News
சிறைச்சாலையில் ஞானசாரர் – மஹிந்த சந்திப்பு
சிறை வைக்கப்பட்டுள்ள ஞானசாரருக்கும், மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையே இன்று (17) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஸவை பார்வையிடச் சென்ற வேளையிலேயே மகிந்த ராஜபக்ஸ இவ்வாறு ஞானசாரரையும் சந்தித்து சுகம் விசாரித்துள்ளார்.
எம்பிலிபிடிய சம்பவம் : ஏ.எஸ்.பி தொடர்ந்தும் விளக்கமறியலில்
எம்பிலிப்பிட்டிய முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டபிள்யு.டி.சி. தர்மரத்ன மார்ச் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எம்பிலிபிட்டிய மேலதிக நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ, இன்று உத்தரவிட்டார். எம்பிலிப்பிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டார். குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அநுராதபுரத்தை மீண்டும் தலைநகராக்க வேண்டும்
அநுராதபுரத்தை மீண்டும் இலங்கையின் தலைநகரமாக்க வேண்டும் என அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழு இன்று காலை அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் கூடிய பொதுமக்களின் கருத்துக்களை பெற்று வருகிறது. குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க உறுப்பினர்களான சுனில் ஜயரத்ன, தெனிய ஹூருல்லே, நதீகா தமயந்தி ஆகியோர் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றனர். அரசியலமைப்பு மறுசீரமைப்பு குழுவின் முதலில் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைத்த ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஒன்றின் உறுப்பினர் பியதாச பத்திரண, அரச…
லசந்தவின் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். 40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய…
யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனு எதிர்வரும் 29ம் திகதி பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் இன்று (17) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகத்தின் மிருக வைத்திய பீடம் கடந்த 20 தினங்களுக்கு மேல் இயங்காத நிலையில் இருப்பதாகவும் அதற்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மிருக வைத்திய பிரிவு மாணவர்கள் ‘தெய்யொத் தன்னனே’ (கடவுளுக்கும் தெரியாது) என்ற நாடகத்தை பல்கலைக்கழகத்தின் அனுமதியின்றி திறந்த வெளிநாடக அரங்கில் அரங்கேற்றியதும் அதன் மூலம் பெறப்பட்ட பணம் தொடர்பாகவும் ஏற்பட்ட சர்ச்சையே இவ்வாறு மிருக வைத்திய பீடம் ஸ்தம்பிதம்அடையக் காரணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது….
தொலைபேசிக் கட்டணங்கள், திடீரென உயர்வு
சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு…
மஹிந்த உயர்நீதிமன்றத்துக்கு வருகை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்தவின் இரண்டாம் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம் மற்றும் பணச்சலவை குற்றச்சாட்டுகளின் பேரில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் யோஷித்தவின் விளக்கமறியல் காலத்தை தொடர்ந்தும் நீடித்துள்ளது. இந்நிலையில் யோஷித்த ராஜபக்ஷவுக்கு பிணை வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் பிணைமனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள…
பொலிஸ் வேடத்தில் பணம் கொள்ளை!
இருவேறு சம்பவங்களில் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் என்று தங்களை கூறிக்கொண்டு வந்த இருவர், மீன் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை கொஸ்கமவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை, ரத்கமவில் உள்ள மதுபானசாலையொன்றுக்கு நேற்று(16) இரவு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவர், மதுபான சாலையின் முகாமையாளருக்கு கத்தியை காண்பித்து அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் அவரிடமிருந்து பணத்தை…
மஹிந்தவுக்கு மனிதாபிமானமென்றால் என்னவென்றே தெரியாது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது. எமது அரசியல் பயணத்தின் இடைப்பட்ட காலப்பகுதியில் சர்வாதிகார ஆட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்ட போதும் மக்கள் அதன் நீண்டகால பயணத்திற்கு அனுமதியினை வழங்கவில்லை என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசகருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்தார். 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட நல்லாட்சியின் பிரதிபலனையே இன்று மூவின மக்களும் பயன்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்hடர். பிரபல அரசியல் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கணவருமான படுகொலை…
இலங்கை வரவுள்ள நியூஸிலாந்துப் பிரதமர்
நியூஸிலாந்துப் பிரதமர் ஜோன் கீ இரு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை வரும் ஜோன் கீ, ஜனாதிபதி, பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதோடு, உள்ளூரிலுள்ள வர்த்தகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.
தொட்டலங்கவில் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது
தொட்டலங்க பிரதேச மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் களைக்கப்பட்டதையடுத்து, தொட்டலங்கவிலுள்ள ஜப்பான் – இலங்கை நட்புறவு பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. தொட்டலங்க பிரதேசத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப் பிரதேச மக்களால் நேற்று (16) மாலை முதல் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது ஜப்பான் – இலங்கை நட்புறவு பாலத்தை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் நேற்று மாலை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், இன்று காலையும் பாரிய வாகன…
