News
மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை
பல்கலைகழக மாணவர்கள் தாக்கப்பட்டமைக்கு அரசுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளுவதாக எமது செய்தி சேவைக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியின் போது அமைச்சர் இதனை தெரிவித்தார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீது விசாரணைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. எமது ஆட்சியின் கீழ் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு எமது…
ஐ.நா. பணியில் ஈடுபட்ட 7 இலங்கை படையினர் பலி
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக சென்ற இலங்கை படையினரில் இதுவரை ஏழுபேர் உயிர் நீத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பின் சிறுவர் நல அதிகாரி கே.ரவீந்திரன் தெரிவித்தார். இன்று காலை மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் தினவிழாவில் கலந்து கொண்டு பேசும்போதே இதனை தெரிவித்தார். ஐ.நா.அமைதி காப்பு சமாதான பணிகளில் 1200 இலங்கை படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஹெயிட்டி, தென்சூடான், மத்திய ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் அமைதிகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும்…
இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு செருப்படி (காணொளி)
இந்திய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது செருப்பால் தாக்குதல் நடத்தியநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது. அதில், இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், என். ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று இரவு, 9:00 மணியளவில், கூட்டம் முடிந்து, எம்.கே.நாராயணன், மேடையில் இருந்து இறங்கி, அரங்கில் நடந்து வந்தபோது, வாலிபர் ஒருவர், அவர் மீது செருப்பு வீச்சு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்….
திட்டமிட்டபடி பீ.ஜே. வருவார் – SLTJ அறிவிப்பு
தென் இந்திய மார்க்க அறிஞர் பீ.ஜே. ஜெய்னுப் ஆப்தீன் திட்டமிட்டபடி இலங்கை வருவார் SLTJ அறிவித்துள்ளது. இதுபற்றி ஜமாத்தின் துணைச்செயலாளர் ரஸ்மின் மௌலவி கூறுகையில், பீ.ஜே. இலங்கை வருவதற்கான அத்தனை சட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளோம். இன்ஷா அல்லாஹ் அவர் நிச்சயம் இலங்கை வருவார். குறிப்பிட்டபடி நிகழ்வுகளில் பங்கேற்பார். அதில் எத்தகைய மாற்றமும் கிடையாது. கடந்த காலங்களில் சத்தியத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. இப்போதும் அப்படித்தான். நாம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செயற்படுபவர்கள். எதிர்காலத்திலும் அவ்வாறே…
பொலன்னறுவையில் ஊடகப் பயிற்சி பாடநெறி
பொலன்னறுவை மாவட்டத்தில் ஊடாகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்காக ஊடகப் பயிற்சிபாடநெறி ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நடவடிக்கை எடுத்துள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் இல்லாததனைக் கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் இப் பயிற்சியை பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளுடன் இணைந்து நடத்தவுள்ளது. இதன் முதற்கட்டமாக ஒற்றை நாள் பயிற்சி முகாம் ஒன்று எதிர்வரும் 20 ஆம் திகதி கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இதில் பங்குபற்ற விரும்பும்…
அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்
அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றின் 3ம் இலக்க நீதிமன்றில் நீதவானாக கடமையாற்றிய மேலதிக நீதவான் நிசாசந்த பீரிஸ் 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மாத்தறை மாவட்ட நீதிமன்ற நீதவானாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்….
கோத்தாவை கைது செய்ய முடியாது
ஐக்கிய நாடுகள் சபையின் கலப்பு விசாரணையையும் சர்வதேச நீதிபதிகளையும் எதிர்ப்ப தாக கூறிக் கொள்ளும் தேசப்பற்றாளர்கள் இலங்கையில் நீதித்துறைமீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். இதுவா இவர்களது தேசப்பற்று என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். “எவன்கார்ட்” விவகாரத்தைப் பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ஷவை கைதுசெய்ய முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற எவன்கார்ட் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்…
சோமா எதிரிசிங்க காலமானார்
இலங்கையின் திரைப்படத் தயாரிப்பாளர், சமூக சேவகி மற்றும்முன்னணி பெண் வர்த்தகர் சோமா எதிரிசிங்க காலமனார். 939ம் ஆண்டு மீகொட பகுதியில் பிறந்த இவர் சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று காலை மரணமடைந்தார். இவருக்கு வயது 76 என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்கவும்: அமைச்சர் றிஷாத்
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை தீர்ப்பது தொடர்பிலும், வைத்தியசாலையின் ஏனைய தேவைகள் தொடர்பிலும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுடன் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றது. கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அவர்களின் வேண்டுதலின் பேரில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாட நேரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நீண்ட நாள் தேவையான குளிருட்டப்பட்ட பிரேத அறை தொடர்பிலும், காணப்படும் சில குறைபாடுகளை உடன் நீக்குவது தொடர்பிலும் இதன்போது கவனம்…
மாணவர்கள் மீதான தாக்குதல்: இன்று விசாரணை!
உயர்தர தேசிய தொழில்நுட்ப கணக்காய்வாளர் டிப்ளோமா மாணவர்களின் போராட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்த மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பித்த முறைப்பாட்டின் மீதான விசாரணை இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த விசாரணை நேற்று முன்தினம் காலை எடுக்கப்படவிருந்த போதிலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய பொலிஸார் சிலர் விசேட கடமையொன்றுக்கு செல்லவேண்டியிருந்ததால், வேறொரு தினத்துக்கு அந்த விசாரணையை ஒத்திவைக்குமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய விசாரணை இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று…
இலங்கை வந்தடைந்தார் ஜனாதிபதி
தாய்லாந்திற்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை வந்தடைந்துள்ளார். நேற்று இரவு 11.20 அளவில் யு.எல.883 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி கடந்த முதலாம் திகதி தாய்லாந்து நோக்கி சென்றிருந்தார். இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையே இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு தாய்லாந்து பிரதமர் விடுத்த விசேட அழைப்பிற்கமையவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது…
பிரதமர் இன்று விசேட உரை
புதிய அரசாங்கத்தின் இடைக்கால பொருளாதார கொள்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்றவுள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சராகவே பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த கொள்கைக்கமைய அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவு திட்டம் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நாட்டு நிலையான பொருளாதார வளர்ச்சி இலக்குகளை முழுமைபடுத்தும் தொழில்நுட்ப பாதைக்கு ஒரு ஆய்வாக இதனை கருத்திற்கொள்ள முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
