News
பிள்ளையான் உட்பட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டது!
– மட்டு.சோபா – ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதி மன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்,…
மஹிந்தவின் விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்பு!
சுயாதீன தொலைக்காட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் மட்டுமே இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு, சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக எந்தவொரு அடிப்படையிலும் அரச தலைவர்களின் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் இலவசமாக ஒளிபரப்புச் செய்யப்படவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக கடமையாற்றிய…
வாக்குறுதிகளை அமுல்படுத்துங்கள் – மன்னிப்புச் சபை
இலங்கை அளித்த வாக்குறுதிகளை அமுல்படுத்த வேண்டுமென அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. பொறுப்பு கூறுதல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் செயற்படுத்தப்பட வேண்டியத அவசியமானது என தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. எனினும், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இதுவரையில் சொற்பளவிலான நடவடிக்கைகளே இலங்கையில் எடுக்கப்பட்டுள்ளன….
மேலும் இரு சுங்க அதிகாரிகள் கைது
இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும் 12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்…
“நிறைவேற்று அதிகாரங்களை பிரதமருக்கு வழங்க முடியாது”
புதிய அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமருக்கு நிறைவேற்று அதிகாரம் செல் வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு இச்சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் கிடைக்காதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீதான விவாதத்தில் நேற்று புதன்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா? தற்போது காணப்படும் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா? என்பது தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றிணைந்த…
மஹிந்த ராஜபக்ஷ யுக புருஷர்
மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டில் யுத்தத்தை முடித்து வைத்த யுக புருஷராவார். அவரை சிறையில் அடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தவறான செயற்பாடாகும் என நேற்று சபையில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில் ஐ.ம.சு.மு. பங்காளிக் கட்சித் தலைவர்களான தினேஷ், விமல், வாசுதேவ ஆகியோரின் ஆதரவு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பு சபை தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜோன் செனவிரட்ன இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்…
தனித்து செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாகாணசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களும் எக்காரணத்தை கொண்டும் தனித்துவமாகவோ அல்லது சுயாதீனமாகவோ செயற்பட முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அதையும் மீறி தனித்துவமாக செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கட்சியின் மத்தியகுழு தீர்மானம் எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (24) நடைபெற்ற…
தலதா மாளிகையின் முன்னால் மோதல்
கண்டி – தலதா மாளிகையின் முன்னால் உள்ள வீதியை திறக்குமாறு கோரி இரு தரப்பினருக்கு இடையில் மோதல் இடம் பெற்றுள்ளது. வீதியை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவிற்கும் மற்றும் வீதியை மூடி வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவுக்கும் இடையிலேயே குறித்த மோதல் இடம் பெற்றுள்ளது.
எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு
எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.
நிஷாந்தவின் விண்ணப்பம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது
முன்னாள் சி.எஸ்.என். பணிப்பாளர் நிஷாந்த ரணதுங்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திருத்திய பிணை விண்ணப்பத்தை மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என் ரணவக்க விசாரணைக்காக இன்று (19) எடுத்துக்கொண்டார். திருத்தப்பட்ட பிணை மனுவில் ரணதுங்கவின் வழக்கறிஞர் சளினிவட்டுவஹெட்டடி, சட்டமா அதிபரையும் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் இருவரையும் பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார். பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வருமாறு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் புகுந்தது அரச பேரூந்து (படங்கள்)
– பா.திருஞானம் – பூண்டுலோயா துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரச பேரூந்து ஒன்று இன்று (19) காலை சேவையை ஆரபிக்கும் போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதியதில் பேரூந்தும் வீடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹட்டன் டிப்போவிற்கு சொந்தமான இந்த பேரூந்து இரவு வேளையில் இப்பிரதேசத்திலேயே நிறுத்தி வைக்கப்படும். காலையில் பூண்டுலோயா நகரத்திலிருந்து ஹட்டனுக்கு தனது சேவையை தொடர்ந்து வந்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே…
டொனால்ட் டிரம்ப் கிறிஸ்துவரே அல்ல: போப் பிரான்சிஸ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஆதரவு திரட்டிவரும் டொனால்ட் டிரம்ப் ஒரு கிறிஸ்துவரே அல்ல என உலகம் முழுவதும் வாழும் 120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவான போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையில் சிக்கினார் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-மெக்சிகோ இடையில் மதில் சுவர் கட்டவேண்டும் எனவும் யோசனை தெரிவித்தார். அந்த கருத்திற்காக அமெரிக்காவில் மட்டும் அல்ல உலக முழுவதும் அவருக்கு எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில்…
