News
எம்பிலிபிட்டிய குடும்பஸ்தர் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு
எம்பிலிப்பிட்டியவில், 29 வயதான குடும்பஸ்தரொருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகள் நேற்று புதன்கிழமையுடன் (17) முடிவடைந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு, நாளை வெள்ளிக்கிழமை (19) வழங்கப்படும் என எம்பிலிப்பிட்டிய நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, நேற்று அறிவித்தார். அத்துடன், இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சமில் தர்மரத்னவை, எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் போது,…
இவ்வருடம் தேர்தல் இல்லை
தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்த முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று, இராஜாங்க நிதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய மீள்திருத்தப் பணிகள், இதுவரை முற்றுப்பெறாதிருப்பதால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதென்பது சந்தேகத்துக்குரியதாகியுள்ளது என, கொழும்பில் நேற்று புதன்கிழமை (17) நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றின் போது, இராஜாங்க அமைச்சர் கூறினார். இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்காக, ஒழுக்கமின்றி நடந்துகொண்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராகக் கடுமையான…
ஜனாதிபதி ஆணைக்குழுவில் மஹிந்த ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார். ஐ.டி.என் தொலைக்காட்சியில் தேர்தல் காலத்தில் ஒலி,ஒளிபரப்பப்பட்ட விளம்பரங்களுக்கான பல மில்லியன் ரூபாய் கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் விசாரணைக்கு முகங்கொடுப்பதற்காகவே அவர் அங்கு பிரசன்னமாகியுள்ளார். ஏற்கனவே, பல தடவைகள் மஹிந்த ராஜபக்ஸ, இந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். எனினும், குறித்த கொடுப்பனவுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் அதனை தேர்தலின்போது பொறுப்பாக இருந்த பிரச்சாரக்குழுவே பொறுப்பேற்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை…
மக்கள் டிரம்ப்பை அதிபராக தேர்ந்தெடுக்க மாட்டார்கள்: ஒபாமா
அமெரிக்காவில் ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் நிறைவு அடைய உள்ள நிலையில், அங்கு நவம்பர் மாதம் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிட டோனால்ட் டிரம்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் அடுத்த அதிபராகும் வாய்ப்பு டோனால்டு டிரம்ப்புக்கு இல்லை என்று அதிபர் ஒபாமா கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் “டோனால்டு டிரம்ப் அடுத்த அமெரிக்க அதிபராக வாய்ப்பில்லை என்று தொடர்ந்து நான் நம்புகிறேன்….
ஜெர்மன் அதிபருடனான சந்திப்பு வெற்றி!– ஜனாதிபதி
ஜெர்மன் அதிபர் அன்ஜலா மோர்கலுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜெர்மன் அரசாங்கம் வழங்கவுள்ள உதவிகளுக்காக நன்றி பாராட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டு வரும் முதலீட்டு வாய்ப்புக்களில் பயன்பெற்றுக் கொள்ளமாறு ஜெர்மன் முதலீட்டாளர்களிடம் ஜனாதிபதி கோரியுள்ளார். ஜெர்மனியில் 150 வருட கால பௌத்த வரலாறு காணப்படுகின்றது. இலங்கையில் நிலவி வரும் சிறுநீரக நோய்களுக்கு உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ஜெர்மன் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். இலங்கையில் அனைத்து இன சமூகங்களும் சமாதானமாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கியுள்ளது. எனவே,…
மஹிந்த அரசியல் அநாதையாவார்
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவ ட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தேர்ந்தெடுத்துள்ள அரசியல் பாதை தவறானது. அவர் சுதந்திரகட்சியில் உள்ள சிரேஷ்டத்துவத்தை இழந்து அரசியல் அநாதையாகப் போவதையிட்டு வருந்துகின்றேன் என்று தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்தவையும் ஷிராந்தியையும் கைது செய்ய வேண்டும்
