News
குவான்டனாமோ சிறையை மூட ஒபாமா திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, குவான்டனாமோ தடுப்பு சிறையை மூடுவதற்கான நீண்ட கால திட்டத்தை வெளியிட்டுள்ளார். குவான்டனாமோ சிறை, அமெரிக்காவின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துவதாக ஒபாமா கூறியுள்ளார். இது கிளர்ச்சியாளர்கள் உருவாவதற்கான இடமாகவும் அது அமைந்துவிட்டதென சுட்டிக்காட்டிய அவர், அந்தப் பிரச்சினைகளை அடுத்த ஜனாதிபதியிடம் ஒப்படைக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். குவான்டனாமோ தடுப்புச் சிறையில் உள்ள கைதிகளை மற்ற இடங்களுக்கு மாற்றிவிடுவதற்கான திட்டத்தை ஒபாமா வெள்ளை மாளிகையில் வெளியிட்டுள்ளார். அந்த குவான்டனாமோ தடுப்பு சிறையை மூட கடந்த 8…
அவன்கார்ட் கணக்காய்வாளரை குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவு
அவன்கார்ட் நிறுவனத்தின் கணக்காய்வாளரை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு காலி பிரதான நீதவான் நிலுபுலி லங்காபுர இன்று (25) உத்தரவிட்டுள்ளார். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த மிதக்கும் ஆயுத களஞ்சியம் சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்த போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனையடுத்து வழக்கு விசாரணைகளை மார்ச் முதலாம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவியின் கொலைக்கு நீதிகோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹரிஷ்ணவியின் கொலைக்கு நீதிகோரியும், குற்றவாளிகள் உடன் கைதுசெய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு மாவட்ட மகளிர் அமைப்புக்களினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். நீதித்துறையே! காமுகர்களை கண்டுபிடி, சட்டத்தின் முன்நிறுத்து, மரண தண்டனை வழங்கு உள்ளிட்ட வாசகங்களுடனான பதாதைகளை ஏந்தியவாறு…
மனித எச்சங்கள் கண்டெடுப்பு
ஜாஎல – ஏகல பிரதேசத்தின் குப்பை கொட்டும் இடத்தில் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் சில நேற்று (24) கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஏகல பிரதேசத்ததில் குப்பை கொட்டும் இடத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் அதிக துர்நாற்றம் வீசி வந்துள்ளது. இதனயடுத்து குறித்த பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள பெண் ஒருவரால் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து தமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த இடத்தில் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர் . நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற…
ஈரான் – இலங்கை பேச்சுவார்த்தை வெற்றி
ஈரானுடன் மீண்டும் வர்த்தகத் தொடர்பை ஆரம்பிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, விரைவில் மிகவும் குறைந்த செலவில் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் ஈரானின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் நேற்று மாலை ரவி கருணாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
தாஜூடின் கொலை: சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு
ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாஜூடினின் மரணமானது கொலையென உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான சந்தேகநபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை வெளிநாடு ஒன்று அனுப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து…
குற்றங்களை தடுக்க சிம் அட்டைகளை பதிவு செய்ய திட்டம்
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தம் நோக்கில் இலங்கையில் பாவனையில் உள்ள அனைத்து கைத்தொலைபேசிகளினதும் சிம் அட்டைகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அனைத்து தொலைபேசி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம் அட்டையினைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகளை தடுப்பதே இதன் நோக்கமென இந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. அத்துடன் ஏனைய நபர்களின் பெயர்களில் சிம் அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டு அது பல்வேறு…
விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை
கல்முனைப் பிரதேசத்தில் மஞ்சள் கடவைகளில் வாகனங்களை நிறுத்தி பயணிகளுக்கு வழிவிடாது செல்லும் சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை, கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை, பெரிய நீலாவணை ஆகிய பிரதேசங்களிலுள்ள பிரதான வீதிகளில் பாதசாரிக் கடவைகள் ஊடாக பயணிகள் கடக்க முற்படும்போது வாகனச் சாரதிகள் வேகத்தை குறைத்து வாகனங்களை நிறுத்தி வழிவிடாது செல்கின்றனர். இதனால் மஞ்சள் கடவைகளில் பாதையைக் கடக்க…
இலங்கையில் 22,254 தமிழ் பெளத்தர்கள்
இலங்கையில் 22254 தமிழ் பெளத்தர்கள் உள்ளனர். இவர்களில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 470 தமிழ் பெளத்தர்களும் அடங்குகின்றனர் என புத்தசாசன அமைச்சு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வாய்மூல கேள்விக்கான விடையளிக்கும் நேரத்தின்போது ஐ.தே.கட்சி.எம்.பி. புத்திக பத்திரணவின் கேள்விக்கு சமர்ப்பிக்கப்பட்ட பதிலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தசாசன அமைச்சின் பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குடிசன மதிப்பீட்டுத் திணைக்கத்தினால் 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய 22254 தமிழ் பெளத்தர்கள் உள்ளனர். மேற்கூறப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமைய வடக்கு…
யோஷிதவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கான விளக்கமறியலும் எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையிலும் கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சர்வதேச மன்னிப்பு சபை கண்டனம்
சர்வதேச பொதுமன்னிப்பு சபை ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளில் காணப்படும் சர்வதேச விதிமுறை மீறல்கள் குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டு(2015-16) அந்த சபை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா குறித்து கூறி இருப்பதாவது:- பல்வேறு துறை கலைஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் தங்களுக்கு அளித்த தேசிய விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்து இருக்கின்றனர். இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்து வருவதை இதற்கு காரணமாக இவர்கள் குறிப்பிட்டு உள்ளனர் சமூக தொண்டு நிறுவனங்கள் மீதான கொள்கைகளையும்,…
வவுனியா மாணவி படுகொலை விசாரணைக்கு சிறப்புக் குழுக்கள்
– எம்.எப்.எம்.பஸீர் – வவுனியா மாணவி ஹரிஸ்ணவி வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப் பதற்கு சிறப்புக் குழுக்கள் நியமிக் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்துள்ளனர். விசாரணைகள் தீவிரப்படுத்தப்ப்ட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சfர் ருவன் குணசேகர தெரிவித்தார். வவுனியா பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பீர்வு பொறுப்பதிகாரியின் கீழ் இது தொடர்பிலான விசாரணைகளுக்காக சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதும் நேற்று (24) மாலை வரை சந்தேக நபர் தொடர்பிலோ…
