News
மூலதன ஆதாய வரி மீண்டும் அறிமுகம்
மூலதன ஆதாய வரி மீண்டும் அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. tm
பள்ளிவாசல் மீது கல் வீசியவர்களுக்கு புதுமையான தண்டனை
பொரளை பிரதேசத்தில் பள்ளிவாசல் மீது கல் வீசிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு 5 பேருக்கு புதுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பொரளை வஜீராராம விகாரையின் ஊடாக வழங்குமாறு 5 பேருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பொரளையிலுள்ள பள்ளிவாசல் மீது கற்களை வீசியதாக 5 நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இவர்களிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை வெள்ளத்தால் பாதிக்கப்பட்;ட மக்களுக்கு நிவாரண…
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்!
போதை பொருளுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு புனருத்தாபன வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது மாத்திரம் அல்லாமல் அவர்களுக்கு விழிப்புணர்வான கருத்தரங்குகள், விழிப்பூட்டக்கூடிய நிகழ்வுகள் போன்றவற்றையும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம் .பி.மொயிதீன் தெரிவித்தார். சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மாதத்தினை முன்னிட்டு திங்கட்கிழமை (13) மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற சமுதாயங்கள் சீர்திருத்த பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள்…
கொஸ்கம மீள்கட்டுமானப் பணிகள் முன்னேற்றகரமான நிலையில்
கொஸ்கம சம்பவத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பொது மக்களை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வரும் வகையில் இரவு பகலாக திருத்த வேலைகள், மறுசீரமைப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல வீடுகளின் மீள்கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஏற்கனவே உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மேலும், இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டு பொரளுகொட விகாரையில் தங்கவைக்கப்பட்டிருந்த எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் நேற்று முந்தினம்(13) காலை தமது வீடுகளுக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், கடற்படை வீரர்கள் மற்றும்…
சட்ட மா அதிபரின் ஆலோசனையிலே மத்திய வங்கி செயற்பட முடியும்
அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்களை வழங்க மத்திய வங்கி மறுப்புத் தெரிவித்தது என வெளியாகிய செய்திகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அது உண்மைக்குப் புறம்பான செய்தி என அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று(14) விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் மூலம் அரச வர்த்தகம் தொடர்பான பாராளுமன்ற குழுவுக்கு தகவல்கள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனும் அடிப்படையில் கடந்த தினங்களில் ஊடகங்களில் வெளியான…
50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதம் உலகை சுட்டெரித்த சூரியன்
உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில்…
அடுத்த ஆண்டுக்குள் மின் கடவுச்சீட்டு!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்,மோசடிகளை தடுக்கும் முகமாக அடுத்தஆண்டின் தொடக்கத்தில் மின்- கடவுச்சீட்டுக்களை வெளியிட நடவடிக்கைகள்முன்னெடுக்க வேண்டும் என வடமேல் அபிவிருத்தி மற்றும்கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார். இணைய கடவுச்சீட்டு விண்ணப்ப படிவங்களை நிரப்புதல் மற்றும் விசாஸ்டிக்கர்களுக்கான அறிமுகப்படுத்தல் நிகழ்வின் போது இதனை நேற்றுதெரிவித்துள்ளார். இந்த நிகழ்வானது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கேட்போர் கூடத்தில்நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின்மேற்பார்வையின் கீழ் இந்த புதிய தொழில்நுட்பங்கள்…
தகவலறியும் சட்டமூலம் 23 இல் பாராளுமன்றில் நிறைவேற்றப்படும்
தகவலறியும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். குறித்த சட்டமூலம் இம்மாதம் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமென அவர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து
சகல தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை இரத்தானது, கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, இன்று (15) தொழிற்சங்க உறுப்பினர்களுடன் பேச்சுவார்தையொன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோமவன்சவின் மறைவு நாட்டுக்கு பேரிழப்பாகும் – அமைச்சர் றிஷாத்
மக்கள் விடுதலை முன்னனியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவு இலங்கை வாழ் மக்களுக்கு பாரிய இழப்பாகுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் விடுத்துள்ள அனுதாபச்செய்தியில் தெரிவித்துள்ளார். காலஞ் சென்ற அமரசிங்க இடது சாரி சிந்தனை கொண்டவர். இடது சாரிக் கொள்கையில் பற்றுறுதியுடன் வாழ்ந்து மக்கள் நலனுக்காக அரும்பாடு பட்டவர். இன நல்லுறவுக்காகவும் உழைத்தவர். இந்நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர்கள் சமாதானமாகவும் சரி நிகராகவும் வாழ வேண்டுமென்பதற்காக அனைத்து…
சோமவன்ச அமரசிங்க காலமானார்
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் காலமானார். ராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
றிஷாத் பதியுதீன் – சூடான் தூதுவர் சந்திப்பு
– ஊடகப் பிரிவு – இந்தியா புதுடில்லியை தளமாகக் கொண்டு செயற்படும் இலங்கைக்கான சூடான் தூதுவர் டாக்டர் ஹஸன் ஈ எல் தாலிப்பை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று (14) அமைச்சு அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில் சூடான் – இலங்கை இடையிலான இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் முதலீடுகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
