News
பசில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரச சொத்ததுக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் பசில் ராஜபக்ஷ கடந்த ஜுலை 18 ஆம் திகதி…
பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய இன்று முதல் பஸ் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பல்வேறு வரிகளின் அதிகரிப்பு என்பவற்றைக் கருத்திற்கொண்டு பஸ் கட்டண உயர்வுக்கு சிபாரிசு செய்யுமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் நடைமுறையில் இருக்கும் பஸ் கட்டணத்தை ஆறு வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. இதுவரை காலமும் வழக்கத்தில் இருந்த ஆரம்பக் கட்டணமான எட்டு…
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய இரத்த தான முகாம்
தகவல்: உக்குவெல அஸ்லம் – கடார் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் – உக்குவெல கிளை (31.07.2016) நடத்திய இரத்த தான முகாம் நிகழ்வில் 96 நபர்கள் கலந்து கொண்டு 69 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் – அல்ஹம்து லில்லாஹ். உக்குவெல கிளை சகோதரர்கள் மிகவும் சிரமம் பாராது தியாகத்திற்கும் மத்தியில் பல்வேறு நிதி சிரமங்கள் மத்தியில் இதனை ஆர்வமாக நடத்தி முடித்தார்கள் இதில் குறிப்பிட வேண்டியஅதிகாமான சிங்களவர்கள் பாதுகாப்பு சிப்பாய்கள்,மற்றும் பிற சமூகங்களும் பங்கேற்றன….
உயிர் பிரியும்வரை போராடுவோம்
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொள்கை ஐக்கிய தேசிய கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. உண்மையான சுதந்திரக் கட்சியின் கொள்கையுடன் பண்டாரநாயக்கவின் சமாதிக்கு முன்னால் செல்வதை கௌரவமாக நினைக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ் தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சின் பாதயாத்திரை நேற்று ஹொரகொல்ல பகுதியே தாண்டும்போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், உண்மையான சுதந்திர கட்சியின் கொள்கையுடன் கூடிய ஆட்சியை ஏற்படுத்தவே நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டு செல்கின்றோம். இன்று சுதந்திரக்கட்சியின்…
முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு!
முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் இன்று முதல் கிலோ மீட்டருக்கு 5 ரூபா வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுய தொழில் ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார். இரண்டாவது கிலோ மீட்டரில் இருந்து இவ்வாறு கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வற் வரி அதிகரிப்பால் முச்சக்கர வண்டிகள் மற்றும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால், முச்சக்கரவண்டிக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை…
க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பம்
இம்முறை உயர்தர பரீட்சை 2,204 பரீட்சை மத்திய நிலையங்களில் நாளை முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். இம்முறை கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 605 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், இவர்களில் 2 இலட்சத்து 40 ஆயிரத்து 991 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் எனவும், 74 ஆயிரத்து 614 தனியார் பரீட்சார்த்திகள் அடங்குகின்றனர்.
கொழும்பை நோக்கி படையெடுக்கும் பாதயாத்திரை!
கடந்த 28ஆம் திகதி கண்டியிலிருந்து கூட்டு எதிர்க்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட பாதயாத்திரையானது இன்று இறுதி நாளுக்கு வந்துள்ளது. நேற்று மாலை கிரிபத் கொடையை வந்தடைந்த இவர்கள் இன்று காலை கொழும்பை நோக்கி படையெடுத்துள்ளனர். இன்று மாதத்தின் முதல் நாள், வாரத்திலும் முதல் நாள். கொழும்பு தலைநகரம் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படும். அதிலும் இன்று மக்கள் மத்தில் ஒரு பதட்டமான நிலை காணப்படுகின்றதை எம்மால் அவதானிக்கக்கூடியவாறு இருக்கின்றது. இந்த பாதயாத்திரை கொழும்பை நெருங்கிக்கொண்டு இருக்கின்றது. ஆனால் கொழும்பில் இவர்கள் எங்கு…
இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் – சீமான் (வீடியோ)
இந்திய ராணுவத்தால் காஸ்மீர மக்கள் படு கொலை செய்யபடுகிறார்கள் நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசமாக கூறியுள்ளார் காஸ்மீரில் இந்திய ராணுவத்தால் இதுவரை .92- ஆயிரம் பேர்கள் படுகொலை, 10000- ஆயிரம் பெண்கள் கற்பழித்து கொலை 22- ஆயிரம் விதவைகள் உள்ளார்கள் இலட்ச கணக்கான குழந்தைகள் அனாதையாக உள்ளார்கள். . ஈராக்கிலும், ஈரானிலும், இலங்கையில், நடந்தது காஷ்மீரில் நடக்குது. . காஷ்மீர் மக்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் அவர்கள் தீவிரவாதிகள் அல்ல தன் உரிமைக்காக போராடும் போராளிகள்.
வாட்ஸ் ஆப்’-ஐ அழித்து விடுங்கள் – ஆப்பிள் பாதுகாப்பு வல்லுனர்
பேஸ்புக்கின் வசமுள்ள ‘வாட்ஸ் அப்’ தற்போது அதில் மேற்கொள்ளப்படும் உரையாடல்களை என்கிரிப்டு செய்து 3-வது நபர் பார்க்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு வசதியை வழங்கி வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப் உரையாடல்களை நாம் அழித்துவிட்டாலும் அது முற்றிலுமாக அழியாது என ஆப்பிள் இயங்குளத்தின் பிரபல பாதுகாப்பு வல்லுனர் ஜோனதன் செட்சியார்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘வாட்ஸ் ஆப்’-பில் உரையாடல்களை நாம் டெலிட் செய்தாலும், கிளியர் செய்தாலும் அல்லது ‘Clear all chats’ மூலமாக அழித்தாலும் அந்த…
பால் குடித்த குழந்தை உயிரிழப்பு
செல்வநாயகம் கபிலன் தாய்ப்பால் அருந்திய 2 ½ மாத பெண் குழந்தை மூச்சுத்திணறி சனிக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். பாரதிபுரம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சிவதாசன் கிசானா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. காலை 7 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுத்த தாய், காலை உணவை சமைத்து முடித்து விட்டு, 9.30 மணிளவில் குழந்தையை தூக்கியுள்ளார். இதன்போது, குழந்தை எவ்வித அசைவும் இன்றி உடல் குளிர்வடைந்து இருந்தத்தை கண்ட அவர், உடனடியாக குழந்தையை யாழ்….
கிழக்கு பல்கலையில் ஆர்ப்பாட்டம்
-ஜவ்பர்கான் – கிழக்கு பல்கலைகழக மருத்துவபீட மாணவர்கள் இன்று நண்பகல் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் ஈடுபட்டனர். பல்கலை கழகத்தில் நிர்மாணிப்பதற்கென முன்னாள் உயர்கல்வி அமைச்சரால் அடிக்கல் நடப்பட்ட கட்டிடம் பூர்த்திசெய்யப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்படாமை மற்றும் மாணவர்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாமை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து இவ்ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
சமாதியை கடக்கும் போது சத்தமில்லை
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாதயாத்திரை, ஹொரகொல்லையில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு முன்பாக செல்கையில், எவ்விதமான சத்தமும் இன்றி, கொடிகளை கீழே பணித்தவாறு கடந்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதனைச் செய்தாலும், அவருடைய பெற்றோர்களான எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகிய இருவரும் நாட்டுக்கு செய்த சேவையை மறக்கமுடியாது. ஆகையால்தான், அவர்களின் சமாதிக்கு கௌரவம் செலுத்தினோம் என்று பாதயாத்திரையின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
