News
விமான நிலைய, சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் கைதுவிமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய ஸ்ரீ லங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர், வரகாபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச வாகனங்கள் இரண்டை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தற்போது முன்னெடுத்துள்ள பாதயாத்திரைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், முன்னாள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயகவின் உருவச் சிலைக்கு சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினர். அதன்போது, விமான நிலைய மற்றும் விமான சேவை சங்கத்துக்கு சொந்தமான வாகனங்களை அலங்காரப்படுத்தி பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. tm
முஸ்லிம்களை தொட்டால் வெட்டுவோம் : வாளோடு வீதிக்கு வந்த சீக்கியர்கள் (Video)
சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் பஞ்சாப், பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா பயங்கரவாதிகள் பள்ளிவாசல் அமைந்துள்ள சாலை வழியாக ஊர்வலம் சென்றனர். அப்போது பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பள்ளிவாசலில் இருந்த முஸ்லிம்களுக்கும், சிவசேனா பயங்கரவாதிகளுக்கும் மோதல் உருவானது. இரு தரப்பிற்கும் இடையில் கற்கள் வீசப்பட்டது. சிவசேனாவுக்கு ஆதரவாக பாஜக, RSS, VHP பயங்கரவாதிகளும் கத்தி, அரிவாள், இரும்பு ராட் போன்ற ஆயுதங்களுடன் திரண்டனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மட்டுமின்றி அப்பகுதி முஸ்லிம்களும் விரைந்து வந்தனர். தகவலறிந்த…
மாற்று கட்சி அங்கத்தவர்கள் அ.இ.ம.கா. வில் இணைவு
-றிஸ்கான் முகம்மட் – நேற்று முன்தினம் (29) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனை தொகுதி அமைப்பாளரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்றம் விவகார செயலாளருமான ARM.ஜிப்ரி தலைமையில் அவரது சாய்ந்தமருது இல்லத்தில் வைத்து பல மாற்று கட்சி அங்கத்தவர்கள் அகில மக்கள் காங்கிரஸ்சியில் அங்கத்தவர்களாக அங்கத்துவம் பெற்று இணைந்து கொண்டனர்.
அமைச்சர் றிஷாத் ஊடாக விரைவில் தீர்வு!
-றிஸ்கான் முகம்மட் – கல்முனைகுடி கரைவலை மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையாக உள்ள கடல் கழிவு அகற்றும் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நேற்று முன்தினம் (29) இரவு மட்டுப்படுத்தப்பட்ட கரைவலை மீனவர் கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் சங்க தலைவர் முகம்மட் சப்றாஸ் (நளிம்) தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவாகர செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரியிடம் மீனவர்களின் மிக நீண்ட கால பிரச்சினையான கடல்…
அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது!
– சுஐப் எம்.காசிம் – அரசியல் இருப்பு, பிழைப்புகளுக்காகத் தமிழ்மொழி பேசும் இரண்டு சமூகங்களைத் தொடர்ந்து மோதவிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மினுவாங்கொடை, கல்லொலுவ வஸீலா சாஹிர் எழுதிய “ நிலவுக்குள் சில ரணங்கள் “ சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கொழும்பு, அல்/ஹிதாய மஹா வித்தியாலயத்தின், பஹார்தீன் மண்டபத்தில் இன்று காலை (30/07/2016) நடைபெற்றபோது அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம…
பாத யாத்திரை: எதைப் பிடுங்கப் போகிறீர்? (Article)
