News
சோபித தேரர் மறைவு: அமைச்சர் றிஷாத் இரங்கல்
இலங்கையின் அரசியலில் மாற்றமொன்று ஏற்படுவதன் மூலம் சிறுபான்மை சமூகங்கள் தமது அரசியல் அந்தஸ்த்தையும், பாதுகாப்பினையும் தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையில் செயற்பட்டு வந்த சோபித தேரரின் இறப்பு, இலங்கையில் தற்போதைய சூழலில் ஈடுசெய்யப்பட முடியாததொன்று என்று அகில .இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள இறங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மாதுலுவாவ சோபித்த தேரரின் மறைவு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது – ஜனவரி 8 ஆம்…
சிங்கள மொழி அல்குர்ஆன் வெளியீட்டில், பொலிஸ் அதிகாரிகள் கேட்ட சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்
-அஸ்ரப் ஏ சமத்- பி.ஜே. நேற்று (8) இந்த நிகழ்வுக்கான வரவை இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில *************** மற்றும் , சில முகவரி இல்லாத லெட்டா பெட் கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் தடுத்துள்ளனா். இந் நிகழ்வு இந்த நாட்டில் வாழும் சிங்கள சமுகத்திற்கு சிங்கள மொழி மெயாப்பை வழங்கும் நிகழ்வு இதனை சில காழ்ப்புணா்ச்சி கொண்டு இந்த குர்ஆண் சிங்கள மக்களிடம் செல்லக் கூடாது எனத் தடுத்துள்ளாா்கள். ஆனால் மாசா அல்லாஹ் இந்த…
சோபித தேரர் காலமானார்
– ஏ.எஸ்.எம்.ஜாவித் – சிறந்த சமயத் தலைவர் சோபித தேரரர் காலமானார். இலங்கை மக்களுக்கு பாரிய இழப்பு இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்னின்றவர்களில் முக்கியமானவராக கருதப்பட்ட மாதுருவாவே சோபித தேரர் இன்று (08) காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் இன்று அதிகாலையில் சிங்கப்பூர் வைத்திய சாலையில் இறையடி சேர்ந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல காலமாக இலங்கையில் சர்வாதிகார ஆட்சி முழ நாட்டு மக்களையும் அதாளபதாளத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்த நிலையில்…
றிஷாத் பதியுதீனுக்கு, ஜனாதிபதி அழைப்பு.
வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் கலந்துரையாட அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு ஜனாதிபதி அழைப்பு. 11 ஆம் திகதி புதன்கிழமை இக் கூட்டம் இடம் பெறுகின்றது. வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதியும்,பிரதமரும்,மற்றும் மீள்குடியேற்ற அமைச்சரும் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடந்த 5 ஆம் திகதி இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கடும் தொனியில் பேசியதையடுத்து இது தொடர்பில் தேவையான கலந்துரையாடல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வியினை உருவாக்குவது எமது கடமை
எமது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க நாம் அரசியல் என்னும் ஆயுதத்தை நேர்மையாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் முஸ்லிம் பெண்கள் மத்தியில் நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியினை உருவாக்குவது எமது அனைவரினதும் கடமையாகும் என்றும் கூறினார. புத்தளம் பாத்திமா மகளிர் கல்லுாரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (6) மாலை பாபடசாலை மண்டபத்தில் இடம் பெற்றது. பாடசாலை அதிபர் மாஹிரா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில்…
முஸ்லீம் விடயத்தை தனி நபர் பிரேரணையாக முன்வைத்த றிப்கான் பதியுதீன் (VIDEO)
வட மாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக அதீத அக்கறை கொள்ள வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபையின் 37 ஆவது மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருதத்து தெரிவிக்கையில் வட மாகாண முஸ்லீம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் எதிர்கால மீள்குடியேற்றங்களும் என்ற ரீதியில் தனி நபர் பிரேரணையை முன்வைத்துள்ளேன். இம்மக்கள் 1990 ஆண்டு கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேறியதில்…
எவ்வளவு முயற்சித்தாலும் பேஸ்புக்கில் மார்க் ஸுக்கர்பர்க்கை பிளாக் செய்ய முடியாது, தெரியுமா?
