News
ரவிகருணாநாயக்கவின் இப்தார் நிகழ்வு (Photo)
– அஷ்ரப் ஏ சமத் – நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று (21ஆம் திகதி) கொழும்பு 10 மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். இதில் கொழும்பு வாழ் 1000 பேர் இராப்போசன வைபத்திலும் கலந்து சிறப்பித்தனா்.
21 பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மண்சரிவு அபாயம்
பதுளை மாவட்டத்தின் 21 பாடசாலைகள் அமைந்துள்ள இடங்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இடங்களாக மண்சரிதவியல் தேசியகட்டிடவியல் ஆய்வகம் பிரகடனப்படுத்தியுள்ளது.
களனி கங்கைக்கு அண்மையில் 400 சட்டவிரோத கட்டுமானங்கள்
களனி கங்கையின் தெற்கு ஆற்றுநீர் கட்டுமான பகுதியை அண்மித்த பகுதிகளில் 400 சட்டவிரோத கட்டுமானங்கள் காணப்படுவதாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். நீர்பாசன திணைக்களத்தினால் கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் போதே குறித்த சட்டவிரோத கட்டுமானங்கள் பற்றிய தகவல் தெரியவந்துள்ளது.
அவசரமாக கூடிய சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியசபை கூட்டம் நேற்றிரவு அவசரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இரவு கூட்டம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது பல விடங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழா தொடர்பிலும் இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
தண்டவாளத்தை விட்டு விலகிய ரயில்
கொழும்பு – புத்தளம் வீதியில் நீர்கொழும்பு ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலொன்று இன்று காலையில் தண்டவாளத்தை விட்டு விலகியதாக ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மொனறாக்கல்ல பள்ளிவாசல் மீது, கல் வீச்சுத் தாக்குதல்
மொனறாக்கல்ல நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீது கல் வீச்சுத் தாக்குதல் சம்பவமொன்று நடைபெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தினால் பள்ளிவாசல் கண்ணாடிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.
ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய 5 வரலாற்று நிகழ்வுகள்
1. பத்ர் போர்: இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள் தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான். 2. மக்கா வெற்றி: குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால்…
பொருளாதார மத்திய நிலைய இழுபறிக்கு யார் காரணம்?
“வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே காரணமென” வடக்கு முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன் கூறியதாக பத்திரிகைகளில் இன்று செய்தி ஒன்றைப் படித்தோம். இந்தச் செய்தியைப் பார்த்த போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கின்றது. முதலமைச்சர் சீ வி போன்ற முதிர்ச்சியுள்ள கனவான் ஒருவர் இவ்வாறான ஒரு கருத்தை அமைச்சரவையில் தெரிவித்து பிரச்சினையை திசை திருப்பப் பார்க்கிறார் என்பது நமக்கு வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்…
நாடு திரும்பினார் மஹிந்த
ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று(21) இரவு 11.15 மணியளவில் நாடு திரும்பினார். ஜப்பானிலுள்ள இலங்கை மக்களின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 12ஆம் திகதி ஜப்பானுக்கு சென்றிருந்தனர்.
கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு ஓ.ஜ.சி கைது
– அஷ்ரப் ஏ சமத் – கல்கிசை பொலிசின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஒரு பெண்ணிடம் லஞ்சம் பெற்றதற்காக இன்று (21) ஆம் திகதி பொலிசின் விசேட விசாரனைப்பிரிவின் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டாா். பொறுப்பதிகாரி ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு எதிராக பதியப்பட்ட முறைப்பாட்டினை சரிசெய்து தருவதற்காக 1 இலட்சம் ருபா பேரம் பேசி உள்ளாா். அதில் முற்பணத்தினை தெஹிவளை மக்கள் வங்கிக்கருகில் வைத்து குறித்த பெண்ணிடம் 20ஆயிரம் பெறும்போதே விசேட பொலிஸ் கைது செய்தனா். இவர் கொழும்பு மஜிஸ்திரேட்…
வெற்றிபெற்றுள்ள ஆயுர்வேத பணியாளர்களின் வேலைநிறுத்தம்!
ஆயுர்வேத சுகாதார பணியாளர்கள் கடந்த 7 நாட்களாக முன்னெடுத்த பணிபகிஸ்கரிப்பானது சுகாதார அமைச்சுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை அடுத்து வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 நாட்களாக தமது ஆயுர்வேத பணியாளர்கள் முன்னெடுத்து வந்த போராட்டமானது நேற்று (20) மாலை அமைச்சின் செயலாளருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அவரின் சாதகமான பதிலை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளதாக அகில இலங்கை ஆயுர்வேத சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்துள்ளார். மேலும் நேற்றைய ஆர்ப்பாட்டமானது பொரல்லை ஆயுர்வேத வைத்தியசாலையில் இருந்து…
එප්පාවල ගින්නෙන් ලිපි ගොනු පිළිස්සුනත් එහි පිටපත් කොළඹ සුරක්ෂිතව තිබෙනවා – පොස්පේට් සභාපති පවසයි
– නිලුපුලී – අද එනම් (ජූනි 21) අළුයම 3.00ට පමණ ලංකා රාජ්යය පොස්පේට් සමාගමෙහි එප්පාවල කාර්යාලය පරිශ්රයේ ඇති වූ ගින්නෙන් සිදුව ඇති පාඩුව රුපියල් ලක්ෂ50-60ත් වන අතර ගින්නෙන් ලිපි ලේඛන විශාල ප්රමාණයක් විනාශ වුණත් ඒ ලිපි ලේඛන අතර තිබෙන අත්යවශ්ය සියලුම ලිපි ලේඛන පිටපත් කොළඹ පිහිටි ප්රධාන කාර්යාලයේ සුරක්ෂිතව ඇති බව ලංකා රාජ්යය පෝස්පේට්…
