News
கொலை செய்யப்பட்ட சிறுவனின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு
எம்பிலிப்பிட்டிய – பனாமுர பகுதியில் சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சிறுவன் பாடசாலைக்கு சென்று வீடு திருப்பாமையினால் பெற்றோர் அவரை தேடிய போது பாடசாலைக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். மேலும் குறித்த சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வைத்திய பரிசோதனையில் இருந்து தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளான். பொலிஸார் சம்பவம்…
பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்த பொலிஸ் நாய்
பிரான்ஸ் தலைநகரம் பாரிசில் கடந்த 13–ந்தேதி இரவு ஐ.எஸ் கள் 8 பேர் பல இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 129 பேர் கொல்லப்பட்டனர். மேலும், நானூறு பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை பிடிக்க நடந்த போராட்டத்தின்போது, டீசல் என்ற ஏழு வயது போலீஸ் நாய் உயிரிழந்தது. டீசல் என்ற இந்த பெல்ஜியன் ஷெப்பர்டு நாய் உயிரிழந்த செய்தியை பிரென்சு போலீசார் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். பாரிஸ் தாக்குதலுக்கு தலைமை ஏற்று செயல்பட்ட…
நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா? (வீடியோ)
பாரீஸ் நகரில் கடந்த வெள்ளிகிழமை தீவிரவாதிகள் நடத்தி கொலைவெறி தாக்குதல் நடத்திய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்திய போது, கண்களை கட்டியப்படி ஒரு இஸ்லாமிய இளைஞர் நான் தீவிரவாதியில்லை, என்னை கட்டி அணைப்பீர்களா என்ற கோரிக்கை பதாகையுடன் நின்றிருந்தார். பாரீஸ் மக்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவரை கட்டியணைத்தனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தினார்கள். இறுதியாக அங்கு கூடியிருந்த மக்களிடம் பேசிய அந்த இளைஞர் ”நான் ஒரு இஸ்லாமியன், ஆனால் நான் தீவிரவாதி இல்லை. நான்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம்
நாடாளும்னற உறுப்பினர்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் காலங்களில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்ப முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி பிரதி வியாழக்கிழமை தோறும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆம்பமாகி முதல் அரை மணித்தியாலயம் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழக்கூடிய எந்தவொரு கேள்வியையும் பிரதமரிடம் கேட்க முடியும். முன்னதாக இந்தக் கேள்விகளை பிரதமர் அலுவலகத்திற்கு…
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்
இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பிலான அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்திற்கு தலைமைதாங்கவுள்ளார். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் இன்றைய விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளைää இன்று பிற்பகல் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாம் வரவு செலவுத் திட்டம் நிதி…
புளத்சிங்கள தொகுதியின் சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கைது
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் தொகுதியொன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் இன்று காலை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள தேர்தல் தொகுதிக்கான அமைப்பாளர் துசித குலரத்ன என்பவரே அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். இவரது மனைவிக்கு போக்குவரத்துப் பொலிசார் அபராதம் விதித்து, தண்டப்பணம் அறவிடுவதற்கான பத்திரமொன்றை வழங்கியிருந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் துசித குலரத்ன பொலிசாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது….
அவன்ட்கார்ட் விடயம்! மேற்கு வங்காள புருலியா ஆயுத இறக்கல் சம்பவத்தை நினைவூட்டுகிறது
இலங்கையில் இன்று சர்ச்சைக்குரியதாக விடயமாக கருதப்படும் அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் இந்தியா தமது கவனத்தை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்தியா, இந்த மிதக்கும் ஆயுதக் கப்பல் விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் இராணுவ அதிகாரி கேட்டுள்ளார். இந்த விசாரணைகளுக்கு இலங்கையின் அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியாவின் விசேட படை நடவடிக்கைகளுக்கான முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கட்டொக் தெரிவித்துள்ளார்….
ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த பிரசன்னம்
– அலுவலக செய்தியாளர் – பாரிய மோசடி மற்றும் ஊழல் விசாரணை பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் பிரசன்னமாகியுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியின் போது விளம்பரம் செய்தமைக்கான கட்டணத்தை செலுத்தாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய…
இலங்கையில் முதலீடு செய்ய முனைப்புடன் களத்தில் இஸ்ரேல்!
இலங்கையில் இஸ்ரேல் நட்புறவு மன்றம் நிறுவப்பட்டதை தொடர்ந்து… இலங்கையில் முதலீடு செய்வதில் இஸ்ரேல் முதலீட்டார்கள் கடும் முனைப்பு காட்டிவருவதை அவதானிக்க முடிகிறது.மிக அண்மைக்காலத்தில் இலங்கை அமைச்சுகள் சிலவற்றுக்கு விஜயம் செய்தபோது அமைச்சின் அமைச்சர்கள் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டார்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதாக தகவல் வழங்கப்பட்டது.அண்மையில் தேசிய வன அமைச்சுக்குக்கு விஜயம் செய்த போது யால மற்றும் வில்பத்து வனங்களில் கேபள் கார் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலில் இஸ்ரேலிய நாட்டு முதலீட்டாலர்களுடன் அமைச்சர் கலந்துகொண்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டது. இது…
மதுகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்குள் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. பிரச்சாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் முன்னறிவித்தல் எதுவுமின்றி பிரச்சாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிமன்றத்தில்…
திஸ்ஸமகாரம குடிநீா்த்திட்டத்திற்கு 3930 மில்லியன் நிதி ஒதுக்கீடு
– அஷ்ரப். ஏ. சமத் – “நேற்று அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லும்போது திஸ்ஸ மகராம மக்கள் பருகும் அசுத்த நீர் குப்பிகளைக் கொண்டு சென்று முழு அமைச்சரவைக்கும் காட்டினேன். இப்பிரதேசத்தில் சிறுநீா் நோய்க்குள்ளாக்கப்பட்டுளள மக்கள் பற்றியும் உரையாற்றினேன். அதன் நிமிா்த்தம் அமைச்சரவை உடனடியாக 3930 மில்லியன் ரூபாவை திஸ்ஸமகாரம குடிநீா்த்திட்டத்திற்கு நிதி ஓதுக்கித் தந்தது”. என அமைச்சா் சஜித் பிரேமதாச கூறினாா். சஜித் பிரேமதாச இன்று(19) பத்தரமுல்லை செத்சிரிபாயவில் உள்ள அவரது அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளா்…
இலங்கையிலுள்ள தமிழ் பெயர்கள் அகற்றப்படும்: இராவணாபலய ஆவேசம் (2ம் இணைப்பு)
யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப என்ற பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்யப்படும் பட்சத்தில், இலங்கையிலுள்ள அனைத்து தமிழ் ஊர்களின் பெயர்களையும் தாம் அகற்றுவதாக இராவணாபலய அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவதற்கு எதிராக ஜனாதிபதியை சந்திக்கும் வகையில் இராவணாபலய அமைப்பு ஜனாதிபதி செயலகத்திற்கு இன்று சென்றிருந்தது. எனினும், ஜனாதிபதியை இன்று சந்திக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 2.30க்கு ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் இராவணாபலய அமைப்புக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து…
