறவுள்ளது. கையெழுத்து வேட்டை இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது. ஆலோசனை மற்றும் நல்லிணக்க சபை ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த கையொப்பம் திரட்டும் நடவடிக்கை காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இடம்பெறவுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகங்களில் அதிகரிப்பு மற்றும் குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு, பாலியல் உணர்வுகளை தூண்டும்…
“திருட்டு பாஸ்போர்ட்” சபையில் விமலுக்கு கேலி
“திருட்டு பாஸ்போர்ட்”, “டபிள் பாஸ் போர்ட்” என சபையில் ஆளும் தரப்பினர் கூச்சலிட சபைக்குள் சிரித்தவாறு உள்நுழைந்தார் விமல் வீரவன்ச எம்.பி.உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறி மாணவர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் சர்ச்சை இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இதன்போதே சபைக்குள் விமல் வீரவன்ச எம்.பி வந்தார். இவரை ஆளும் தரப்பினர் மேற்கண்டவாறு கூச்சலிட்டு ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளனர். இந்த வரவேற்பை விமல் வீரவன்ச சிரிப்புடன் ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தார்.தமது இருப்பிடத்தில் நின்று கொண்டு…
அதிகாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துங்கள்
நிராயுதபாணிகளாக பேரணி நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அத்தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறிய உயர் பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று நேற்று சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தினார். அத்துடன் சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்களே சட்டத்தை மீறுவதா நல்லாட்சியின் விளைவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு வோர்ட் பிளேஸில் வைத்து உயர் தேசிய…
நாடற்ற குழந்தைகள் குறித்து ஐநா எச்சரிக்கை
ஒவ்வொரு 10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை நாடற்றவராக இந்த உலகத்தில் பிறப்பதாகவும், அந்த பிரச்சினையை சிரியாவின் மோதல்கள் அதிகமாக்குவதாகவும் ஐநா எச்சரித்துள்ளது. வருடத்துக்கு 70,000 குழந்தைகள் நாடற்றவராக பிறப்பதாகவும், சிரியா மோதல்களால் பாதிக்கப்பட்டு, குடியேறிகளாக, அகதிகளாக மாறியவர்கள் மத்தியில் இந்த பிரச்சினை மிகவும் அதிகம் என்றும் நாடற்ற குழந்தைகளின் மருத்துவ பராமரிப்பு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் நிராகரிக்கப்படுவதாக ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.
