News
ஜனாதிபதி எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்கள் வைத்துள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேறு எவருடனும் ஒப்பந்தங்கள் எதுவும் வைத்திருக்கவில்லை, அவர் எப்போதும் பொதுமக்களுடனேயே ஒப்பந்தங்களை வைத்துள்ளார் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதியிடம் எந்தவிதமான அரசியல் ஒப்பந்தங்களும் இல்லை. அவர் ஜனவரி 08 ஆம் திகதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் முகமாகவே செயற்பட்டு…
வேறு ஒருவரின் பெயரில் சிம் இணைப்புகளை பயன்படுத்த தடை!
– ஆர்.கிறிஷ்ணகாந் – இலங்கையில் பாவனையிலுள்ள சகல தொலைபேசி இணைப்புகளின் உரிமை யாளர்களை பதிவு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து தொலைபேசி சேவை வழங்குநர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேறு ஒருவரின் பெயரில் சிம் இணைப்புகளை பெற்றுக் கொள்வது இத்திட்டத்தினூடாக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையிலுள்ள சிம் உரிமையாளர்கள் தொடர்பில் நிலவும் சிக்கல்கள் வெகுவிரைவில் தீர்ப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு…
குழந்தைகளுக்கான புதிய தேடல் பகுதியை உருவாக்கியுள்ள கூகுள்
அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. www.kiddle.co என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி…
இலங்கை தலைவர்கள், பிடல் கெஸ்ரோவின் வழியை பின்பற்றுகின்றனர்- அமைச்சர் சம்பிக்க
ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கியூபாவின் தலைவர் பிடல் கெஸ்ரோ பின்பற்றும் வெளிநாட்டு கொள்கைகளையே பின்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருநகர அபிவிருத்தித்துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்தக் கருத்தை கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே கெஸ்ட்ரோ, அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவை. ஏதிர்வரும் ஜூன் மாதம் தமது நாட்;டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார் என்று ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை கொண்டிருந்த ஈரான், ஆர்ஜன்டீனா மற்றும் பிரேசில்…
ஞானசார தேரர், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்
பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உயர்நீதிமன்றத்தில் நேற்று (25) அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நேற்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தம்மை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழுமையான நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை இலங்கையில் ஷரியா வங்கி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று சந்திப்பு ஒன்றை…
திஸ்ஸவிற்கு எதிரான விசாரணை சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த தகவலை நாடாளுமன்றில் நேற்று (25) தெரிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலி ஆவணம் தயாரித்ததாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போலி ஆவணம் தயாரிப்பு…
தேர்தலுக்கு அரசாங்கம் பயப்படுகிறதாம்- டலஸ் கண்டுபிடிப்பு
உள்ளுராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் தள்ளிப் போட்டு வருவதற்குக் காரணம் தேர்தலை முகம் கொடுக்கவிருக்கும் பயத்தினாலேயே ஆகும் என கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். தொகுதி நிர்ணயம் செய்வதற்கு எடுக்கும் தாமதமே இதற்குக் காரணம் என அரசாங்கம் சாட்டுப் போக்குத் தெரிவித்து வருகின்றது. அப்படியானால், அரசாங்கம் ஏன் தொகுதி நிர்ணயம் செய்வதற்கு முன்னர் உள்ளுராட்சி சபைகளைக் கலைத்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
மாணவி ஹரிஷ்ணவியின் படுகொலை அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது
படுகொலை செய்யப்பட்டு வவுனியா, உக்குளாங்குளம், 3 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 14 வயது மாணவியின் கொலை தொடர்பில் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் அயல் வீட்டில் வசித்து வந்தவரான 35 வயதுடைய பாலசிங்கம் ஜனர்தன் என்ற குடும்பஸ்தரே விசாரணைகளுக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர உறுதிப்படுத்தினார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை டி.என்.ஏ.பரிசோதனைக்கு உட்படுத்தி…
மின் தடைக்கு, மின்னலே காரணம்
பொல்பிட்டியவிலிருந்து கொலனாவை வரையிலான அதிவலுகொண்ட பிரதான மின் கட்டமைப்பை மின்னல் தாக்கியதன் காரணமாகவே நாடளாவிய ரீதியில் மின்சார தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று (26) பிற்பகல் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால் பாவனையாளர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். இயல்வு வாழ்க்கையில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டது. லக்ஷபான நீர் மின்னிலையத்திலிருந்து பொல்பிட்டிய உப மின்நிலையத்தினூடாக கொழும்புக்கு மின்வழங்கும் 33,000 வோல்ட் மின் தொகுதியில் மின்னல் தாக்கியதன் காரணமாகவே இம்மின்தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை…
கடுவலையில் ஐஸ் மழை!
– ஆர்.கிறிஷ்ணகாந் – கடுவலை பிரதேசத்தில் நேற்று (25) பிற்பகல் ஐஸ் மழை பெய்துள்ளது. நேற்று பிற்பகல் வேளையில் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் கடும் மழையுடனான காலநிலை நிலவியிருந்தது. பிற்பகல் வேளை இருள் சூழ்ந்தவொரு வானத்தினை அவதானிக்க கூடியதாக இருந்தது. இதனால் கொழும்பு நகர் பிரதேசம் முழுவதிலும் சற்று இருள் சூழ்ந்திருந்தது. பின்னர் கடும் காற்றுடன் ஆரம்பித்த மழையுடன் கடுவலை பிரதேசத்தில் ஐஸ் மழை பொழிந்ததனை அவதானிக்க கூடியதாக இருந்துள்ளது. மேலும் கொழும்பின் ஏனைய…
நாடு பூராகவும் மின்சார தடை
(25) சற்று முன்னிலிருந்து நாடு பூராகவும் மின்சாரம் தடைபெற்றுள்ளது. இதற்கான காரணம் தெரியவரவில்லை.
பாதையை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தேரர்கள்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் செல்லும் பாதையை (kandy ஏ-26) திறந்து விடுவதற்கு தாம் பூரண எதிர்ப்பை தெரிவிப்பதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரர் கலகம ஸ்ரீ அத்தடஸ்சி தேரர் தெரிவித்தார். மேற்படி பாதை திறப்பு தொடர்பாக அண்மையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், இது விடயமாக அஸ்கிரிய பீடத்தின் நிர்வாக சபையும் பௌத்த மதகுருமார் சங்கமும் (சங்க சபா) தமது எதிர்பைத் தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார். மேற்படி பாதையை…
