News
இலங்கை வீரர்கள் பல பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர் – தயாசிறி!
தெற்காசியா விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்ட இலங்கை வீரர்களுக்கு பல அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மை என விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் .இந்தியாவில் நடைபெற்று முடிவடைந்திருக்கும் நிலையில் அங்கு போட்டிகளில் கலந்துக் கொள்ளச் சென்ற இலங்கையின் விளையாட்டு வீர,வீராங்கனைகள் பல்வேறு பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதற்கான பொறுப்பை இந்தியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்கவேண்டும் என அமைச்சர் தயாசிறி தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய…
மாங்குளத்தில் விபத்து : அறுவர் படுகாயம்
முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் அறுவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வான் ஒன்று ஏ-09 வீதி மாங்குளம் பகுதியில் இன்று (18) அதிகாலை வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த அறுவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வீதியில் கட்டாக்காலியாக நடமாடிக்கொண்டிருந்த எருமைமாட்டுடன் வான் மோதுண்டு விபத்துக்குள்ளாகாகியிருப்பதாக மாங்குளம் பொலிஸார் குறிப்பிட்டனர்….
சிகிரியா வருமானம் அதிகரிப்பு
சிகிரியாவைப் பார்வையிட வரும் உல்லாசப் பிரயாணிகளின் வருகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதனால் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் ஆறரைக் கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய கலாசார நிலையத்துக்கு சொந்தமான சிகிரிய திட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதத்தில் சிகிரியாவுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 150,000 இனைத் தாண்டியுள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 34 சதவீத அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஜேர்மன் அதிபர் விரைவில் இலங்கைக்கு விஜயம்
ஜேர்மன் அதிபர் ஏஞ்ஜலா மெர்கல் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வை அழைப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜேர்மன் அதிபருடனான சந்திப்பின்போது விடுத்துள்ளார். அதேவேளை, இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை மற்றும் ஐரோப்பா சந்தைக்கான இலங்கைக்கான மீன் ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பிலான விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்துவதாக ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.
விஜயவின் நினைவு நிகழ்வில் மஹிந்த பங்கேற்றமை வியப்பை அளிக்கிறது!
ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரான விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வில், மகிந்த ராஜபக்ச பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விஜயகுமாரதுங்கவின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்காத ஒரே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே. இவ்வாறான ஓர் பின்னணியில் விஜயகுமாரதுங்கவின் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்று உரையாற்றியமை ஆச்சரியமளிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,மகிந்தவிற்கும் தமது கணவருக்கும் இடையில் ஆரம்பம் முதலே முரண்பாடுகள் காணப்பட்டதாகவும் இறுதிக் கிரியைகளில் கூட பங்கேற்காதவர் நினைவு நிகழ்வில் பங்கேற்றமை வியப்பை அளிப்பதாக சந்திரிகா…
கொழும்பில் 900 ஏக்கரில் 68.000 சட்டவிரோத குடியிருப்புக்கள்
– ஷம்ஸ் பாஹிம் – கொழும்பு மாவட்டத்தில் 900 ஏக்கர் நிலப்பரப்பில் 68 ஆயிரம் குடும்பங்கள் சட்டவிரோதமாக குடியிருப்பதாக அடையாளங்காணப்பட்டுள்ளது. இவர்களை வேறு இடங்களில் குடியேற்ற வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டிருப்பதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பு தொட்டலங்க பேர்கியூசன் தோட்டத்திலுள்ளவர்களுக்கு ஜனவரி 12 ஆம் திகதி வேறு இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன.எனினும் அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு ஜனவரி 31 வரை காலக்ெகடு விதிக்கப்பட்டிருந்த நிலையிலே சிலர் குழப்பம் ஏற்படுத்தும்…
மன்னார் மாவட்டத்தில் நவீன முறையிலான கைத்தொழில் வலயம்
மன்னார் மாவட்டத்தில் கைத்தொழில் வலயம் ஒன்றை உருவாக்கவுள்ளோம். இது தொடர்பில் மன்னார் மாவட்ட கல்விமான்களை உள்ளடக்கிய ஆலோசனை சபை ஒன்றை அமைத்துத் திட்டங்களை தயாரித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் அடம்பன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற விஞ்ஞான ஆய்வுகூடத் திறப்புவிழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது யுத்தம் எமது மக்களின் வாழ்வை மிக மோசமாக சீரழித்திருக்கிறது. இதனால் நாம் வாழ்விடம் இழந்தோம். உடமைகளை இழந்தோம். தொழில்களை இழந்தோம். உறவுகளை இழந்தோம். யுத்தம் முடிவடைந்து…
வெலே சுதாவுக்கு பிணை
கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கறுப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, இவருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கிலிருந்தே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இவரை 5,000 ரூபாய் காசுப் பிணையிலும் 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையிலும் செல்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நிதிமன்ற நீதவான் நிஷாந்த…
சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை
சிரியா மீது சவூதி அரேபியா தனது துருப்புகளை நகர்த்தியமைக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் (16) பிரஸெல்ஸின் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹம்மட் ஜாவட் ஷெரீப், இது சர்வதேச சட்டத்தை மீறும் ஒரு செயலாகும் என்றும் குற்றஞ்சுமத்தியுள்ளார். இதனிடையே சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு ஆதரவாக படைகள் செயற்பட்டு வருகின்ற நிலையில், இறைமையுள்ள நாட்டின் மீது அனுமதி இல்லாமல் படையை…
10 ரூபா படி நிதி உதவி கோரும் தேரர்
தான் யானை பிடிக்கவில்லை என்றும், யானை பிடிப்பதற்காக காட்டிற்கு செல்லவில்லை என்றும், யானை விற்பனையில் ஈடுபடவில்லை என்றும், அதற்காக போலி உறுதிகள் தயாரிக்கவில்லை என்றும் உடுவே தம்மாலோக தேரர் குறிப்பிட்டுள்ளார். தன் மீது இவ்வாறான குற்றச்சாட்டு இருப்பதை தான் அறிந்து கொண்டது இணையத்தளங்கள் மற்றும் பத்திரிகை செய்திகளினூடாகவே என்று நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறினார். அதன்படி இரகசியப் பொலிஸார் தன்னிடம் இரண்டு தடவைகள் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தனக்கு தெரிந்த அனைத்தையும் அதன்போது…
ஜேர்மனிலுள்ள இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
யுத்த காலத்தில் ஜேர்மனில் தஞ்சமடைந்த இலங்கையர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக் கூடிய ஜனநாயக நாடாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மன் சான்சலர் அஞ்சலா மெர்கலுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களை சந்தித்த போதே, அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். மேலும், ஜேர்மனால் இலங்கைக்கு வழங்கப்படும் அவிவிருத்திக்கான உதவிகள் தொடர்பில் தனது நன்றிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில்…
பெருந்தொகை மதுபான போத்தல்களுடன் மூவர் கைது
நாரஹேன்பிட பகுதியில் இருந்து பெருந்தொகையான மதுபான போத்தல்களை கலால் சுற்றிவளைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போது, கைப்பற்றியுள்ளனர். இதன்படி 60 இலட்சம் ரூபா பெறுமதியான 800 மதுபான போத்தல்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) மாலை, குறித்த பகுதியில் இருந்த வீடொன்று மற்றும் அதன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் மதுபான போத்தல்கள் இருந்துள்ளன. மேலும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த…
