News
ஹந்தானை மண்சரிவால் கண்டி நகருக்கு பாதிப்பு இல்லை
ஹந்தானை மலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் கண்டி நகருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினை தேசிய கட்டிட ஆய்வு மையத்தின் கண்டி மாவட்ட பொறுப்பதிகாரியும் சிரேஸ்ட புவியியல் விஞ்ஞானியுமான நிசாந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பந்தமான வழக்கு ஒத்திவைப்பு
2015ம் ஆண்டு பொரள்ளை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல் சம்வம் தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 15ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குற்றச் சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றில் ஆஜராகாததன் காரணமாகவே வழக்கு 15ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சட்டத்தரணி ரமீஸ் பஷீர் கூறினார். குறித்த வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுக்கு கொண்டு வருவதற்கு இருதரப்பும் இணங்கியுள்ள போதிலும், குற்றச் சந்தேகநபர்கள் இருவர் இன்று நீதிமன்றில் ஆஜராகி இருக்கவில்லை…
பிரதமரிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு
லால் விஜயநாயக்க தலைமையிலான, அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழு, அதனது இறுதி அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று (01) கையளித்துள்ளது. அறிக்கையை முழுமையாக வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்.
விஜித்த ஹேரத்க்கு, 1500 ரூபாய் அபராதம்
மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து, பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் விடுவிக்கப்பட்டுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் பயணித்த வாகனம் தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி, நேற்று முன்தினம் இரவு இராஜகிரிய பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது. இதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எதுஎவ்வாறு…
ஆதிவாசிகளின் பிரச்சினைகள் குறித்த ஆராய தவறும் அதிகாரிகள்
இந்த நாட்டில் வாழும் ஆதிவாசிகள் மிகவும் சிரமத்தின் மத்தியில் வாழ்ந்துவருவதாக ரத்துகுல ஆதிவாசிகளின் தலைவர் சுதா வன்னில எத்தோ தெரிவித்துள்ளார். தமது இனத்திற்கான சமுர்த்தி கொடுப்பனவுகள் கூட கிரமமான முறையில்வழங்கப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரம்பரிய தொழில்களை செய்து ஜீவனோபாயத்தை கொண்டு நடத்திய தமக்கு ஏனைய தொழில்களை செய்து வாழ்க்கையை கொண்டு செல்வது கடினமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய எந்தவொரு அதிகாரிகளும் தம்மிடம் வருவதில்லை என்றும் சுதா வன்னில எத்தோ…
அங்கொட மலையில் மண்சரிவு
வரக்காப்பொல நகரின் அருகில் உள்ள அங்கொட மலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மலையிலுள்ள அதிகளவான கற்கள் இன்று (1) காலை முதல் சரிந்து வருவதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக மலையடிவாரத்தில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கற்களின் சரிவினால் இதுவரை யாருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள்
முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும்…
குரோத அரசியலை கைவிட வேண்டும்!- தலதா அதுகோரள
அரசியல் கட்சிகள் குரோத அரசியலை கைவிட வேண்டுமென வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார். பெல்மடுல்ல, கந்தேகெதரவத்த, உடுகல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து குரோத அரசியலை புறந்தள்ள வேண்டியது அவசியமானது. பழி வாங்கும் எண்ணத்தில் அரசியல் செய்யக் கூடாது, அதில் பயனில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக உழைத்த சாந்த…
சம்பள அதிகரிப்பை கோரும் புகையிரத தொழிற்சங்கம்
சம்பளத்துடன் இணைத்து மேலும் பல கொடுப்பனவுகளை புகையிரத தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. இதேவேளை 10,000 ரூபாய் சம்பளம் உள்ளிட்ட மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு புகையிரத திணைக்களம் இதுவரை வழங்க முன்வராமை குறித்து புகையிரத தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தமது கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் தமது சங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் என புகையிரத தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டாளரான ஜானக பெர்னான்டோ தெரிவித்துள்ளார். அத்துடன் தமது கொடுப்பனவுகள் அதிகரிப்பை அமைச்சரவை அங்கீகரித்துள்ள போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் உள்ளதாகவும்…
குற்றத்தை ஏற்கப் போவதில்லை!- துமிந்தவின் சட்டத்தரணி
லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மூன்று முறைகேடுகள் தொடர்பில் தாம்குற்றத்தை ஏற்கப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாநீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் அவரின் சட்டத்தரணி இதனை அறிவித்தார்.
இலங்கையில் காலூன்றும் இஸ்ரேல்!
வெள்ளத்தை காரணமாக வைத்து இஸ்ரேல் தனது செயற்பாட்டை ஸ்தீரப்படுத்துவதற்கு முனைந்துள்ளமை தொடர்பான செய்தி தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுப்பது போல் தனது கால்தடங்களை இலங்கையில் அகலப்பதிப்பதற்கு இஸ்ரேல் முனைந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று இஸ்ரேலிய தூதுவர் டெனியல் கார்மன் ஒரு தொகை மருந்துப் பொருட்கள் மற்றும் ஏனைய நிவாரணபொருட்களுடன் கொலன்னாவைக்கு சென்றுள்ளார். இவருடன் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கா மற்றும் பல அதிகாரிகள் சென்றுள்ளனர். இவருக்கு பலத்த…
கைத்தொழிற் துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்
தங்கொட்டுவ கைத்தொழில், வர்த்தக வலயத்தில், கைத்தொழிற் துறையை விரிவுபடுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையில் நேற்று (31/05/2016) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கைத்தொழில்,வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச, அமைச்சின் செயலாளர் தென்னகோன், கைத்தொழில், வர்த்தக அமைச்சின் கீழான நிருவனங்களின் உயரதிகாரிகள், முதலீட்டாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற முதலீட்டாளர்கள், முதலீட்டுத் துறையில் தாம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விளக்கினர். அத்துடன் தொழிலாளர்களின் நல உரிமைகள் தொடர்பிலும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…
