News
முஸ்லிம் பெண்கள் திருமண வயதெல்லை மாறியது!
முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும் வயதெல்லை 12இல் இருந்து 16 அல்லது 18ஆகஅதிகரிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை முன்வைக்கப்படவுள்ளது. முஸ்லிம் திருமணம் மற்றும் விவகாரத்து சட்டம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டஜனாதிபதி நிபுணர்கள் குழு இந்த பரிந்துரையை முன்வைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. திருமண வயதெல்லை அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிபுணர்கள் குழுமேற்கொண்டுள்ள போதும், அதனை 16 ஆகவா அல்லது 18 ஆகவா அதிகரிப்பது என்பது தொடர்பில்இன்னும் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதன்…
தமிழ் – சிங்கள கிராம மக்களுக்கும் வீட்டுத்திட்டம்: அமைச்சர் றிஷாத் ஏற்பாடு
– சுஐப் எம் காசிம் – மன்னார் மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்களக் கிராமங்களுக்கும் அமைச்சர் றிஷாத் வீடுகளைக் கட்டி வழங்கி வருகிறார். அமைச்சர் றிஷாட்டின் சொந்த முயற்சியினால் அரசினதோ, மீள்குடியேற்ற அமைச்சினதோ எந்த உதவியுமின்றி வெளிநாடு, உள்நாட்டு பரோபகாரிகளினதும் செல்வந்தர்களினதும் நிதியுதவியுடன் இந்த வீட்டுத் திட்டங்களை அமைத்து வருவதோடு நீர், மின்சாரம், பாதை உட்கட்டமைப்பு, பணிகளுக்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் போரின் உக்கிர விளைவினால்…
மஹிந்தவை எவ்வாறு அழைப்பது : துமிந்த திசாநாயகவுக்கு சந்தேகம்
– ஆர்.யசி – மஹிந்த ராஜபக்ஷவை ஒரு தலைவராக கருதுவதா, அல்லது முன்னாள் ஜனாதிபதியாக கருதுவதா அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக கருதுவதா என்ற கேள்வி எழுந்துள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (3) கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கட்சியின் கொள்கையை மீறிய நபர்களை விசாரித்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்….
சுன்னாகம் நிலத்தடிநீர் வழக்கு: விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளது என தொடுக்கப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையினை மன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வடமாகாண விவசாய நீர் வழங்கல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். கழிவு ஒயில் கலப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரான முறையில் குடிநீர் விநியோகம்…
மஹிந்தவால் தான் ஆட்சிக்கு வந்தோம், அவரை பாதுகாப்பது எமது கடமை : சபையில் பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷவினால் தான் நாம் ஆட்சிக்கு வந்தோம். எனவே அவரை பாதுகாக்க வேண்டியது எமது கடப்பாடாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று சபையில் தெரிவித்தார். உலகில் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் பேச்சு நடத்த அரசு தயார் என்றும் பிரதமர் சபையில் அறிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தினேஷ் குணவர்தன எம்.பி., முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் பிரதமரிடம்…
கோட்டாபய குறித்த வழக்கு அடுத்த மாதம் விசாரணை
2006ம் ஆண்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தினத்தை வழங்கியுள்ளது. இதன்படி அந்த வழக்கை ஜூன் மாதம் 27ம் திகதி விசாரணை செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளதோடு, அன்றையதினம் சாட்சியமளிக்க கோட்டாபயவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
வத்தளை நடைபாதை விவகாரம் – ஐவர் விளக்கமறியலில்
வத்தளை பகுதியில் இருந்த நடைபாதை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இவர்கள்; நேற்று (3) மஹர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இவர்களை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
காலிக்கு வந்ததில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றனர்
காலியில் இடம்பெற்ற மேதின ஊர்வலங்களுக்கு வந்தவர்களில் 1/4 பங்கினரே கிருளப்பனைக்கு சென்றிருந்ததாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர், எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (3) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இம்முறை தமக்கு ஒரு சவால் இருந்ததாக குறிப்பிட்ட அவர், கிருளப்பனையில் மேதினம் ஏற்பாடு செய்யப்பட்டது தமக்கு சவாலாகவே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் பொருளாளர் என்ற ரீதியில் 2100 பஸ்களுக்கு கட்டணம் செலுத்தியதாகவும் ஆனால் காலிக்கு 3000க்கும் அதிகமான பஸ்கள் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்….
மீளக்குடியேறிய மக்களுக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அமைச்சர் றிஷாத்
– சுஐப் எம்.காசிம் – மன்னாரில் பிரசித்திபெற்ற முசலிப் பிரதேசத்திலே, இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் வாழ்வதற்கு ஒரு வசதியான மாதிரிக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த கிராமங்களுக்கு அண்மித்ததாக அமைந்துள்ள அளக்கட்டு எனும் பிரதேசத்திலேயே இந்த மாதிரிக் கிராமத்தை அமைச்சர் றிஷாத் அமைத்து வருகின்றார். இந்த அளக்கட்டு எனும் புதிய கிராமத்தில் வேப்பங்குளம், பி.பி பொற்கேணி, எஸ்.பி பொற்கேணி, அகத்திமுறிப்பு, பிச்சைவாணியன் குளம் ஆகிய கிராமங்களில் இருந்து 199௦ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து, தென்னிலங்கையில் வாழ்ந்த மக்கள்…
சாய்ந்தமருது நகரசபையை வலியுறுத்தி, சத்தியாக்கிரகம் இருப்போம் – ஜெமீல்
– எம்.வை.அமீர் – கடந்த தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்ட, சாய்ந்தமருது மக்களுக்கான நகரசபையை சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக வழங்க முன்வரவேண்டும். எதிர்வரும் றமழானுக்கிடையில் குறித்த நகரசபையை வழங்காது விடப்படுமானால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக, பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவோம். என்று முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான, கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார். சாய்ந்தமருதில்…
பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றமடையும் தெஹிவளை மிருகக்காட்சி சாலை
தெஹிவளை மிருகக்காட்சி சாலையானது அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியவாறு சிறந்த பொழுது போக்கு பூங்காவாக மாற்றப்படவுள்ளதாக நிலையான வளர்ச்சி மற்றும் வனவிலங்குகள் அமைச்சு காமின ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார். இதற்கமைய இதற்கான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வுகளை சரியான முறையில் மேற்கொள்ள விசேட குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் விற்பனைசெய்யத் தடை
அனுமதிப்பத்திரம் இன்றி தொலைபேசிகள் மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் நிலையங்களை சுற்றிவளைத்து முற்றுகையிட, தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சுற்றிவளைப்பானது அடுத்த மாதம் முதல் முன்னெடுக்கப்படும் என, அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை கையடக்கத்தொலைபேசி மற்றும் அதன் பாகங்களை விற்பனை செய்யும் இடங்களை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவில் பதிவு செய்ய வேண்டும் எனவும், சில இடங்கள் அனுமதிப் பத்திரம் இன்றி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆணைக்குழு…
