News
தேசிய இராணுவ மாத கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு
தேசிய இராணுவ வீரர்கள் மாதம் 2016 அறிவிக்கப்பட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று (05) ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் அனோமா பொன்சேக்கா கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய இராணு வீரர்கள் மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கொடி விற்பனையினூடாக பெறப்பட்ட நிதியும்…
பாடசாலை மாணவர்கள், வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்
அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, அனர்;த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் வளிமண்டலவியல் திணைக்களம் ஆகியவை இணைந்து இது குறித்து ஆராய்ந்து வெளியிட்டுள்ள பரிந்துரைகளிலேயே இந்த ஆலோசனை…
பஸ் கட்டணத்தை உயர்த்தத் தீர்மானம்
எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்….
இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் விமானி
– முகம்மத் பர்சாத் – புதிய காத்தான்குடியை சேர்ந்த லண்டனை வசிப்பிடமாக கொன்ட றீமா பாயிஸ் (Age 16) இலங்கையின் முதல் “முதல் முஸ்லிம் பெண் விமானியாகும்” முயற்சியில் முதல்கட்டமாக லண்டனில் பிரசித்திபெற்ற (சையில் போர்ன் கிளைடிங் கிளப்)ல் இனைந்து ஒருவருட பயிற்சியை ஆரம்பித்துள்ளார். கடந்த கிழமை பறக்கும் விமானத்தில் 10000 அடி உயரத்தில் பரசூட் மூலம் குதித்து தனது சாதனையை ஆரம்பித்த றீமாபாயிஸ் தொடர்ச்சியாக பயிற்சியில் ஈடுபடுகிரார் நேற்று சிறுவிமானத்தில் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டார்… “முஸ்லிம் பெண் விமானியாக” எமது…
களனி பல்கலை மாணவர்கள் ஐவர் கைது
நீண்ட காற்சட்டை அணியக் கூடாது என தெரிவித்து புதிதாக களனி பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெற்றுச் சென்ற மாணவிக்கு பகிடிவதை செய்த அப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் மாணவி ஒருவர் செய்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைவான விசாரணைகளிலேயே இந்த ஐவரையும் கைது செய்ததாக களனி பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, தற்போது…
நாடாளுமன்றில் இன்றும் குழப்பம்
அழகன் கனகராஜ் நாடாளுமன்றத்தில், இன்று வெள்ளிக்கிழமையும் உறுப்பினர்களால் குழப்பநிலை ஏற்பட்டதை அடுத்து, சபாநாயகரால், சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற, நிதியமைச்சினால் கொண்டுவரப்பட்ட 5 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான குறைநிரப்பு மீதான வாக்கெடுப்பின் முடிவுகள் போலியானவை என, இன்றைய தினத்திலும் வாத விவாதங்கள் ஏற்பட்ட நிலையிலேயே, சபை அமர்வு, 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சொகுசு பஸ் நடத்துனர்கள் பணி பகிஷ்கரிப்பு
காலி – கொழும்பு சொகுசு பஸ் நடத்துனர்கள் இன்று (6) காலை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலி – கொழும்பு அதிவேக பாதையில் புதிய நான்கு பஸ்களை சேர்த்துக்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக பஸ் நடத்துனர்கள் தெரிவித்துள்ளர்.
ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் மூலமே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும்
– சுஐப் எம் காசிம் – ஒழுக்கமான மாணவர் சமூகத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்றும் பாட நேரங்களில் அநாவசியமாக பொழுதைக்கழிக்கக் கூடாதெனவும் நேற்று (05) தெரிவித்தார். முசலிப்பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் புத்தளத்தில் மன்னார் கல்வி வலயத்தின் இணைப்புப் பாடசாலைகளாக இயங்கும் அதிபர் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் கஷ்டங்கள் தொடர்பில் முசலி மகா வித்தியாலத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதில் மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி செபஸ்தியனும் கலந்து கொண்டார்….
மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணம்
சரத் பொன்சேகாவை கைது செய்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடு மரணமடைந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 04ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்றி இன்று (6) மரணமடைந்துள்ளார். கட்டட நிர்மாணப் பணியின் போது மரங்கள் சரிந்தது வீழுந்தமையால் தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே இவர் மரணமடைந்துள்ளார்.
மஹிந்தவுக்கு எதிரான வழக்கு வாபஸ்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு தொடர்ந்திருந்த வழக்கொன்றை நேற்று வாபஸ் (5) பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக சில் அனுட்டானங்களுக்கான துணிகளை விநியோம் செய்யும் நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தார். பொதுமக்களின் வரிப்பணத்தை துஷ்பிரயோகம் செய்து குறித்த துணிவிநியோக பிரச்சார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் பெப்ரல் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தது. இது…
சூரியன் – புதன் – பூமி ஒரே நேர்கோட்டில்
ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் காணலாம். இந்த அறிய நிகழ்வு வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம்…
நாடாளுமன்ற அறிக்கை கசிவு!
நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் (4) இடம்பெற்ற வன்முறை தொடர்பான விசாரணை அறிக்கை ஊடகங்களுக்கு முன்கூட்டியே வெளியிட்டப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய இதனை அறிவித்துள்ளார். நாடாளுமன்ற சபையில் இந்த அறிக்கையை சமர்ப்பிக்கும் முன்னர் அதில் கூறப்பட்டிருந்த பரிந்துரைகள் ஊடகங்களின் மூலம் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் இது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விடுத்தவேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், தாம் அந்த விடயத்தில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.