கசப்பான அனுபவத்தால், நீங்கள் மீண்டும் நேரில் சந்திக்க விரும்பாத நபரை தடுக்க வழியே இல்லை என்றாலும், பேஸ்புக்கில் நிச்சயமாக அவரை ‘பிளாக்’(முடக்க) செய்துவிடலாம். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்கை என்ன முயற்சித்தாலும் ‘பிளாக்’ செய்ய முடியாது ஏன் தெரியுமா? மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார். கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத்…
இந்தியாவின் முதல் திருநங்கை பொலிஸ் அதிகாரி நியமனம்!
காவல் துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. காவல்துறை அதிகாரியாக சேலத்தை சேர்ந்த கே.பிரித்திகா யாஷினி என்ற திருநங்கையை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நியமன உத்தரவு நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலேயே, ஒரு திருநங்கை காவல்துறையின் துணை ஆய்வாளர் என்ற பதவிக்கு வருவது இதுவே முதல் முறையாக இருக்கும். தமிழக காவல்துறையின் துணை ஆய்வாளராக அவரை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின்…
P.J. க்கு போர்க்கொடி தூக்குவதிலுள்ள பயங்கர ஆபத்துக்கள்..!
-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன. இலங்கையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய அமைப்பு ஒன்று தமது…
பீ.ஜே. விவகாரம், ACJU கடிதத்தில் ஒரு ஊழியர் கையொப்பமிட்டது ஏன்..?
தென்னிந்திய தவ்ஹீத் புரட்சியாளர் பீ ஜே இலங்கை வருவதில் இலங்கை முஸ்லிம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜமிய்யத்துல் உலமாவின் கடித தலைப்பில் மௌலவி அல்லாத ஒரு ஊழியர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டிருப்பது உலமாக்களை அவமானப்படுத்தும் செயல் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. மேற்படி அறிக்கையில் ஜமிய்யத்துல் உலமாவின் நிர்வாகத்தில் சம்பளத்துக்கு பணி புரியும் ஆதம் அலி என்பவர் கையொப்பமிட்டுள்ளார். மிக முக்கியமான இந்த விடயத்தில் உலமா சபையின் தலைவரோ, செயலாளரோ, பத்வாக்குழுவோ அல்லது ஒரு மௌலவியாவது…
PJ இலங்கை விஜயத்துக்கு எதிராக, தெவட்டகஹா பள்ளியின் முன் ஆர்பாட்டம்
தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் இலங்கை விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு தெவட்டகஹா ஜும்மா பள்ளியின் முன், ஜும்மா தொழுகைக்கு பின்னர் ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சுன்னத் வல் ஜமாஅத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யபட்ட இந்த ஆர்பாட்டத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகையை எதிர்த்து கோஷங்களையும் எழுப்பியதுடன் பாதகைகளையும் ஏந்தி இருந்தது காணக்கூடியதாக இருந்தது.
தண்ணீர் விழுங்கிய குழந்தையின் கண்ணீர் கதை!
– எம்.எஸ்.எம்.நூர்தீன் – கடந்த (30.10.2015) வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி 6ம்குறிச்சி, பாவா வீதியில் சிறுமியொருவரை காணவில்லை என்ற பரபரப்பான செய்தி அந்தப் பிரதேசமெங்கும் மிக வேகமாக பரவியது. இந்தச் செய்தி வெளியாகி ஒரு சில மணித்தியாலயங்களில் காணாமல் போன குறித்த சிறுமி மலசல கூடம் நிர்மாணிப்பதற்காக வெட்டப்பட்ட குழியிலிருந்து மீட்டெடுக்கப்பட்டதாகவும் சிறுமி உயிரிழந்து விட்டதாகவும் தெரிய வந்தது. காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜன்னத் மாவத்தை அதனோடுள்ள வீதியே பாவா லேன் என அழைக்கப்படுகின்றது. இந்த…
