News
மஹிந்த கையொப்பமிட்டார்
சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் வேண்டாம்- படையினருக்கு எதிரான செயற்பாட்டை நிறுத்து என்ற தொனிப்பொருளில் படைவீரர்கள் பாதுகாக்கும் தேசிய அமைப்பினால், முன்னெடுக்கப்படும் கையொப்பம் திரட்டும் செயற்பாட்டில் இணைந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ, மகஜரில் கையொப்பமிட்டார். இந்த நடவடிக்கை கோட்டை சம்புத்தாலோக விஹாரையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
நாளை ஞானசாரவின் வழக்கு; சட்டம் தனது கடமையை செய்யும்
ஞானசார தேரரின் கைது தொடர்பாக பெரும்பான்மை சிங்கள மக்களிடத்தில் எதுவித தாக்கங்களும் ஏற்படாமை பொதுபல சேனா அமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவ்வமைப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் எமக்கு அறியக்கிடைத்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தேர்தலை எதிர்கொண்ட பொதுபல சேனா மூக்குடைத்து கொண்டது. அதனை தொடர்ந்து சிறிது துவண்டு போன பொதுபல சேனா ஞானசார தேரரின் கைது சிங்கள மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்திருந்தது. இந்த நிலையில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஞானசார…
றிஷாத் பதியுதீன் பவுன்டேசன்; கொழும்பு முஸ்லிம் மாணவா்கள் கல்வி ஊக்குவிப்பு
– அஸ்ரப் ஏ சமத் – அமைசச்சா் றிஷாத் பதியுதீன் பவுண்டேசனினால் கடந்த (6) ஆம் திகதி கொழும்பு புதுக்கடை சந்தியில் கொழும்பு வாழ் 500 மத்ரசா மாணவா்களுக்கிடையே பேச்சு மற்றும் குர்-ஆன் மனனம் கசீதா, ஆங்கில சிங்கள பேச்சுத் திறன்களை வெளிப்படுத்தி போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தப்பட்டது. அதில வெற்றி பெற்ற சகல மாணவா்களுக்கும் அமைச்சா் றிஷாத் பதியுதீன், பிரதியமைச்சா் அமீா் அலி ஆகியோாினால் சின்னங்களும் சான்றிதழ் அப்பியாசப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கொழும்பு பல்கழைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளா்…
நாளை பிரியங்கரவிடம் விசாரணை
இலங்கை விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு நாளை (9) அழைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆட்சியில் இலங்கை கென்டரின் நிறுவனம் மற்றும் இலங்கை விமான நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்த விசாரணைகளுக்காகவே அவர் நாளை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த மோசடி தொடர்பில் கடந்த வருடம் இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜயரத்னவிடம் விசாரணை நடத்தப்பட்டதோடு , குறித்த…
7 வயது சிறுவனுக்கும் 6 வயது சிறுமிக்கும் திருமணம்; பாகிஸ்தானில் 6 பேர் கைது
பாகிஸ்தானில் 7 வயது சிறுவனுக்கும் 6 வயது சிறுமிக்கும் திருமணம் நடத்தி வைத்த குற்றச்சாட்டில் ஆறு பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர். மேற்படி சிறார்களின் பெற்றோர் மற்றும் திருமண வைபவத்தின் சாட்சிகளான 6 பேரும் பாகிஸ்தானின் கிழக்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான சைஃபுல்லா கான் தெரிவித்துள்ளார். இவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை மற்றும் 50,000 பாகிஸ்தான் ரூபா அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தானில்…
கடந்த அரசிற்கு ஐ.நா நன்றி தெரிவிக்க வேண்டும்
கடந்த அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்தமைக்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு நன்றி தெரிவிக்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஹொரணையிலுள்ள விஹாரை ஒன்றில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது புலம்பெயர்ந்தவர்களின் தேவைக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக சிறைக்குச் செல்லவும் தயாரென அவர்…
நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்
நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று (8) மழை பெய்யும் என காலநிலை மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதாவது, மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானியல் அதிகாரி நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
என்னையும் விரைவில் கைது செய்வார்கள்! ஹம்பாந்தோட்டையில் நாமல்
அரசாங்கம் விரைவில் தம்மையும் கைது செய்யலாம் என்று ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் அதனை தடுக்க தாம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை லுனுகம்வெஹர என்ற இடத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய நாமல், அரசாங்கத்தினால் பொதுமக்களை திருப்திப்படுத்த முடியாமல் போயுள்ளது. எனவே தான் அரசியல் பழிவாங்கல்களை முன்னெடுத்துள்ளது என்றும் நாமல் குறிப்பிட்டுள்ளார். பழிவாங்கல் நடவடிக்கையாகவே தமது சகோதரர் யோசித்தவும் கைது செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நெல்சன் மண்டேலாவின் பேரன் இஸ்லாத்தை தழுவினார்!
இறைவனின் மாபெரும் கிருபையினால் நெல்சன் மண்டேலாவின் பேரன் மண்ட்லா மண்டேலா அவர்கள் சில தினங்களுக்கு முன் உலகம் போற்றும் ஒரே மார்க்கமான தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட காலக்கட்டத்தில் மண்ட்லா மண்டேலாவின் தாத்தா நெல்சன் மண்டேலா நிறவெறிக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டவராவார். தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இன அழிவு நீங்க இஸ்லாமே சரியான தீர்வு என்பதை…
சவூதியில் WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி !
சவூதியில் தற்போது WhatsApp இலவச அழைப்புக்கு அனுமதி அளித்துள்ளது தொலை தொடர்பு துறை. ஆனால், இது நிரந்தரமாக இருக்குமா போன்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. UAE போன்ற மற்ற நாடுகள் இந்த தடையினை நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
தேசிய அரசாங்கம்: மஹிந்தவின் யோசனை
தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் யோசனையே என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அஹங்கமயில் இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘தேசிய அரசாங்கம் என்றொரு கருப்பொருளை ஒரு சிறந்த மனிதரே அறிமுகப்படுத்தினார். அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார். அவர், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவுக்கு முன்னரே இந்தக் கருப்பொருளை அறிமுகப்படுத்தி விட்டார்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்….
கண்டி செல்கிறார் ஐ.நா ஆணையாளர்
செயிட் அல் ஹூசைன் இன்று (8) கண்டிக்கு விஜயம் செய்யவுள்ளார். குறித்த விஜயத்தின்போது அவர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்களையும் சந்திக்கவுள்ளார். அதனையடுத்து,ஐ.நா ஆணையாளர் கொழும்பிற்கு விஜயம் செய்து பாதுகாப்பு செயலாளர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் ஆகியோரை பாதுகாப்பு அமைச்சில் சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கத்தர்களுடன் மதிய விருந்தில் கலந்துகொண்டு மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆணைக்குழுவினருடன் கலந்துரையாடவுள்ளார். அதனையடுத்து இன்று மாலை…
