News
பேராதனை – கண்டிக்கிடையில் ரயில் பஸ் சேவை ஆரம்பம்
பேராதனை மற்றும் கண்டி நகருக்கு இடையில் ரயில் பஸ் சேவையை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கம் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் எலித் தொல்லை அதிகரிப்பு!
தலைநகர் கொழும்பில் கடுமையான எலித் தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு நகரில் துரித கதியில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பிரதான சுகாதாரப் பரிசோதகர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 53000 வீடுகளுக்கு எலிகளை அழிப்பதற்கான மருந்த வகைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 50000 வீடுகளுக்கு இந்த மாதத்தில் இந்த வகை மருந்துகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு நகரில் எலிகளின் எண்ணிக்கை அதி வேகமாக பரவி…
தகவல் அறியும் சட்டமூலத்திற்கு 2/3 பெரும்பான்மை அவசியம்
தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலத்தின் ஐந்து வசனங்கள் அரசியலமைப்பை மீறுவதாக காணப்படுவதால் அதனை திருத்தங்களின்றி நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியமென உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைக்கான சட்ட மூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை தொடர்பான மனுக்கள் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ள தீர்மானத்திலேயே உயர் நீதிமன்றம் மேற்படி அறிவிப்பை விடுத்துள்ளது. நேற்று(03) செவ்வாய்கிழமை சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் கூடியது….
VAT வரி: கொத்து ரொட்டியின் விலை உயர்வு
கொத்து ரொட்டி, ப்ரைட் ரைஸ் மற்றும் டெவல் போன்றவற்றின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. வற் வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான விலைகள் உயர்வடைந்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதனால் ஹொட்டல் உற்பத்திகளின் விலைகளை உயர்த்த நேரிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, கொத்துரொட்டி, டெவல், ரைஸ் போன்றவற்றின் விலைகள் நாளை முதல் 10 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளது. சோஸ் வகைகள் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் உற்பத்திகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகைகளின்…
பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து சபாநாயகர் கண்டனம்!
பாராளுமன்றத்தில் நேற்று(03) நடைபெற்ற நடவடிக்கைகளானது பாராளுமன்றத்தின் உயரிய தன்மைக்கும் அபிமானத்துக்கும் பெரும் களங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவர்களையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக சாபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று சபையில் அறிவித்தார். பாராளுமன்ற சபா மண்டபத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்…
காலி – மாத்தறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
காலி மாத்தறைக்கு இடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. உனவட்டுன மற்றும் கட்டுகொட பகுதிகளுக்கு இடையிலான பாலமொன்றில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதாலே குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் குறித்த பகுதிகளுக்கான ரயில் சேவை இம் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
155 சட்டவிரோத ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைப்பு
சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 155 ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சட்டவிரோத ஆயுதங்களை அரசாங்கத்திடம் கையளிக்கும் நடவடிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் மே 6 ஆம் திகதி முடிவடைகிறது. இக்காலத்தினுள் கையளிக்கப்படும் ஆயுதம் தொடர்பில் எவ்வித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படமாட்டாது எனவும் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப பணத்தொகை வழக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், எதிர்வரும் மே 6 ஆம் திகதியின்…
எம்.பி.க்கள் மூவரிடம் விசாரணை
நாடாளுமன்ற சபை அமர்வின் போது நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரிடம், பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர். கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினாலேயே மேற்படி வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மோதலில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தீப் சமரசிங்கவிடமும் விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது புகைப்பட பேனர்கள் அகற்றுமாறு பிரதமர் உத்தரவு
தமது புகைப்படங்கள் அடங்கிய பேனர்கள், பதாகைகள், கட்அவுட்களை அகற்றுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மே தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பல பகுதிகளிலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் புகைப்படம் அடங்கிய பேனர்கள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகள் பல காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த அனைத்து பேனர்கள், கட்அவுட்களையும் அகற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். மே தினமன்று பிரதமரின் புகைப்படம் அடங்கிய பதாகைகள் பேனர்கள் ஆயிரக்கணக்கில் கட்சி ஆதரவாளர்களினால் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது….
மஹிந்த குறித்து பேச சரத்துக்கு தகுதி இல்லை – கம்மன்பில
மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கான தகுதி, சரத் பொன்சேகாவுக்குஇல்லை என்று பிவித்துர ஹெல உறுமயவின் பொது செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கம்மன்பிலவின் பேஸ்புக் கணக்கில் அவர் இந்த விடயத்தை பதிவு செய்துள்ளார்.tw
மஹிந்த ஆதரவாளர்களின் தாக்குதல்; சந்தித்துக்கு கழுத்தில் முறிவு
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களின் முரட்டுத்தனமான செயற்பாடுகள் காரணமாகவே நேற்றைய (3) நாடாளுமன்ற அமர்வு பிற்போடப்பட்டதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். மகிந்தராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாநாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது அதனை அவர்களால் பொறுத்துக் கொண்டிருக்கமுடியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதனை அடுத்து ஏற்பட்ட மோதலில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்சந்தித் சமரசிங்க காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்தில் முறிவேற்பட்டதுடன், முகம் மற்றும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இது மகிந்த…
மஹிந்தவிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியாது!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட முடியாத இராணுவப் பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்க முடியாது என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
