News
இந்தோனேசிய ஜனாதிபதி – பிரதமர் ரணில் சந்திப்பு
-ஆர்.ராம் – இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தோனேசிய நேரப்படி 9.30 மணியளவில் ஜகர்த்தாவில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் வைத்து சந்தித்தார். இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார், இந்தோனேசிய ஜனாதிபதியின் முதற்பெண்மணி, பிரதி நீதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர். இச் சந்திப்பின் போது, இலங்கையின் வர்த்தக பொருளாதார கலாசார துறைகளை…
புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக ரூ. 1200 கோடி
புற்றுநோயாளர்களின் சிகிச்சைகளின் பொருட்டு, இலவச மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்குமாறு கோரி அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்கான பிரதான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அண்மைக்காலமாக இலங்கை பல்வேறு தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இதனால் அநேகமான நாடுகளின் பார்வை இலங்கை மீது திரும்பியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது. அந்த வகையில் தற்போது இலங்கை மக்களுக்கு புற்றுநோய் குறித்த…
அதிக தற்கொலை இடம்பெறும் 5 நாடுகளுள் இலங்கை
உலகில் கூடுதலாக தற்கொலை செய்துகொள்ளும் மக்கள் உள்ள ஐந்து நாடுகளுள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதற்கு உடல் மற்றும் மன நிலையில் அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதே முக்கிய காரணமாகும். இதனை யோகா உடற் பயிற்சி முறை மூலம் சமநிலைப்படுத்தலாம் என களனி பல்கலைக்கழகத்தின் வெகுசனத் தொடர்புத்துறை பேராசிரியர் கலாநிதி ரோஹன லக் ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
பாராளுமன்ற உப குழு தென்னாபிரிக்காவுக்கு விஜயம்
தென்னாபிரிக்கா அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை சரத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கையின் பாராளுமன்ற குழுவொன்று தென்னாபிரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது. பாராளுமன்ற உப குழுவின் உறுப்பினர்களான ஏ.அரவிந்தகுமார், எஸ்.சிறிதரன் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, வைத்திய கலாநிதி துசித்த விஜயமான்ன, அதுரலியே ரத்தினத்தேரர் மற்றும் சல்மான் ஆகியோரே இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படவுள்ள நிலையில், அடிப்படை உரிமைகளை சரியான முறையில் அமுல்படுத்தும் நோக்கத்திலேயே குறித்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குழு தென்னாபிரிக்காவின் சட்ட…
தேர்தல் சட்டத்தை திருத்த தீர்மானம்
2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூராட்சிமன்ற தேர்தல் சட்டத்தை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சரவைக்கு பணிப்புரைகளை சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் பைசர் முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். ரவூப் ஹக்கீம், சுசில் பிரேமஜெயந்த, வஜிர அபேவர்த்தன, ரிஷாட் பதியூதின், மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக, விஜயதாஸ ராஜபக்ஷ மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் இந்த…
முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் உயிர்த்தியாகி அலி உதுமான்
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி உதுமானின் உயிர்த்தியாகம் மறக்கப்பட முடியாதொன்றாகும். இவ்விடத்தில், “தியாகிகள் மரணிப்பதில்லை” என்ற மாபெரும் தலைவர் அஷ்ரப் அவர்களின் கூற்றை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இஸ்லாத்தின் வரலாறு இரத்தங்களாலும் பல யுத்தங்களாலும் வரையப்பட்ட காவியமாகவே இருக்கின்றது. முஸ்லிம்களுக்கென்று அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கிய மர்ஹூம் அஷ்ரபோடு ஆரம்ப காலத்தில் 1980 களில் இருந்து ஒன்றாக பாடுபட்ட அலி உதுமான் அவர்கள் 1989 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தீவிரவாதிகளின்…
மாடறுப்புக்கு எதிராக சிங்ஹ லே போராட்டம்
இலங்கையில் மாடுகள் அறுப்பதற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கப்போவதாக சிங்ஹ லே அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த கால அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இப்போராட்டத்தை ஆரம்பித்து இலட்சக்கணக்கானோரின் கையொப்பத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்தும் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என அவ்வமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. மாடுகள் அறுப்பதற்கு எதிரான சிங்ஹ லே அமைப்பின் கோரிக்கைகளை மீண்டும் ஜனாதிபதியிடம் முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் முன்னாள்…
ஹிலாரி கிளிண்டன் ஒரு சாத்தான்: டிரம்ப் கடும் தாக்கு
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தில் ஹிலாரி கிளிண்டனை சாத்தான் என டிரம்ப் கடுமையாக தாக்கினார். வருகிற நவம்பர் 8-ந்தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். அதிகார பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் சூடு பிடித்தது. ஹிலாரி கிளிண்டனும், டொனால்டு டிரம்பும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த…
டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரிப்பு
உயர்தரப்பரீட்சைகள் நடைபெறும் அநேக மத்திய நிலையங்களில் டெங்கு நுளம்புகள் அதிகம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த பாடசாலைகளின் அதிபர்களும், கல்வி அமைச்சும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் டெங்குவின் தாக்கம் அதிகம் உள்ள மத்தியநிலையங்களுக்கு பரீட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பு புகை விசிறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பாடசாலைகளுக்கு புகை விசிறும் நடவடிக்கையானது பாடசாலைகள் 3ஆம் தவணைக்காக ஆரம்பிப்பதற்கு முதல் மேற்கொள்ளப்படும் எனவும்…
காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் – அ.இ.ம.கா
காஷ்மீர் மக்கள் மீது இந்திய இராணுவத்தால் நடத்தப்படும் கொடுமைகளையும் – உரிமை மீறல்களையும் அ.இ.ம.கா வன்மையாகக் கண்டிக்கிறது கடந்த சில நாட்களாக காஷ்மீர் மக்களுகெதிராக நடத்தப்படும் இந்திய இராணுவத்தின் அடாவடித்தனம் மற்றும் மனித படுகொலைகள் மனித நேயத்தையும் மனித தர்மத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது, தமது நாட்டு மக்களை தமது இராணுவமே கொன்று குவிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. பலஸ்தீன், ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் நடக்கும் மனித படுகொலைகளுக்கு, காஷ்மீரில் நடக்கும் கொலைகள் இரண்டாம் தரத்தில் இல்லை. இந்தியாவில்,…
ஜனாதிபதி சட்டத்தரணிக்கு புதிய பதவி
ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இத்தாலி, மோல்டா, சைப்ரஸ், எல்பேனியா ஆகிய நாடுகளுக்கான தூதுவராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ?
இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை தழுவியது யார் தெரியுமா ? கிழியும்ஆயோக்கியர்களின் முகத்திரை…..!! ஏதோ இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது. முகலாயர்கள் வருகைக்கு பின்னர் தான் இஸ்லாம் இந்தியாவில் நுழைந்தது என்ற பொய்யை மீண்டும் மீண்டும் கூறிவரும் பொய்யர்களுக்கு இந்தியாவில் முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்ற நபர் யார் என்று தெரியுமா… ? சேரவம்சத்தை சேர்ந்த சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா. இவரது ஆட்சி இன்றைய கேரளா மற்றும் தமிழகத்தின் தென் பகுதியில் இருந்தது. இவர் இஸ்லாத்தை ஏற்றது…
