News
இலங்கை வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டுகிறது – பிரான்ஸ் தூதுவர்
இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மரின் செக்குஹ் Jean Marin Schuh. இதனை தெரிவித்துள்ளார் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம்,: மனித உரிமை தொடர்பான விடயங்களில் கவனம்செலுத்தி வருகிறது. இந்தநிலையில் அந்தநாட்டுடன் உறவுகளை விருத்தி செய்து கொள்ள விரும்புவதாக பிரான்ஸ்தூதுவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் இலங்கை அரசாங்கம் செயலிலும் காட்டுகிறது. இதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமையும் ஒன்று உதாரணம் என்றும்…
மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!
தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிஷாத்
மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆரம்பகாலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் அரசியலில் பிரதி அமைச்சராகவும், கெபினட் அமைச்சராகவும் பணிபுரிந்த மர்ஹூம் மௌலானா தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுனராகவும் பணிபுரிந்தவர். அவர் முஸ்லிமாக இருந்த போதும் சிங்கள, தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவையும், நட்பையும்…
அலவி மௌலானா காலமானார்
முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
FCID புதுப் பெயருடன் புதுப் பரிணாமத்துடன்
கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவின் (FCID) நோக்கமானது நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காகும். அப்படிப்பட்ட FCID ஒருபோதும் முடப்படாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும், FCID மூடப்பட மாட்டாது, ஆனால் புதுப்பெயருடன் புது விடயங்களை உள்ளடக்கியவாறு மீண்டும் ஆரம்பிக்கப்படும், எனினும் இதற்கு சற்று காலதாமதம் ஆகும் என ராஜித…
காணாமல் போன இரண்டரை வயது குழந்தை மீட்பு: காத்தான்குடியில் சம்பவம்
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் செவ்வாய்க்கிழமை (14.6.2016) மாலை காணாமல் போன இரண்டரை வயதுயை குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள கர்பலா கிராமத்தில் வைத்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது காத்தான்குடி ஆறாம் குறிச்சி ஜன்னத் மாவத்தையைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தையான எம்.ஜே.ஜியாஸ் எனும் ஆண் குழந்தையொன்று (14.6.2016 செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளது. வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த இந்தக் குழந்தை காணாமல் போனதையடுத்து பெற்றாரும், உறவினர்களும், அயலவர்களும் குழந்தையை தேடியுள்ளனர்….
முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் தலைமுடி லொறியில் சிக்கி மரணம்!
தமிழகத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த பெண்ணின் தலைமுடி பறந்து லொறியொன்றில் சிக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (45). இவரது மனைவி மோகனா (38). இவர்கள் தங்களது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் வந்துள்ளனர். இவர்கள் அண்மையில் காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூர் செல்வதற்கு முச்சக்கரவண்டியில் அரக்கோணம் ரயில் நிலையம் சென்றுள்ளனர். வழியில் மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே முச்சக்கரவண்டி செல்லும்போது மோகனாவின் தலைமுடி வெளியே பறந்து பக்கத்தில் சென்ற லொறியின்…
ஆசிரியர்கள் கையடக்க தொலைப்பேசி பாவிக்க தடை!
வடமேல் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர், சந்தியா குமார ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் கற்பித்தல் பணிகள் முடிந்தநிலையில் அவசியம் ஏற்படும்நேரத்தில் மாத்திரம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிலரி வெற்றி பெற கூடுதல் வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் வேட்பாளராக தெரிவாகியுள்ள ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற கூடுதல் வாய்ப்புள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் உலக நாடுகள் எதிர்பார்த்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் தான்…
ஜோர்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதித்த மேல் நீதிமன்றம்
ஜோர்தான் பிரஜை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 16.19 கிராம் ஹெரோயினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக ஜோர்தான் பிரஜையான அமர் யூசுப் அல் சுதே என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இந்த நபர் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு பலாமரச் சந்தியில் பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது…
ஒலிபெருக்கிகள் மூலம் இடையூறு, ஏற்படுத்தும் முஸ்லிம்கள் – ACJU விடம் முறைப்பாடு
– ARA.Fareel- – நாட்டின் சில பகுதிகளில் பள்ளிவாசல்களில் ரமழான் மாத சமய வழிபாடுகள் ஒலிபெருக்கிகள் மூலம் அதிகளவு சப்தத்துடன் நடாத்தப்படுவது குறித்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. பள்ளிவாசல்களுக்கு அருகில் பல பௌத்த பன்சலைகள் இருக்கும் பிரதேசங்களிலும் இரவு நேர ரமழான் வழிபாடுகள் இவ்வாறு நடாத்தப்படுவது பிரச்சினைகளுக்கு வழிகோலுவதாக அமையும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளின் சப்தம் பள்ளிவாசல்களுக்குள்ளே மாத்திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்ளப்பட…
இலங்கையில் முதன் முறையாக சோலாஸ் செயற்திட்டம்!
இலங்கையில் முதன் முறையாக “நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)” செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டல்களின் கீழ் கப்பற்துறையுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுமென வணிக கப்பற் சேவைகள் செயலகத்தின் அத்தியட்சக ஜெனரால் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