சி.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனம் அரசுடைமையாக்கப்பட வேண்டும். யோஷிதவை கைதுசெய்வதற்கு முன் அவருக்கு வழி காட்டிய மஹிந்த ராஜபக்ஷ வையும் ஷிராந்தியையுமே கைதுசெய்திருக்க வேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணி யின் தலைவரும் மத்திய மாகாணசபை உறு ப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். கொழும்பில் மீண்டும் போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் பாதாள உலகக் கோஷ்டியினர் தலைதூக்க பொலிஸார் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். அதிகாரத்ததை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து…
கூகுள் பலூன் விழுந்து நொறுங்கியது
“project loon” என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் கூகுள் பலூனின் முதல் சோதனை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பரிசோதனையில் பயன்படுத்தப்பட இருக்கும் மூன்று பலூன்களில் ஒன்று இலங்கையின் தெற்குப் பகுதியினூடாக திங்கட்கிழமை காலை இலங்கை வான்வெளியில் பிரவேசித்தது அனைவரும் அறிந்ததே. விமானங்கள் பறப்பதை விட இரண்டு மடங்கு உயரமான வெற்றுக்கண்ணுக்கு புலப்படாத ஆகாயத்திலேயே நிலை கொண்டிருக்கும் இந்த பலூன் நேற்று வான் வெளியில் பழுதடைந்து மலையகத்தின் புஸல்லாவ பகுதியில் விழுந்துள்ளதாகவும், ஏராளமான மக்கள் அதனை காண…
ஜெர்மனியில் இருந்து ஒரு வயது குழந்தை வெளியேற உத்தரவு
அல்பேனியா நாட்டை சேர்ந்தவர் எடுயர்ட். இவரது மனைவி பிரான்கா. இவர்கள் கடந்த 2014–ம் ஆண்டில் ஜெர்மனியில் தஞ்சம் அடைந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ரைன்–வெஸ்ட்பாலியா என்ற மகாணத்தில் உள்ள சயுயர்லேண்ட் என்ற நகரில் தங்கியுள்ளனர். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பிரான்காவுக்கு அங்கு வந்து தங்கிய 11 நாட்களுக்கு பிறகு எடேனா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது அக்குழந்தைக்கு 1½ வயதாகிறது. இந்த நிலையில், அக்குழந்தை ஒருவார காலத்திற்குள் ஜெர்மனியில் இருந்து வெளியேறி அதன்…
கடலில் நீராடச் சென்ற மாணவனைக் காணவில்லை
– ரீ.கே.றஹ்மத்துல்லா – அம்பாறை, அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் இன்று புதன்கிழமை (17) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். அக்கரைப்பற்று, 13ஆம் பிரிவைச் சேர்ந்த அக்கரைப்பற்று அல்-பாத்திமியா வித்தியாலத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் ஹில்மி முஜீப் (வயது 16) என்ற மாணவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். இம்முறை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை எழுதவிருந்த மேற்படி மாணவன், தற்போது பாடசாலை பிரதேச விளையாட்டுப் போட்டி நடைபெற்றுவருவதனால் அப்பயிற்சியை…
இரு பல்கலை மாணவர்கள் மரணம் – விசாரணை சீ.ஐ.டி வசம்
கொழும்பு – கண்டி வீதியின், இபுல்கொட பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கக்கோனால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 2012ம் ஆண்டு செப்டம்பர் 27ம் திகதி கொழும்பு – கண்டி வீதியின் இபுல்கோட பிரதேசத்தில் மோட்டார்…
மைத்திரியை ஐ.தே.க பாதுகாக்கும்
– எம்.எம் மின்ஹாஜ் – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் முட்டாள்கள் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவர்களினால் பாதுகாக்க முடியாவிடின் ஐக்கிய தேசியக் கட்சியினரான நாம் அவரை பாதுாப்போம் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை எஸ்.டப்ளியூ.ஆர் .டீ. பண்டாரநாயக்க ஆரம்பித்தது ஒரு குடும்பத்தினருக்கு சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல. மைத்திரிபால சிறிசேன விவசாயி என்பதனால் அவரின் தலைமையின் கீழ் செயற்பட…
