News
பாரிய பெருந்திட்டம் ஆரம்பம்!
இறப்பர் தொழில்துறையினை நவீன மயப்படுத்த நாம் கடினமான சிரமங்களை எதிர்கொள்கிறோம். உலகசந்தையின் நிலைமை, வழங்கல் துறையில் காணப்படுகின்ற தடைகள், தொழில்நுட்பக் குறைபாடுபோன்றவை எமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. மேலும் இத்துறையின் வளர்ச்சிக்கு செயற்கைஇறப்பர் இறக்குமதி மீதான இடர்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார். கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வதேசஇறப்பர் மற்றும் பிளாஸ்டிக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமஅதிதியாக கலந்துக்கொணடு…
ரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா
இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள சீனா 5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேவேளை அவுஸ்திரேலிய, இத்தாலி போன்ற நாடுகள் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன. இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையிலான…
பாகிஸ்தான் குண்டு வெடிப்பு: இலங்கை கண்டனம்!
பாகிஸ்தானின் குவேட்டா நகரில் வைத்தியசாலைக்கு அருகில் நேற்றைய தினம் (8) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 70 பேர் உயிரிழந்தமை மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் கணக்கிலேயே இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பங்கள், நண்பர்கள் தொடர்பில் தாம் பிரார்த்தனை செய்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
கால்நடை மருத்துவர்கள் இன்று (9) காலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 48 மணித்தியாலங்களுக்கு முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் விலங்கு உற்பத்தி, சுகாதார துறையில் அரசியல் திருத்தம், சம்பள பிரச்சினைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று சந்தைகளில் இறைச்சிகளை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொள்ளுவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் இறைச்சிகளை…
ரியோ ஒலிம்பிக் ; இலங்கைக்கு தொடரும் ஏமாற்றம்
ரியோ ஒலிம்பிக்கில் நேற்று (8) இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்ற இலங்கை, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது. ஆண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் பழு தூக்கல் போட்டியில் பங்கேற்ற என்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரிய போட்டியை நிறைவுசெய்யாமல் வெளியேறினார். இந்நிலையில் 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் மங்கள சமரகோன் 50 ஆவது இடத்தை பெற்று போட்டியிலிருந்து வெளியெறினார். இதேவேளை ஒலிம்பிக் ஜுடோ போட்டியில் பங்கேற்ற ரிப்பியல்லகே சமீர 9 இடத்தை பெற்று…
புதிய தொழில்நுட்ப பீடத்தினை ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்
காலி, மல்ஹறுஸ் ஸுல்ஹிய்யா மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய தொழில்நுட்ப பீடத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாணவர்களிடம் கையளித்தார். அறிவை மையமாகக் கொண்ட அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளை மீள்நிர்மாணிக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் இத்தொழில்நுட்ப பீடம் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலைக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் ஆரவாரமாக வரவேற்றனர். அதன் பின்னர் பெயர்பொறி கல்லினை திரைநீக்கம் செய்து புதிய தொழில்நுட்ப பீடத்தை…
புதிய வரிக்கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும்
வற் வரியில் இடம்பெற்றுள்ள தவறுகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே நாட்டில் நிலையான அபிவிருத்தி ஏற்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு புதிய வரிக் கொள்கையை அறிமுகப்படுத்த வேண்டும். அதில் தேசிய உணவு உற்பத்திக்கு சலுகை வழங்க வேண்டும் என அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். ‘தேசிய நுகர்வோர் வலையமைப்பு’ எனும் அமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. அது தொடர்பில் தெளிவுறுத்ததும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும்…
ஒரே மாதத்தில் 200 மில்லியன் டாலர்களை வருவாய் ஈட்டி சாதனை படைத்த போக்கிமோன் கோ
கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் 200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி…
தகவல் அறியும் சட்டத்திற்கு சபாநாயகர் கையெழுத்திட்டார்
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய கையெழுத்திட்டுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டமூலமானது அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த யூன் மாதம் 24 ஆம் திகதி தகவலறியும் சட்டமூலம் சில திருத்தங்களுடன் வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சபாநாயகர் கரு ஜயசூரிய அச்சட்ட மூலத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்றத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க தஸாநாயக்க, பிரதி பொதுச் செயலாளர் நீல் இட்டவெல ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.
பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் ! நபர் கைது
கடந்த சனி நள்ளிரவு பொரலஸ்கமுவ பிரதேச பள்ளிவாயல் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கை தொடரும் நிலையில் இன்னும் ஒருவர் அல்லது இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதர சந்தேக நபர்கள் தொடர்பில் கண்டறிய பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வங்கி ஒன்றின் சிசீ டிவி யை பரீசீலனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன் ஏற்றுமதியில் இலங்கை முன்னேற்றம்
மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 11 ஆம் இடத்திலிருந்து ஏழு இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்தை பிடித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளுக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கப்பட்ட இரண்டு மாதங்களில் குறித்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் அலங்கார மீன் ஏற்றுமதியின் மூலம் கடந்த வருடத்தில் மாத்திரம் 2400 மில்லியன் ரூபா அரசுக்கு வருமானம்…
