News
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை?
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு விரைவில் குடியுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என இந்தியாவின் முன்னாள் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் குறித்து இந்திய அரசின் கொள்கையில் தற்போது மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்தக் கருத்தரங்கில் ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பைச் சேர்ந்த எஸ். சி. சந்திரஹாசனும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது….
அவன்ட் கார்ட் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது!– ரவி
அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள். எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, அவன்ட் கார்ட் விவகாரத்தில் தவறில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பன…
இஸ்ரேலுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
இன்று, வெள்ளிக்கிழமை (6) ஜும்மா தொளிகைக்கும் பின், மருதானை பள்ளிவாசலுக்கு முன்பு அப்பாவி பலஸ்தீன முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாத சட்டவிரோத இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் சகல முஸ்லிம்களையும் பங்கு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மிய்யதுல் உலமாவுக்கு, சிறிலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பதில்…!
தலைவர் / செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு – 10 நேர் வழியை பின்பற்றுபவர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டும்!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!!! அல் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸூம் மட்டுமே நேர்வழி காட்டி. அதை மாத்திரம் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக! எதிர்வரும் 08.11.2015 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள சிங்கள மொழியிலான திருக்குர்ஆன் தர்ஜுமா வெளியீட்டு நிகழ்வில்…
PJ வருகை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா எச்சரிக்கை
1437-01-22 2015-11-05 தென்னிந்தியாவைச் சேர்ந்த பீ. ஜைனுலாப்தீன் அவர்கள் ஒரு நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொள்ள இருப்பதாக ஊடகங்களினூடாக அறிய முடிகிறது. கடந்த கால அவரது விஜயத்தின் பொழுது ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகள் மற்றும் சமூக ஒற்றுமையையும், சக வாழ்வையும் சீர்குலைக்கும் சம்பவங்கள் ஏதும் ஏற்படாமலிருப்பதை கவனத்திற் கொண்டு இலங்கையின் பல முன்னணி இஸ்லாமிய நிறுவனங்களும், அமைப்புக்களும், அறபுக் கல்லூரிகளும் அவரது விஜயம் ஆரோக்கியமற்றது என எழுத்து மூலமும், தொலைபேசி மற்றும் நேரடியாகவும் ஜம்இய்யாவுக்கு அறிவித்த…
அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக ஜெமீல் நியமனம்
– எம்.வை.அமீர் – கிழக்குமாகாணசபையின் முன்னாள் குழுக்களின் தலைவரும், தற்போதைய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறந்த கல்வியாளரும் சிந்தனையாளருமான ஜெமீல், கடந்த பாராளமன்ற தேர்தலின்போது நாடுமுழுவதும் சென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பக்கம் மக்களைக் கவர்வதில் மிகுந்த பங்காற்றியிருந்தார். அமைச்சர் றிஷாத் பதியுதீன் அவர்களிடமுள்ள அமைச்சில் மிக உயர்ந்த இப்பதவியை அமைச்சர் றிஷாத், ஜெமீலுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பாறை மாவட்டத்தில் உற்பத்தியாக்கும் தொழிற்சாலை
– அஸ்ரப் ஏ சமத் – சீனாவின் தனியார் முதலீட்டாளர் உதவியுடன் 45 மில்லியன் ரூபாய் முதலீட்டில் அமைய விருக்கும் கழிவு பொருட்களை மூலப் பொருளாகப் பாவித்து உரம் உற்பத்தியாக்கும் தொழில் சாலை அம்பாறை மாவட்டத்தில் அமைக்கப் படவுள்ளது. குறிப்பாக கரை யோரப் பகுதிகளில் இன்று வரை தீர்த்து வைக்க முடியாத ஒரு பெரும் பிரச்சினையாக விருந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருள்கள் அகற்றுதல் , இவற்றை நிவர்த்தி செய்யும் முகமாக தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி சீனாவின்…
சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (05) மாலை காலஞ்சென்ற சோமா எதிரிசிங்கவின் பூதவுடலுக்கு கொழும்பு சுலைமான் டெரஸில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ரயில் கூரையில் ஏறி விபரீத செல்பி: 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கி பலியான மாணவன்
செல்பி என்ற சுயபுகைப்படம் எப்போது பிரபலமாகத் தொடங்கியதோ, அப்போதிருந்தே செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்பி எடுக்க முயற்சித்து, பலர் தங்கள் உயிரை விடுவதும் தொடர்கதையாகி வருகிறது. மும்பையில் உள்ள புனித சேவியர் உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருபவர் சகில்(14). கஞ்ஜூர்மர்க் பகுதியைச் சேர்ந்த இவர் நேற்று முன்தினம், தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதற்காக நாகூர் ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். திடீரென விசித்திரமாக எதையோ யோசித்த சகில், ஸ்டேஷனில் நின்றிருந்த ரெயிலின் கூரை…
இரவை பகலாக்கிய எரிநட்சத்திரம் (வீடியோ)
எரிநட்சத்திரத்தைப் பற்றி பல சுவாரஸ்ய தகவல்களை நம்மில் பலர் கேள்விப்படிருப்போம். சிலர் அதைப் பார்த்துக்கூட இருக்கலாம். ஆனால், அதை உடனடியாக யாரிடமும் காட்டவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாது. காரணம் கண் சிமிட்டும் நேரத்தில் அது காணாமல் போய்விடும். இப்படி மின்னல் வேகத்தில் கடந்து செல்லும் எரிநட்சத்திரத்தை தனது காரில் உள்ள முன்பக்க கேமரா (dashcam) மூலம் தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் பதிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் யூ-டியூபில் அப்லோட் செய்யப்பட்ட இந்த வீடியோ 26 லட்சம் பேரைக்…
செல்பி மோகத்தைப் போக்க ஆன்டிசெல்பி மாத்திரைகள்
செல்பி எடுக்கும் மோகத்தைப் போக்க ஆன்டி-செல்பி மாத்திரைகள் தற்போது வெளிவந்துள்ளன. நம்மை நாமே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே போகின்றது. சிறப்பான செல்பி எடுக்கும் முயற்சியில் உலகெங்கிலும் பலர் இதுவரை உயிரிழந்துள்ளனர். எனினும், நாம் அதிகளவில் செல்பி எடுப்பதை நிறுத்துவதாக இல்லை. இந்நிலையில், இங்கிலாந்தில் செல்பி மோகத்தைப் போக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் (‘மிண்ட்ஸ்’ – புதினா வாசனையுடன் கூடிய இனிப்பு) விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் ரூபாய்க்கு தற்போது…
அமைச்சரவையில் றிஷாத் கொந்தளிப்பு: அமைதிப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி
– ஏ.எச்.எம்.பூமுதீன் – வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது பெரும் கொந்தளிப்பான சூழ்நிலை தோன்றியுள்ளது. அ.இ.ம.கா தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கடும் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதன்போதே, இந்த கொந்தளிப்பான நிலை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று (05) திகதி காலை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது….
