Headlines

துமிந்தவுக்கு நீதிமன்றம் அனுமதி

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய விசேட நீதிபதி குழு  அனுமதி வழங்கியுள்ளது. தனது தலையில் சத்திர சிகிச்சையொன்றை சிங்கப்பூரில் மேற்கொள்ள உள்ளதாகவும் இதனால்  நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றத்தின் அனுமதியை கோரி இருந்தாகவும் அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார். இம் மாதம் 10 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பவர் 2 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சிங்கப்பூரில்…

Read More

ஜனக பண்டார தென்னகோனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனை நவம்பர் 11ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தளை நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனக பண்டார தென்னக்கோன் 1999ல் நடந்த கொலை சம்பவம், தொடர்பில்,  அக்டோபர் 6ம் தேதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உடல் நலக்குறைவினால் சிகிச்சை பெற்று வந்த வந்த ஜனக பண்டார தென்னக்கோன், இன்று நீதிமன்றில் முன்னிலையாகியமை குறிப்பிடத்தக்கது.

Read More

முஸ்லிம்களை வெளியேற்றியது இனச்சுத்திகரிப்புத்தான் – சுமந்திரனின் பதிலடி

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு…

Read More

பாராளுமன்ற வீதியினை மறிக்கும் மாணவர்களின் போராட்டத்திற்கு தடை!

பாராளுமன்ற வீதிக்குள் பிரவேசித்தல் மற்றும் அதனை தடை செய்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. கடுவெல நீதவான் நீதிமன்றின் ஊடாகவே இத்தடையுத்தரவு காவல்துறையினரால் பெறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக ஆணைக்குழுவுக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து , இன்று முன்னெடுக்கப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கே இவ்வாறு காவல்துறையினர் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை இன்று ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திற்கு முன்னிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை ஆர்ப்பாட்டப் பேரணி…

Read More

விமானசேவை விஸ்தரிப்புக்கு தாய்லாந்து இணக்கம்

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் விமான சேவையை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தாய்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (திங்கட்கிழமை) அந்நாட்டு பிரதமர் பிரயூட் சாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இதன்போது இருநாட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் குறித்து பரஸ்பரம் கலந்துரையாடப்பட்டதோடு, தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி செயற்பாடுகளில் இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி மைத்திரி கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த தாய்லாந்து பிரதமர், இதுகுறித்து உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொள்ள…

Read More

2016 ஜனவரிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்க உறுதி

கொஸ்லாந்தை மீரியாபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் 2016 ஜனவரி இறுதிக்குள் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா இதனை தெரிவித்துள்ளார். நேற்று மாலை அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மீரியாபெத்த மண்சரிவு ஏற்பட்டு ஒரு வருட காலமாகியும், வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படாமைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.மீண்டும் ஒரு அனர்த்தம் ஏற்படாதவண்ணம் நிலத்தை செப்பனிடுதல், மூலப்பொருட்களின் விநியோகம், போன்ற பல காரணிகள் இதற்கு…

Read More

மைத்திரி – ரணில் தலைமையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு

நாட்டின் தேசிய ஒற்­று­மையைக் காப்­பாற்றி, ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்பும் வகையில் எமது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுத்துச் செல்­கின்றோம். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி ­ர­ம­சிங்க தலை­மையில் அர­சியல் பிரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­படும் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் அமைச்­ச­ரு­மான நிமல் சிறி­பா­லடி சில்வா தெரி­வித்தார். நாட்டை மீட்­டெ­டுக்கும் பய­ணத்தில் ஸ்ரீலங்கா சுதந்­தரக் கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஒன்­றா­கவே பய­ணிக்கும் எனவும் அவர் குறிப்­பிட்டார். தேசிய அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல்…

Read More

தேவை­யற்­ற ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர் : லக் ஷ்மன் கிரி­யெல்ல

உயர் தேசிய கணக்­கீடு டிப்­ளோமா பாட­நெறி தொடர்­பான அனைத்து கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளித்த நிலை­யி­லேயே மாண­வர்கள் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தை நடத்­தினர். இது தேவை­யற்­ற­தாகும் எனத் தெரி­வித்­துள்ள உயர் கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அபி­வி­ருத்தி அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல. இது தொடர்­பான முழு­மை­யான விப­ரங்­கள் விரைவில் வெளி­யி­டப்­ப­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, மாண­வர்­களின் அனைத்து கோரிக்­கை­களும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது. கடந்த 29 ஆம்…

Read More

மலையகத்தில் கடும் மழை

– க.கிஷாந்தன் – மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவுகள் மூன்று திறக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்தேக்கத்தின் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிக மழை காரணமாக  சென்கிளயார் நீர்வீழ்ச்சியில் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது. மலையகத்தில் உள்ள ஏனைய நீர்தேக்கங்களின் நீரின் மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும்,  ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்கும்…

Read More

அம்பாறையில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

– எம்.எம்.ஜபீர் – அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஏற்படட காலநிலைமாற்றத்தினால் பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை மத்தியமுகாம் வீதியின் 6ஆம் கொளனி பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரயாணிகள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால் பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும்…

Read More

அல்-அக்சாவை மீட்போம் – துருக்கி பிரதமர் சபதம்

துருக்கி தேர்தலில் வெற்றி பெற்று பேசிய அர்துகானின் AKP கட்சியின் மூத்த தலைவரும், தற்போதைய பிரதமருமான அஹ்மத் தாவுத்தின் உரையில் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் மஸ்ஜித் அல்-அக்சாவை மீட்போம் என கூறினார். எங்களுக்காக துவா செய்த அனைவருக்கும் நன்றி, குறிப்பாக ஜெருசலம், காசா, பிருட் (லெபனான்), பாக்தாத், அலெப்போ மக்கள் செய்த துவாவே இந்த வெற்றிக்கு காரணம்.

Read More

சரியும் மோடியின் சாம்ராஜியம், விஸ்பரூபம் எடுத்த உவைசி

மோடி சாம்ராஜ்யத்தின் சரிவு தொடங்கி விட்டது என்பதை உத்திர பிரதேசத்தில் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் உறுதி செய்கிறது. பரவாலாக உத்திர பிரதேச உள்ளாட்சி தேர்தலில் படு தொல்வியை சந்தித்துள்ள மோடி கூட்டம் குறிப்பாக மோடியின் தொகுதியான வாரணாசியில் மிக பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது வாரணாசி நாடளமன்ற தொகுதிக்குள் வரும் 58 பஞ்சாயத்துகளில் 50 பஞ்சாயத்தில் மோடி கூட்டம் படு தோல்வி அடைந்திருக்கிறது. உத்திர பிரதேசத்தில் இருந்து மோடி கூட்டத்தின் வெற்றி ஆரம்பித்தது போல் தற்போது…

Read More