News
நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு
நாட்டின் 68ஆவது சுதந்திர தினத்தைமுன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை(4) மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குர்ஆன் முழுவதும் மனனம் செய்துள்ள இங்லாந்தின் ஏழு வயது சிறுமி !
இங்லாந்தின் ஏழு வயது சிறுமி மரியா குர்ஆன் முழுவதும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார். 7 Year Old Girl From England Memorises the Entire Qur’an Maariya from Luton, England has completed memorising the entire Qur’an. She started aged 5 when she memorised Surah Yasin in a charity challenge in order to raise money for Syria. Shortly after, she completed…
வடமாகாண ஆளுநராக, றெஜினோல்ட் குரே
வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்கார ஓய்வு பெறுவதற்கான கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், புதிய வடமாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே என்பவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வௌிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்
இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்வரும் 05 ஆம் திகதி (நாளை மறு தினம்) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 09 ஆவது அமர்வில் பங்குகொள்ளும் பொருட்டே எதிர்வரும் 05 ஆம் திகதி வருகைதரவுள்ள இவர் 06 ஆம் திகதி வரையான இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருப்பார். இந்தியா – இலங்கை கூட்டு ஆணைக்குழுவுக்கு இலங்கை வௌிவிவகார அமைச்சர் மங்கள…
பாரிய வாகன நெரிசல் : பல்கலைக்கழக திறக்குமாறு ஆர்ப்பாட்டம்
திறந்த பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, நகர மண்டப சுற்றுவட்டத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மூடப்பட்டுள்ள திறந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளம் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் விஹாரமாதேவி பூங்காவுக்கு அருகில் 11 மணிக்கு ஆரம்பமாகியது. கடந்த 22ஆம் திகதி, பல்கலைக்கழக மாணவர்களின் உடமைகள் சிலவற்றை நீக்குவதற்கு பல்கலைக்கழக பணியாளர்கள் முயற்சி செய்ததையடுத்து அங்கு நிலவிய பதற்ற நிலையை அடுத்து பல்கலைக்கழகம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
யோஷித்த ராஜபக்சவை பார்வையிட கட்டுப்பாடுகள் விதிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவை பார்வையிட வருபவர்களுக்கு கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்சவை பார்த்து நலன் அறியும் நோக்கில் கடந்த சில தினங்களாக பெரும் எண்ணிக்கையிலானோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்துள்ளனர். தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக யோஷித்த ராஜபக்ச ஒரு நாளில் மூன்று பேர் மாத்திரமே பார்வையிட முடியும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய…
தமிழ் மொழியில் தேசிய கீதம் : எதிர்க்கிறாராம் மஹிந்த
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் போது தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த முயற்சியை முன்னாள் ஜனாதிபதி மகிந்த வன்மையாகக் கண்டித்துள்ளார். இந்தியாவை திருப்தி படுத்தும் நோக்கில் அரசாங்கம் தமிழில் தேசிய கீதம் பாட முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தேசிய கீதம் ஒரு மொழியில் பாடப்பட வேண்டுமெனவும் இரண்டு மூன்று மொழிகளில்…
ஷிகா வைரஸ்: சர்வதேச அளவில் அவசர நிலை பிரகடனம்
ஷிகா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் சர்வதேச அளவில் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது . தென் அமெரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஷிகா வைரஸ் பிற நாடுகளுக்கும் மெதுவாக பரவி வருகிறது. மேற்கு ஆபிரிக்காவில் எபோலா வைரஸ் பரவியபோது நடவடிக்கை எடுக்க தாமதமாகியதை அந்த அமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட் சான், ஷிகா வைரஸால் உலகின் பிற பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது….
பயந்து ஓடிஒழிய இந்த, அரசாங்கம் தயாராக இல்லை – ராஜித
அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்சக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து மோசடிகளையும் கண்டறிவதுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்சவை விடுவிக்கக் கோரியும் அந்த விவகாரம் தொடர்பில் பல கருத்துக்களை மஹிந்த அதரவு அணியினர் முன்வைத்து வரும் நிலையிலும் இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை…
பதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளை, ஜம்இய்யத்துல் உலமாவும் வழங்கும்
கில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலுமுள்ள துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் உலமாக்களிடமிருந்து புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கிளைகள் மூலம் இந்தப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல்களை உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உலமா சபையின் கிளைகளின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ளார். நாடெங்குமுள்ள உலமா சபைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் ஆலோசனைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு அரசியல் யாப்பு வரைபுக்…
நடுவானில் பறந்த விமானத்தில் சண்டையிட்ட விமானப் பணிப்பெண்கள்
அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து மின்னேபொலிஸ் பிராந்தியத்துக்கு பயணத்தை மேற்கொண்ட டெல்ற்றா எயார்லைன்ஸ் விமானமொன்றில் இரு விமானப் பணிப்பெண்கள் ஒருவருடன் ஒருவர் சண்டையில் ஈடுபட்டதால் அந்த விமானம் திசைமாற்றப்பட்டு அவசரகால நிலைமையின் கீழ் சால்ட் லேக் நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது. மேற்படி விமானம் 37,000 அடி உயரத்தில் நடுவானில் பறந்த வேளை அந்த விமானத்திலிருந்த இரு பணிப்பெண்களிடையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த இரு பணிப்பெண்களும் ஒருவருக்கொருவர் கைமுஷ்டியால் குத்தி கட்டிப் பிடித்து சண்டையிட ஆரம்பித்துள்ளனர்….
மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 145 பேர் தாயகத்திற்கு வருகை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று பல்வேறு இன்னல்களை அனுபவித்த சிலர் இன்று (3) நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு வருவோரில் 145 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர்களில் 100 பெண்கள் அடங்குகின்றனர். அத்துடன், டுபாய் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து மேலும் 30 பேர் வருகை தந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவிலிருந்து 15 பேரும் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள்…
