News
கொழும்பு பங்குச் சந்தையில் திடீர் மாற்றம்
இலங்கையில் பங்குப் பரிவர்த்தனைக்கென அமைந்துள்ள கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளின் விலை திடீரென நேற்று (27) உயர்வடைந்துள்ளது. தற்போது சகல விலைச்சுட்டெண்ணும் 6571.21 ஆக காணப்படுகிறது. நாளின் இறுதியில் 15.2 மில்லியன் பங்குகள் கைமாற்றப்பட்டுள்ளன. மேலும் மொத்த பணப்புரள்வு 1084.9 மில்லியனாகும்.
இலங்கை வரும் நோர்வேயின் வெளியுறவு செயலர்
நோர்வேயின் வெளியுறவு அமைச்சின் இராஜாங்க செயலாளர் டோர் கட்ரோம் எதிர்வரும் 31ம் திகதியன்று இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கையில் ஜூன் 2ம் திகதி வரை தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று சந்திக்கவுள்ளார். இந்தநிலையில் இலங்கைக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் வரவுள்ள நோர்வேயின் வெளியுறவு அமைச்சர் போர்ஜ் பிரேன்டேயின் விஜயத்துக்கு முன்னோடி விஜயமாகவே டோர் கட்ரோமின் விஜயம் அமையவுள்ளது. கட்ரோம், இலங்கையில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், அமைச்சர் மலிக்…
இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவை, வழங்குகிறது ஜப்பான்
இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளை அவர் இதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட அழைப்பிற்கிணங்க G7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அந்நாட்டு பிரதமரை இன்று சந்தித்தார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கு, 38 பில்லியன்…
நெளுந்தெனிய பள்ளிவாசல் மீது குண்டுத்தாக்குதல்
கொழும்பு-கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் நெளுந்தெனிய முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஒன்றரை மணியளவில் இந்தக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிய ரக பெட்டியொன்றுக்குள் மறைத்து வைத்து குண்டுவெடிக்க வைக்கப்பட்டிருப்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் பொலிசாரும், புலனாய்வுப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மேலும் எதுவித தடயங்களும் இதுவரை கண்டறியப்படவில்லை…
அமைச்சர் றிஷாத், பிரதமரை சந்திக்க முடிவு,,,,,
-சுஐப் எம்.காசிம் – சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிகளைப் பற்றி பிழையான எண்ணங்களையும், கருத்துக்களையும் ஏற்படுத்துவதற்காக இனவாத சக்திகளின் ஒத்துழைப்புடன் சில முகநூல்களும், போலி இணையத்தளங்களும் தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன என்றும், இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் போலியான இணையத்தளங்கள் மற்றும் முகநூல்களைக் கட்டுப்படுத்தும் வழி வகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல இரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார். கடந்த காலங்களிலும் முஸ்லிம்கள் தொடர்பில் இத்தகைய போலியான, பொய்யான, வேண்டுமென்றே திரிவுபடுத்தப்பட்ட…
அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை
– Mujeeb Ibrahim – அனர்த்தம் நிகழ்ந்து அதனை கடக்கும் வேளை… இயக்கச்சண்டைகள், அரசியல் முரண்பாடுகள் என நம்மவர்கள் பிஸியாக இருக்கும் போது… இந்த இடைவெளிக்குள் இஸ்ரேல்காரன்வ ந்து இறங்கியிருக்கிறான். நம்ம தெஹிவளை, கல்கிஸ்ஸ மேயர் நிவாரணப்பொருட்களை பாரம் எடுக்கும் காட்சிகளே இவை…. இதன் பின்னால் உள்ள தனசிறியின் (மேயர்) அரசியல், இஸ்ரவேலின் திட்டங்கள் பற்றி விரிவாக பேசவும், ஆராயவும் வேண்டிய தேவை இருக்கிறது. அது சரி தெஹிவளை, கல்கிஸ்ஸ பகுதிகளுக்கு எப்போ வெள்ளம் வந்திச்சு? நிவாரணம் கொடுக்க…
மனிதாபிமான உதவியின் பெயரில் இஸ்ரேல் முஸ்லிம் பிரதேசத்திற்குள் ஊடுருவல்
வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு…
இலங்கையில் 5G
இலங்கையில் 5G தொழில்நுட்பத்தை பரீட்சிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் குறித்த பரிசீலனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடனே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழிநுட்ப அமைச்சரான ஹரின் பெர்னான்டோ மற்றும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ප්රදීප් එක්නැලිගොඩ නඩුවේ ලුතිනන් කර්නල්ට ඇප
-නිලුපුලී – ප්රදීප් එක්නැලිගොඩ නඩුව සම්බන්ධයෙන් දෙවන සැකකරු ලෙසින් සැකපිට රිමාන්ඩ් භාරයේ සිටි ලුතිනන් කර්නල් ප්රබෝධ සිරිවර්ධන හෝමාගම මහේස්ත්රාත් රංග දිසානායකගේ නියෝගයකට අනුව රුපියල් ලක්ෂ 20ක මුදල් ඇප හා රුපියල් ලක්ෂ 60 බැගින්වූ ශරීර ඇප දෙකක් මත මුදා හැරීමට නියම කර ඇත . ඔහුට සෑම ඉරුදිනකම අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුවේ පෙනී සිටින ලෙසද නියෝග කැරුණු අතර…
எக்னெலிகொட விவகாரம் – சந்தேகநபர் பிணையில் விடுவிப்பு
ஊடகவியாலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டாவது சந்தேக நபரான லெப்டினட் கேர்ணல் சுபோத சிறிவர்தனவை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரை 20 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 60 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து பிரதி ஞாயிறு தோறும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் என…
துறைமுக முன்னாள் தலைவருக்கு பிணை!
துறைமுகத்தின் முன்னாள் தலைவரான பிரியத் பந்து விக்கிரம இன்று (27) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த தலைவருக்கும்,மேலும் இருவருக்கும் எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குறித்து உலக வங்கி மகிழ்ச்சி!
இலங்கையில் நடைபெற்ற அதிகார மாற்றத்தின் பின்னர் நல்லதோர் அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் குறித்து ஆராய்வதற்காக உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது. இந்த குழுவினர் இலங்கையில் இருந்து திரும்பும் முன்னர் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்து புதிய அரசியல் கலாசாரம் மற்றும் பொருளாதார வளர்சிக்கான சாத்தியங்கள் குறித்து தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இதேவேளை, இலங்கையின்…