-எம்.ஐ.முபாறக் – நீண்ட காலமாக ஊழல்,மோசடிமிக்க ஆட்சியை நடத்தி அதன் ஊடாக இஷ்டம்போல் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த மஹிந்த தரப்பால் ஆட்சி, அதிகாரம் இல்லாமல் வாழ்வது மிகவும் கஷ்டமான காரியமாகும். எதையாவது செய்து ஆட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும்அதே பழைய ஊழல் ஆட்சியை நிறுவி பழைய சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதில் அவர்கள் குறியாகவே இருக்கின்றனர். தங்கள்மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்கள் இருந்தும்கூட-அதற்கான ஆதாரங்கள் இந்த அரசிடம் உள்ளபோதிலும் கூட, இந்த அரசை ஊழல், மோசடிமிக்க அரசாகக்…
மூளையை பாதிக்கும் செயல்கள்
நமது உடம்பின் தலைமைச்செயலகமான மூளையைக் காக்க, சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்திருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும். அதேநேரம், அதிகமாகச் சாப்பிடுவது, மூளையின் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்கு வழிவகுக்கும். புகை பிடிப்பது, மூளை சுருங்கவும், அல்சைமர் வியாதி ஏற்படவும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவது, புரதம் நமது உடலில்…
இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண் டென்மார்க்கின் துணை விமானியானார்
இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார். ஆஸ்திரியா சென்று இதற்கான விசேட கல்வியை பெற்று டென்மார்க் திரும்பியியுள்ள அர்ச்சனா செல்லத்துரை, வர்த்தக விமான சேவையில் தமிழ் பெண்கள் விமான ஓட்டிகளாக வருவதற்கான வாய்ப்புக்களை நோக்கி எமது கனவுகள் விரிவடைய வேண்டும் என்றும், அடுத்து போயிங், எயார் பஸ்…
தற்காலிகமாக மூடப்படும் யால வனவிலங்குகள் சரணாலயம்!
யால தேசிய வனவிலங்குகள் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி வரை இது மூடப்படுவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விலங்குகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் சரணாலயம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விலங்குகளின் இயற்கை நடத்தைகள் குறுக்கீடு இல்லாமல் இடம்பெறுவதற்கும் யால வனவிலங்குள் சரணாலம் மூடப்படுவதாக வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை ஒவ்வொரு வருடமும் குறித்த காலப்பகுதியில், யால சரணாலயத்தை தற்காலிகமாக…
நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் – மஹிந்த
நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புகின்றனர். அதன் வெளிப்பாடு பாதயாத்திரை ஊடாக உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பாதயாத்திரையை குழப்புவதற்கு முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் கொழும்பை நோக்கி செல்வதை யாராலும் தடுத்துவிட முடியாது. பொதுமக்கள் எம்முடன் உள்ளமை உலகிற்கு வௌிப்பட்டுள்ளது. ஆகவே தடைகளை கடப்பது கடினமான விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க மருத்துவப்பரீட்சை எழுதுவதற்கு தயார்!
தாம், உயர்கல்வி அமைச்சு நடத்துகின்ற மருத்துவ பரீட்சைக்கு தோற்றுவதற்கு தயாராகவே இருப்பதாக மாலபே தனியார் மருத்துவக்கல்லூரியின் மாணவர்கள் அறிவித்துள்ளனர். மாலபே மருத்துவக்கல்லூரியில் பயின்று வெளியேறியுள்ள முதலாம் ஆண்டு மாணவர்கள் சார்பில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த, மாணவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பெற தவறும் 82 வீதமான மாணவர்கள், அவர்களின் மருத்துவர்களாக வரும் கனவை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என தமது தனியார் கல்லூரியை எதிர்ப்போரிடம் மாணவர் தலைவர் தரிந்து ருவன்பதிரங்கே கேள்வி…
டைம்ஸ் நவ் ஊடகத்திற்கு எதிராக 500 கோடி கேட்டு வக்கீல் நோட்டீஸ் – ஷாக்கீர் நாயக் களத்தில் குதிப்பு
பிரபல ஆங்கில செய்தி சேனலான ‘டைம்ஸ் நவ்’ நிறுவனத்தின் தலைமை செய்தி ஆசிரியர் தன்னை தொடர்புப்படுத்தி, தொடர்ந்து வெறுப்பு பிரசாரம் செய்வதாககூறியும், அவரிடம் இருந்து இழப்பீடாக ரூ.500 கோடி கேட்டும் இஸ்லாமிய பிரசாகரான ஜாகிர் நாயக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
