News
வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கணிப்புக்கு அனுமதி
– எஸ்.ரவிசான் – தேசிய அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்புக்கு வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் கருத்துக்கள் உட்பட யோசனைகளை பெறுவதற்கு பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான மக்கள் கருத்தறியும் குழு தெரிவித்தது. வெளிநாட்டு வாழ் இலங்கையரின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை காணொளி அழைப்பு மூலமாக பெற்றுகொள்வதற்கு போதுமான வசதி எம்மிடம் காணப்படாத நிலையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது.
பொதுபல சேனா ஜனாதிபதி, பிரதமருக்கு மகஜர்
அரசாங்கம் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இதன் மூலம் நாட்டில் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதை எதிர்த்தும் பொதுபலசேனா அமைப்பு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜரொன்றினைக் கையளித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொதுபலசேனாவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகேயினால் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையில் சமய ரீதியிலான வங்கி முறையொன்றினை அரசு…
பீஃபா தலைவர் பதவிக்கு ஐவர் போட்டி: இன்று வாக்கெடுப்பு
நிதி மோசடி காரணமாக தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தடைக்குள்ளான செப் பிளட்டருக்குப் பதிலாக சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளனத்திற்கு (ஃபீஃபா) புதிய தலைவர் ஒருவர் இன்று தெரிவு செய்யப்படவுள்ளார். சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள ஹோலென்ஸ்டியன் அரங்கில் நடைபெறவுள்ள ஃபீஃபாவின் அதிவிசேட பொதுக்கூட்டத்தின் போது இத் தேர்தல் நடைபெறவுள்ளது. செப் பிளட்டருக்கு எதிராக நிதி மோசடி தொடர்பான விசாரணைகள் ஆரம்பமானதை அடுத்து ஃபீஃபா செயற்பாடுகளில் பங்குகொள்ளமுடியாதவாறு அவருக்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் எட்டு வருடத்தடை விதிக்கப்பட்டது….
மலைய மக்களுக்கு இலங்கையர் என்ற கௌரவம் வழங்க வேண்டும்
மலையக மக்களை இந்திய வம்சாவழியினர் என அடையாளப்படுத்துவதை ஒழித்து இலங்கையர் என்ற கௌரவத்தை வழங்கவேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த விடம் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அவர் இவ்வாறு வலியுறுத்தினார். தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட அதிகாரசபை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும், அதற்காக அதிகளவிலான நிதியை அரசாங்கள் ஒதுக்கீடு செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டார். இலங்கை சுதந்திரம் அடைந்து 67…
மன்னார் கடலில் கலவரம்
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற மீன்பிடிப் படகொன்றின் மீது, மற்றுமொரு படகில் வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டதால், அப்படகில் இருந்த மூன்று மீனவர்களில் ஒருவர், கடலில் குதித்து சுமார் 10 கிலோமீற்றர் தூரம் நீந்தி கரை சேர்ந்துள்ளார். ஏனைய இருவரும் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தின் போது, மேற்படி மீனவர்கள் மூவர் மீதும் கடுமையாக தாக்குதல் நடத்தப்பட்டதாக உயிர் தப்பிய மீனவர், பொலிஸாரிடம் சென்று அறிவித்துள்ளார். இந்நிலையில், மாயமாகியுள்ள மீனவர்கள் இருவரையும் தேடும்…
மஹிந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் காணியில் கடும் தேடுதல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவருக்கு சொந்தமான காணியில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளனர். ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய பகுதியில் உள்ள காணியொன்றே இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. STF பலத்த பாதுகாப்பில் பெகோ இயந்திரம் கொண்டு குறித்த இடமானது தோண்டப்பட்டு சோதிக்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற உத்தரவுடனேயே இத்தேடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்து : ஒருவர் பலி
– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி கபுறடிச்சந்தியில் இன்று (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் முஸ்லிம் மதத்தலைவரான மௌலவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கல்முனை திசையை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கரவண்டியில் வந்த மௌவியை மோதியுள்ளது. படுகாயமடைந்த மௌலவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட யானைகள் மீட்பு
போலி அனுமதிப்பத்திரங்களுடன் வளர்க்கப்பட்ட 39 யானைகளை இதுவரை வன ஜீவராசிகள் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளது. ருவன்வெல்ல – அம்திரிகல பிரதேச வீடொன்றிலிருந்து யானை குட்டி ஒன்றை நேற்றிரவு மீட்டதாக வன ஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மீட்கப்பட்ட யானைக் குட்டியை உடவலவை யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், போலி ஆவணங்களுடன் வளர்க்கப்பட்டு வரும் மேலும் 6 யானைகளை மீட்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டவிரோதமாக பராமறிக்கப்பட்டு வரும் யானைகளை மீட்பதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினரும்,…
உச்ச நீதிமன்ற நீதவானின் அறையில் பாம்பு
கொழும்பு புதுக்கடை உச்ச நீதிமன்ற நீதவானின் உத்தியோகபூர்வ அறையில் நேற்று (25) பாம்பொன்று காணப்பட்டதனால் பதற்றம் நிலவியுள்ளது. நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் அநேகமாக பூர்த்தியாகியிருந்த போதிலும் அலுவலக நடவடிக்ககைள் இடம்பெற்று வந்த போது, திடீரென நீதிமன்றக் கட்டடத்தின் நான்காம் மாடியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. நான்காம் மாடியில் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறைகள் காணப்படுவதனால் அதற்குள் பிரவேசிக்க வெளிநபர்களுக்கு அனுமதியில்லை. நீதவான் ஒருவர் உத்தியோகபூர்வ அறைக்கு…
சிசிலியாவின் தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
கோல்டன் கீ நிதிமுறைகேடு தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவவின் மொத்த தங்க நகைகளை மதிப்பீடு செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த உத்தரவை நேற்று (25) சீஐடிக்கு பிறப்பித்தார். கோல்டன் கீ வழக்கில் வாடிக்கையாளர்களின் 4.3 மில்லியன் சொத்துக்களை முறைகேடு செய்த குற்றச்சாட்டே சிசிலியா மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிசிலியாவின் தங்க நகைகளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் வைப்புக்களை மீளச்செலுத்தமுடியுமா? என்பது குறித்து ஆராயுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், நேற்று நீதிமன்றத்தில்…
2,700 பாடசாலைகளில் இணையத்தள இணைப்புகள் துண்டிப்பு
இணையத்தள கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் நாடெங்கிலுமுள்ள சுமார் 2700 பாடசாலைகளில் இணையத்தளத் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பாடசாலை மாணவர்களுக்கான ‘ஸ்கூல் நெட்’ எனப்படும் சேவையினை கடந்த அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனடிப்படையில் நாடெங்கிலுமுள்ள அரச பாடசாலைகளுக்கு இலவச இணையத்தள வசதியினை வழங்கியிருந்தது. மேலும் இணையத்தள வசதிக்காக ஒவ்வொரு பாடசாலையும் மாதாந்தம் 7 ஆயிரம் ரூபா முதல் 9 ஆயிரம் ரூபா வரை…
உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லை
உள்ளுராட்சி சபைத் தேர்தலை யாருக்கும் பயந்து பிற்போடவில்லையென அமைச்சர் பைஸர் முஸ்தபா குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எல்லை நிர்ணய நடவடிக்கைகள் நிறைவடையாமையினாலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்துவிட்டு பின்னர் காலை பிடித்து இழுப்பது பொருத்தமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…
