News
எட்டு விதமான சொர்க்கங்கள் யார் யாருக்கென்று தெரியுமா
முதலாவது சொர்க்கம் – ஜன்னத்துல் பிர்தௌஸ் 1) போதும் என்ற மனம் கொண்டவர்கள். 2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள். 3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள். 4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள். இரண்டாவது சொர்க்கம் – தாருஸ் ஸலாம் 1) அனாதைகளை ஆதரிப்பவர்கள். 2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள். 3) ஸலாம் சொல்பவர்கள். 4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள். மூன்றாவது சொர்க்கம் – ஜன்னத் அத்னு 1) பேச்சை குறைப்பவர்கள். 2) தூக்கத்தை…
கல்விமான்கள் அமைதி காப்பது நாட்டின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தடையாகவுள்ளது
நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை எதிர்காலத்தில் பிறக்கவுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அவற்றைத் தீர்ப்பதற்கு கல்விமான்களும் புத்திஜீவிகளும் முன்வர வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார். நேற்று முந்தினம் (08) பிற்பகல் பத்தரமுல்ல வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்ற ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பழைய மாணவர்கள் சங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
தொழில் வாய்ப்புக்கான புதிய சந்தையில் நிறைவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது
சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வெளிநாட்டு பணியாளர்களுக்கு அந்நாட்டில் தொழில்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கு ஏனைய தொழில் வாய்ப்பு சந்தை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் ஊடகவியலாளர்கள் மத்தியில் இது தொடர்பாக குறிப்பிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்ததினாலேயே தற்போதய நிலை ஏற்பட்டது. எரிபொருள் நிலை வீழ்ச்சி ஒரு வருடத்திற்கு முன்னரிலிருந்தே ஆரம்பித்தது. இந்த நிலை கடந்த காலங்களில் பெரும் பொருளாதார…
சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள்
தாய்லாந்தில் சிஅன்காமாய் என்ற நகரில் நடைபெறவுள்ள 2016 சர்வதேச கணித போட்டியில் இலங்கை மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளவனர். இம் மாதம் 14 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்களுக்கான விமான பயணச்சீட்டுக்களை கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சமீபத்தில் வழங்கினார். தேசிய ரீதியில் தகுதி பெற்ற அணித்தலைவர்கள் நான்கு பேருக்கும் 16 மாணவர்களுக்குமான விமான பயணச்சீட்டுக்கள் இதன் போது வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை தாய்லாந்தின் அடிப்படை கல்வி…
வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை
வழக்கு விசாரணை தாமடைவது தனிப்பட்டவர்களுக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பெரும் பாதிப்பாகுமென்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியசாத் டெப் மற்றும் புவனேக அலுவிகார (Priyasad Depp and Buwaneka Aluwihare) ஆகியோர் தலைமையில் வழக்குகள் தாமதமடைவதை தவிர்ப்பதற்கு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பி்ட்டார். வழக்கு விசாரணை தாமதமடைவது குறித்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டதையும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார். நீதியமைச்சு கொழும்பு…
போர் விமானங்கள் 8ஐ கொள்வனவு செய்ய அனுமதி
ஜெட் ரக போர் விமானங்கள் 08 ஐ, இலங்கை விமானப் படைக்குக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது.
முகாமைத்துவ பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் 15ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். விஞ்ஞானபீடத்தைச் சேர்ந்த தமிழ் – சிங்கள மாணவ குழுக்களுக்கிடையில் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கைகலப்பின் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதம் 20 ஆம் திகதி மருத்துவ, விவசாய மற்றும் சித்த வைத்திய பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தன. அதனைத்தொடர்ந்து, ஜூலை…
கோரிக்கையை வாபஸ் பெற்றார் நிசாந்த
இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்க ஜக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்காக கொழும்பு மேல் நிதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அவரின் சட்டத்தரணியால் இன்று (10) வாபஸ் பெற்றுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை குறித்த அனுமதியை பெற்றுத்தருமாறு இவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் நிசாந்த ரணதுங்கவிடம் கடவத்தை நீதவான் நீதிமன்றில் விசாரணை இடம்பெற்றுவரும்…
பள்ளியிலிருந்து வெளியேறியவர் பலியான பரிதாபம்
-க.கிஷாந்தன் – வெலிமடை குருதலாவ பிரதேசவாசி ஒருவர் வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது கால் தவறி 20 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று வெலிமடை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருதலாவ ஜீம்மா பள்ளிவாசலில் நேற்று மாலை தனது வழமையான தொழுகையை முடித்துவிட்டு பள்ளிவாசலிலிருந்து வெளியேறிய போது பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பற்ற…
சீ.எஸ்.என் மோசடி விவகாரம்: நிதியை இடமாற்ற உத்தரவு!
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் சட்டவிரோதமான முறையில் சேகரிக்கப்பட்ட நிதி 157.5 மில்லியன் பணத்தை மத்திய வங்கிக்கு இடமாற்றுமாறு கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார். நிதி மோசடி விசாரணை பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு கடுவலை நீதவானால் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முஸாமிலுக்கு பிணை!
நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த மொகமட் முஸாமிலைபிணையில் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் மொகமட் முஸாமில் சற்று முன்னர் முன்னிலையானபோதே நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில்கடந்த மாதம் 20ஆம் திகதி முஸாமில் கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுகிறது: பாகிஸ்தான்
காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் புகார் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் மற்றும் மனித உரிமைக்கான ஐ.நா.வின் உயர் ஆணையர் அல் ஹூசைனிடம் இந்த புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் ”ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ச்சியாக மற்றும் அதிர்ச்சியுண்டாக்குகிற வகையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தனித்தனி கடிதங்களிலும்…
