News
பாராளுமன்ற கௌரவத்தை காப்பது சகல எம்.பி.க்களினதும் பொறுப்பாகும்
மேன்மைப்பொருந்திய பாராளுமன்றத்தின் கௌரவத்தையும் பாராளுமன்ற உறுப்பினருக்குரிய கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டியது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஒரு முழுமையான மனிதனிடம் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு ஒழுக்கமும் முதிர்ச்சியுமாகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நேற்றுக் காலை ஹொரணை ரோயல் கல்லூரியின் புதிய கேட்போர் கூடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் மேன்மைபொருந்திய பாராளுமன்றத்திற்கு…
போக்குவரத்து பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் நாலரை மணி நேரம் சி.ஐ.டி. சிறப்பு விசாரணை
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பான விவகாரத்தில் நேற்று (4) போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் நான்கரை மணிநேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விக்கிரமசேகர தலைமையிலான குழுவினர் சிறப்பு விசாரணை ஒன்றினை முன்னெடுத்து வாக்குமூலம் ஒன்றினை பதிவுசெய்துகொண்டதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். பிரதிப்…
”இறக்குமதி உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படும்”
இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் தயாரிக்கப்படும் அனைத்து உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரசாங்கம் அறிமுகப்படுத்திய புதிய வரி காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களால் தயாரிக்கப்படும் அனைத்து வகை உணவு வகைகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைவு
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறுபேர் இஸ்லாத்தில் இணைந்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழகம் – கீவளுர் பிரதேசத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கீவளுர் சுப்ரணியம் என்பவர் இஸ்லாத்தை விளங்கியதுடன் தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை தழுவிக் கொண்டுள்ளார். தனது மூன்று மகன்கள், ஒரு மகள் , மனைவி என குடும்பமாக இஸ்லாத்தை ஏற்று பின்பற்றி வருகின்றார். சத்தியத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட இந்த குடும்பத்தினர் மீது இறைவன் மறுமையிலும், இம்மையிலும் நல்வாழ்வை ஏற்படுத்துவானாக… தகவல் உதவி :…
கொண்டச்சி கிராம மக்களுக்கு அமைச்சர் றிஷாதின் உதவியில் வீடுகள் நிர்மாணிப்பு
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முழுமையாக பாரபட்சம் காட்டப்பட்ட கொண்டச்சி கிராம மக்களுக்கு, அமைச்சர் றிஷாத் தனது சொந்த முயற்சியில் 140 வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டு மன்னார் கொண்டச்சியிலிருந்து வெளியேறி, புத்தளத்தில் அகதிகளாக வாழ்ந்து வந்த இந்த முஸ்லிம் மக்கள், சமாதானம் ஏற்பட்ட பின்னர் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பினர். தாம் வாழ்ந்த பூர்வீக கிராமங்களில் வளர்ந்திருந்த காடுகளைத் துப்புரவாக்கி, மீண்டும் அந்த இடத்தில் கொட்டில்களை அமைத்து வாழ்ந்து வந்தனர். இந்த…
ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனை கருத்தரங்கு
– எஸ்.அஸ்ரப்கான் – அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் (08) ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக போரத்தின் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்துள்ளார். போரத்தின் வேண்டுகோளுக்கிணங்க பொத்துவில் – அக்கரைப்பற்று சட்ட உதவி ஆணைக் குழுவின் அனுசரணையில் ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனைகளும், புலனாய்வு அறிக்கை, ஊடக ஒழுக்கக் கோவை போன்ற விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் போரத்தின் சகல ஊடகவியலாளர்களும் கலந்து பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றனர். சரியாக…
எனக்கு ஞாபகமே இல்லை: துமிந்த
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையோ, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலோ, தனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுதலை செய்யுமாறும் கோரிநின்றார். பிரதிவாதிக் கூண்டிலிருந்து வாய்வழியான சமர்ப்புகளை முன்வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொரியா செல்லும் புத்தளம் சாஹிராவின் பைகர்
– வசீம் அக்ரம் – புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் எச்.ஏ.பைகர் இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட சங்கத்தினால் கொரியா நாட்டிற்கு செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார். சாஹிரா தேசிய கல்லூரியில் க.பொ.த. உயர்தர பிரிவு முதலாம் ஆண்டில் கல்வி பயின்று வரும் இவர் பாடசாலை மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் தனது அதீத திறமையை வெளிகாட்டியமையினால் கொரியா ஜான்க்ஜியில் நடைபெறும் 44 வது ஆசிய பாடசாலைகள் உதைபந்தாட்ட சாம்பியன்சிப் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார். வரும் மே மாதம்…
அடுத்துவரும் 6 மாதங்களுக்கு இலங்கைக்கு ஜப்பான் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட மாட்டாது
இந்த மாதம் முதல் அடுத்துவரும் 6 மாத காலத்துக்குள் இலங்கைக்கு ஜப்பான் வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மற்றும் ஸ்ரீ லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் என்பன இணைந்து அறிவிப்புச் செய்துள்ளன. தொடர்ந்தேர்ச்சியாக வாகனத்தின் விலையில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை வாகன இறக்குமதியாளர்களுக்கு பெரும் பிரச்சினையாக காணப்படுவதாகவும் இதனாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அச்சங்கத்தின் தலைவர் சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார். தற்பொழுதுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக…
சந்தித் வீடு திரும்பினார்
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (3) இடம்பெற்ற கைகலப்பின் போது தாக்குதலுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் நேற்று (4) சமரசிங்க சிகிச்சைகள் நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு அணியினர் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய சர்ச்சையையடுத்து அவர்களுக்கும் ஆளும் தரப்புக்குமிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் திடீரென…
மே 23 அரச பொது விடுமுறை தினம்
வெசாக் பௌர்ணமி தினம் எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வருவதன் காரணமாக அடுத்த நாள் 23 ஆம் திகதி திங்கட்கிழமையை அரச பொது விடுமுறை தினமாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
நாடெங்கிலும் உள்ள வக்பு சொத்துக்கள் மீட்கப்படும் – சட்டத்தரணி யாஸீன்
– ஏ.ஆர்.ஏ.பரீல் – நாடெங்கும் முறையற்ற விதத்தில் வக்பு சட்டத்துக்கு முரணாக பயன்படுத்தப்படும் வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து சமூகத்தின் நலன்களுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை வகுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரிவித்தார். முறையற்ற விதத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் பயன்படுத்தும் வக்பு சொத்துகள் தொடர்பில் வினவியபோதே வக்பு சபையின் தலைவர் யாஸீன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,வக்பு சொத்துக்கள் பெறுமதிமிக்கவை. அவை அல்லாஹ்வின் சொத்துக்களாகும். வக்பு சட்டத்தின் கீழ் சொத்துக்களைக் கண்காணிக்கும்…
