News
85ஆயிரம் மெற்.தொன் நெல் சந்தைக்கு!
நெல் களஞ்சிய சபையிலிருந்து பெருந்தொகையான நெல்லை சந்தைக்கு விநியோகிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 85,000 மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு வழங்கப்படவுள்ளதாக நெல் களஞ்சிய சபையின் தலைவர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கான கேள்வி அறிவிப்பு அடுத்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இதுவரை நெற் களஞ்சிய சபையில் உள்ள 2 லட்சம் மெட்றிக் தொன் நெல் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மீண்டும் ஒரு தடவை மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் தேவை…
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு திட்டம்
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையில் அரச சேவைத் துறையினரின் அடிப்படைச் சம்பளம் 11,730 ரூபாவிலிருந்து 24,230 ரூபா வரை அதிகரிக்கும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இதேவேளை அரச ஊழியர்களுக்கான தேசிய சம்பள கொள்கையினை தயாரிக்கும் நடவடிக்கையினை துரிதமாக நிறைவு செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். #News1st
பரணகம ஆணைக்குழுவின் ஆயுட்காலம் இன்னும் 1 மாதம் மட்டுமே
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் ஜூலை மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல பரணகம தெரிவித்தார். காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு அரசாங்கம் புதிய வழிமுறையை உருவாக்க தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். காணாமல் போனவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளித்தவுடன் தமது ஆணைக்குழுவின் கடமை…
பஸ் சாரதிகளுக்கான விஷேட அனுமதிப் பத்திரம் அடுத்த மாதம் முதல் கட்டாயம்
மக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் சாரதிகளுக்கு வழங்கப்படும் விஷேட அனுமதிப் பத்திரத்தை அடுத்த மாதம் முதல் கட்டாயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக, போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிரி சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 159 வீடுகள் புனரமைக்கப்பட்டன!
சலாவ இராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட 159 வீடுகளின் புனர்நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், அப் பகுதியில் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டுவரத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இராணுவ ஊடகப் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு கடற்படை, வான் படை மற்றும் பொலிஸாரின் உதவிகளையும் பெற்றுக் கொண்டுள்ளதாக, அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு…
நாட்டுக்கு தேவையானவற்றை அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன்!
மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவன்றி நாட்டுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்தின் சர்வதேச தொடர்புகளை பிழையாக சித்தரித்து வரும் அரசியல் எதிர்தரப்பினர், உலக வல்லரச நாடுகள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு அரசாங்கம் இடமளித்து வருவதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரிப்தாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார். “பூகோள செயற்பாடுகளில் இலங்கை – 2015 ஜனவரி முதல் கடந்து வந்த பாதை“ என்ற கருப்பொருளில் நேற்று (13) பிற்பகல் பண்டாரநாயக சர்வதேச…
சீன தூதுவர் – வடமாகாண ஆளுனருடன் சந்திப்பு
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஜி ஸியாங்லியாங் அடங்கிய குழுவினர் இன்று(14) வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரேவை சந்தித்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுனர் தூதுவரிற்கு விளக்கமளித்தார்.
91 கிலோ கிராம் கொக்கேன் அடங்கிய கொள்கலனை ஜனாதிபதி பார்வையிட்டார்
– ஜனாதிபதி ஊடகப்பிரிவு – பொலிஸ் விசேட பிரிவும் நிதி அமைச்சின் சட்ட விரோத போதைப்பொருள் தடுப்புப் பிரிவும் இணைந்து கைப்பற்றிய கொக்கேன் போதைப்பொருள் 91 கிலோ கிராம் கொண்ட கொள்கலனை இன்று (14) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பார்வையிட்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் வேலை செய்வதாக கூறி மோசடி செய்தவர் கைது
ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாகக் தன்னைக் காட்டிக்கொண்டு கந்தளாய் பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சுமார் 1 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இவ்வாறு மோசடி செய்ததாக கூறப்படுகின்றது. குறித்த நபர் தொடர்பில் கிடைக்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கந்தளாய் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். விசாரணைகளையடுத்து, சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாவஸ்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபரே…
ஏழு மாணவர்களின் விளக்கமறியல் நீடிப்பு
பகுடிவதைத் தொடர்பில் கைது செய்யப்பட்ட களனி பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேருக்கும் எதிர்வரும் ஜுன் மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை மஹர பிரதான நீதவான் மஹிந்த பிரபாத் ரணசிங்க விடுத்துள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் 3 மாணவிகளும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ்
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இந்த திட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களும் எஸ்.எல்.எஸ். 517 தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதற்கு உரிய தரமற்ற…
இலங்கை குழுந்தைகள் தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்
இலங்கையில் 2 இலட்சம் சிறுவர்கள் உயரம் குறைந்தவர்களாக உள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள்மெல்லிய தோற்றத்துடன் காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 மில்லியனுக்கு அதிகமான இலங்கை சிறுவர்கள் இரத்த சோகை நோயிற்கு உள்ளாகியிருப்பதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் வைத்தியர் காமினி ஜயக்கொடி தெரிவித்துள்ளார். காலி மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை சிறுவர்களின் விளையாட்டு…
