News
“மஹிந்த தனிக்கட்சி அமைத்தால் பலவீனமடைவார்”
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் மாற்றுத் தரப்பாக இயங்குவதே மஹிந்த ராஜபக் ஷவின் அரசியலுக்கு பலமாக இருக்கும். தனிக்கட்சி ஆரம்பித்தால் பலவீனமடைவார் எனத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், 1977 இல் இந்திராகாந்தி இவ் வாறே செயற்பட்டு தனது அரசியல் பலத்தை பலப்படுத்தினாரென்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் காமினி திஸாநாயக, லலித் அத்துலத் முதலி ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறி…
போக்குவரத்துத் துறை மோசடிகளுக்கு கடுமையான நடவடிக்கை!
போக்குவரத்துத் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பிரிவு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பேருந்துகள் ஒரே தரிப்பிடங்களில் நிறுத்தப்படுகின்றன.அங்கு இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும்.பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும்…
இலங்கையில் 40% ஆண்களும் 2% பெண்களும் மதுவுக்கு அடிமை!
இலங்கையிலுள்ள 40 வீதமான ஆண்களும் 2 வீதமான பெண்களும் மதுவுக்கு அடிமையாகியுள்ளதாக ஹெல்தி லங்கா நிலையத்தின் வேலைத்திட்டப் பணிப்பாளர் சாமிக ஜயசிங்க தெரிவித்துள்ளார். காலி மாவட்டத்தில் நலன்புரி அமைப்புகள் முன்னெடுத்துள்ள மது ஒழிப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் குறித்த தகவலைத் தெரிவித்தார். வளர்ந்தோரில் ஒவ்வொரு இலட்சம் பேருக்கும் 33.4 சதவீதமானோர் ஈரல் அழற்சி நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் 20 சதவீதமானோர் மதுவால் பாதிக்கப்பட்டவர்களே. எனவே,மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் பற்றி…
ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தர் – ஞானசாரர்
இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது. மாறாக பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக கருதும் நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை,ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத…
நோன்பு மாதத்தில், தேர்தலை நடாத்தவேண்டாம் – ஜனாதிபதி உத்தரவு
– A.R.A. பரீல் – தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்கப்படக் கூடாதெனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முஸ்லிம்களின் புனித மாதமான ரமழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் முஸ்லிம்களின் புனித கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்கும் ரமழான் மாதமாகையால் அம்மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்தலை எதிர்வரும் ஆகஸ்ட்…
வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் பழுதடைந்த பழங்கள் விற்பனை
வவுனியா வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பழக்கடைகள் சிலவற்றில் பழுதடைந்த பழங்கள் விற்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை பார்வையிட வருபவர்கள் அவர்களுக்காக பழங்களை கொள்வனவு செய்யும் போது பழுதாகிய மற்றும் அழுகிய நிலையில் உள்ள சில பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, சிறுவர்கள் கூட பழுதாகியமை தெரியாது பழங்களை வாங்கி கழுவிவிட்டு உண்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் வவுனியா நகரசபை மற்றும் பொது…
குளிர்பானத்துக்கு சேர்க்கப்படும் நிறம் சுகாதாரமற்றது என வழக்குத் தாக்கல்!
வியாபார நோக்குடன் பைக்கற்றில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர் பானத்துக்கு இடப்படும் கலர் உணவு பண்டத்துக்கு உதவாத நிறத்தூள் எனத் தெரிவித்து மன்னார் நீதிமன்றில் பொதுச் சுகாதார அதிகாரிகள் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மன்னார் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்கடவை வெள்ளாங்குளம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களை திடீர் சோதனையிட்ட மாந்தை மேற்கு பொதுச் சுகாதார அதிகாரிகள் பக்கெற்றில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் குளிர்பானங்களுக்கு இடப்படும் கலரானது உணவுப் பண்டங்களுக்கு உதவாத பொருள் என குற்றம்சாட்டப்பட்டு இதை உற்பத்தி செய்யும் வர்த்தகருக்கு…
இறக்குமதி வரியை அதிகரிக்க ஆலோசனை
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதியமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500
– ஜனாதிபதி ஊடகப் பிரிவு – ஒரு மூடை உரத்தின் சில்லரை விலையை அதிகபட்சம், 2,500 ரூபாயாக நிர்ணயிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். இன்று திங்கட்கிழமை முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கஞ்சா விற்றுவந்த இளைஞன் கைது
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராகேணி கிராமத்தில் உள்ள வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில்,ஏறாவூர் மீராகேணியை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடமிருந்து 4,080 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் கண்டன பேரணி
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி இன்று காலை மன்னாரில் கண்டன பேரணி இடம் பெற்றுள்ளது. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி குருசாந்தன் மஹாலட்சுமி தலைமையில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில் இருந்து இன்று (29) காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த பேரணி பிரதான வீதியூடாக சென்று மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது. பின்னர்…
மக்கள் கருத்தறியும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்றுடன் (29) நிறைவு செய்யப்படவுள்ளது. மாவட்ட ரீதியில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை கடந்த முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ள்ளார். அதற்கமைய இன்றைய தினம் அம்பாறை மற்றும் இரத்தினப்புரி மாவட்டங்களில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எனினும் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி தொடக்கம் 05 ஆம் திகதி…
