News
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும்
மக்கள் வாக்குகளின் மூலம் தெரிவான மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு கால்களில் கொப்பளங்கள் வரும் வரை வீதிவலம் வருவதன்றி நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைவதாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று(31) முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்ற நாடெங்கிலும் 3100 கி.மீ பிரதேச வீதிகளை புனர்நிர்மாணம் செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்ச்சித்திட்டம் பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வீரபுர கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,…
சீன பிரமுகர்களுடன் பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு இணங்கவே கடன் பரிமாற்றங்கள்
சீன கடன்கள் பற்றிய கடன் பங்குமுதல் பரிவர்த்தனை இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஏப்ரல் மாதம் 7, 8 ஆம் ஆகிய திகதிகளில் பீஜிங் நகரில் சீன குடியரசின் ஜனாதிபதி ஷி ஜின்பிங், மற்றும் பிரதமர் லீ கெகியங் ஆகியோருடன் நடாத்திய கலந்துரையாடலுக்கு அமையவே அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அக்கலந்துரையாடலின்படி முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த கருத்திட்டம் பற்றி இலங்கை அரசாங்கத்துடன் தனியார் – அரச பங்காண்மை ஒன்றில் ஈடுபட விரும்புகின்ற சீன நிறுவனங்களை சீன…
பிரதமர் இன்று இந்தோனேஷியாவுக்கு விஜயம்
பிரதமர் ரணில் விக்கிமரசிங்க இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(01) இந்தோனேசியாவிற்கு புறப்படவுள்ளார். இந்தோனேசிய ஜகர்த்தா நகரில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக இஸ்லாம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு பிரதமர் ரணில் விக்கிமரசிங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பினைத் தொடர்ந்தே அவரது இவ்விஜயம் அமைந்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தோனோசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ (Joko Widodo), நிதியமைச்சர் சிறி முல்ஜானி இந்திரவதி (Sri Mulyani Indrawati), கடல்வலயத்திற்கு பொறுப்பான அமைச்சர்கள் உட்பட…
எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பது இரு பிரதான கட்சிகளை உள்ளடக்கி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விடுத்து இனவாதத்தை தூண்டி பாதயாத்திரை எனும் பெயரில் கட்சியை பிளவுப்படுத்த நினைக்கும் எந்தவொரு தீய சக்திகளுக்கும் நாம் அஞ்சப்போவதில்லை என மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். மேலும் பாதயாத்திரை எனும் பெயரில் மக்களை திசைத்திருப்பி தனிப்பட்ட சில நபர்களுக்காக அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி…
மூன்று அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள மூன்று அமைச்சுக்களுக்கு புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். வெளிவிவகார அமைச்சு, பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு மற்றும் தபால் சேவைகள் அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கே புதிதாக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக திரு.எசல வீரகோன் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் இராஜதந்திர சேவையில் உள்ள சிரேஷ்ட அதிகாரியான எசல வீரகோன், 1988இல் வெளிவிவகார சேவையில் இணைந்துகொண்டதுடன் அவர்…
மஹிந்த அணியினர்க்கு மைதானம் மறுப்பு
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையின் இறுதிநாளான இன்று பாதயாத்திரை கொழும்பை வந்தடையவுள்ள நிலையில் பொதுக்கூட்டத்துக்கான மைதானம் எதுவும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியினர் கண்டியிலிருந்து ஆரம்பித்த பாதயாத்திரை இன்று கொழும்பை வந்தடையவுள்ளது. காலை ஒன்பது மணியளவில் கிரிபத்கொடை நகரில் இருந்து ஆரம்பமாகும் பாதயாத்திரை கொழும்பை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் கூட்டு எதிர்க்கட்சி முன்னர் தீர்மானித்திருந்தது. அதற்காக வாசுதேவ நாணயக்கார பெயரில் கொழும்பு ஹைட்பார்க் மைதானமும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் ஹைட்பார்க்…
“பாதயாத்திரையின் நோக்கம் குடும்ப ஆட்சி”
“கூட்டு எதிரணியினர் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையால் அரசாங்கத்துக்கு எந்தவித சவால்களும் இல்லை. இந்த பாதயாத்திரையின் நோக்கம் மீண்டும் குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதா? ” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கேள்வியெழுப்பியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்து அரசாங்கத்தை உருவாக்கி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிக்கின்றனர். ஆனால், மற்றுமொரு தரப்பினர் பொதுமக்களை வீணாக பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சித்து வீதியில் இறங்கியுள்ளனர்” என அவர் மேலும் கூறினார்….
உலமாக்கள் தமக்குக் கிடைக்கும் பொறுப்புக்களை அமானிதமாகப் பயன்படுத்த வேண்டும்!
-சுஐப் எம்.காசிம் – உலமாக்கள் தமக்கு அமானிதமாகக் கிடைக்கும் பொறுப்புக்களையும், வளங்களையும் பொருத்தமான வகையில் நீதமாகப் பயன்படுத்த வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழாவில் பிரதமவிருந்தினராக அமைச்சர் றிசாத் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக அங்கு இடம்பெற்ற கண்காட்சியையும் அமைச்சர் அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். கல்லூரியின் அதிபர் மௌலவி அஷ்ரப் முபாரக் அல் ரஷாதி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், அதிதிகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான…
இன்று முதல் குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு
குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின் பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒரு குளிர்பான போத்தலுக்குள் 2-11 கிராம் சீனி மாத்திரம் அடங்கியிருந்தால் மஞ்சல் நிற குறியீடு…
6 ஆம் வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவிக்கு பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை
-ரெ.கிறிஷ்ணகாந் – மாவனல்ல கங்துன பிரதேச பாடசாலை ஒன்றில் ஆறாம் தரத்தில் கற்றுவ ரும் மாணவர்கள் சிலர், தமது வகுப்புக்கு புதிதாக வந்த மாணவியை பல்கலைக்கழக பாணியில் பகிடிவதை மேற்கொண்டமைக்காக எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆறாம் தரத்துக்கு புதிதாக வந்த மாணவி ஒருவர் அணிந்திருந்த சீருடையை, அங்கிருந்த மாணவர்கள் சிலர் இரண்டாக கத்தரித்து விட்டு, பின்னர் மாணவர்கள் மத்தி யில் நடந்துவருமாறு பணித்துள்ளனர். இதனையடுத்து, குறித்த மாணவி இது தொடர்பில் பாடசாலையின் அதிபருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் பகிடிவதை புரிந்த மாணவர்களிடம் அதிபர்…
11 எம்.பி. களுக்கு எதிரான மனு நிராகரிப்பு
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பதினொரு பாராளுமன்ற உறுப்பினர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் லங்கா ஜயவர்தன இன்று (01) பிறப்பித்துள்ளார். குறித்த 11 பேரும் நீதிமன்ற உத்ததரவினை மீறி மத்திய வங்கியின் ஆளுநருக்கு எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாக இந்த உத்தரவினை பிறப்பிக்குமாறு பொலிஸார் கோரியிருந்துமை குறிப்பிடத்தக்கது.
தீப்பெட்டி விலை அதிகரிப்பு!
தீப்பெட்டி ஒன்றின் விலை ஒரு ரூபாவினால் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும். தீப்பெட்டி தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
