News
இந்த மாணவனை கண்டுபிடிக்க உதவுங்கள்
சாய்ந்தமருதை சேர்ந்த K.M. இப்ராத் என்ற மாணவன் நேற்று (14) கொழும்பிலிருந்து பஸ்ஸில் தனது ஊருக்கு பயணித்தவர் இன்னும் வீடு சென்றடையவில்லை. இடை வழியில் எந்த தொடர்புகளும் இல்லாத நிலையில் காணாமல் போயுள்ளார். இவரை கண்டுபிடிப்பதற்கு உதவுமாறு இவரது பெற்றோர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவர் பற்றிய தகவல்கள் தெரிந்தோர் 0777118327 / 0773447490 / 0773165295 என்ற இலக்கத்துக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கின்றனர்.
ஹாட்ரிக் தங்கம் வென்றார் உசேன் போல்ட்
ரியோ ஒலிம்பிக்கில் எந்த நாடு எத்தனை பதக்கம் வெல்கிறது என்பது ஒரு கணக்கு என்றால். 100மீ பந்தயத்தில் போல்ட் எத்தனை நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வெல்வார் என்பது தான் மற்றோரு கணக்கு. உலகின் அதிவேக மனிதர் உசேன் போல்ட் ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? தொடர்ந்து மூன்றாவது முறையால ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வாரா? என்ற கேள்விகளோடு களமிறங்கினார் போல்ட். அனைவரும் எதிர்பார்த்த 100 மீட்டர் போட்டி தூரத்தை 9.81 நொடிகளில் கடந்து தங்கம் வென்றார். இந்த…
வவுனியாவுக்கான பொருளாதார மையம் தேக்கவத்தையில் : கூட்டத்தில் முடிவு
நீண்டகாலம் இழுபறி நிலைக்குள்ளாகியிருந்த வவுனியாவுக்கான பொருளாதார மையத்தை, வவுனியா தேக்கவத்தையில் அமைப்பதற்கான முடிவு இன்று காலை (15/08/2016) ஏகமானதாக மேற்கொள்ளப்பட்டது. வவுனியா அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.புஷ்பகுமார தலைமையில் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், முதலமைச்சரின் செயலாளர் வி.கேதீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், இந்தத் தீர்க்கமான முடிவு மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை வவுனியா கச்சேரியில் இடம்பெற்ற கூட்டத்தில் வவுனியா விவசாய சங்கப் பிரதிநிதிகளும், வவுனியா…
தமிழ்த் தலைமைகளுக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத்தும் அஸ்மின்: மௌலவி சுபியான் குற்றச்சாட்டு
-சுஐப் – தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் இலங்கை அரசும் சர்வதேசமும் ஈடுபாடு காட்டிவரும் இந்தக் காலகட்டத்தில் “வடக்கு முஸ்லிம்களின் விடயத்தை ஓர் அரசியல் ரீதியான விடயமாக நோக்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று வடமாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் தெரிவித்துள்ள கூற்றை வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் தலைவர் மௌலவி பி.ஏ.சுபியான் வெகுவாகக் கண்டித்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் போனஸ் ஆசனம் மூலம் அக்கட்சியினால் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்…
கடைகளை மூடுவதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது!
கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன் மூலமே என்றும்அவர் தெரிவித்துள்ளார். அதைவிடுத்து கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகைளையும்,சுற்றுநிருபங்களையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்,விலச்சி மற்றும் கொக்கிச்சி பிரதேச மக்களை சந்தித்த போதே அமைச்சர்ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இங்குள்ள விவாசாயிகளை…
மாலபே வைத்திய கல்லூரி மாணவர்களுக்கு நட்டஈடு
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை விடுமாறும் இந்த சங்கத்தின்…
இந்திய சுதந்திர தின விழா: மோடி உரை
இந்திய சுதந்திர தினவிழா இன்று (15) இந்திய நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தின உரையாற்றினார். பிரதமர் மோடியின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார். கொடியேற்றிய பிறகு பிரதமர் மோடிக்கு முப்படையினர் அணிவகுப்பை பார்வையிட்டார். அதன் பின்பு பேசிய பிரதமர் மோடி இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை…
சட்டவிரோத மிருகக்காட்சிசாலை
சுற்றுலாத்துறையினரின் பார்வைக்காக சட்டவிரோதமான முறையில் வனவிலங்குகளைத் தடுத்துவைத்திருந்த ஒருவரை தம்புள்ள பிரதேசத்தில்வைத்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்படி சட்ட விரோத மிருகக்காட்சி சாலை தம்புள்ள பிரதேசத்திலுள்ளகபுவத்தை என்ற இடத்தில் இடம் பெற்று வந்துள்ளது. சீகிரிய வன விலங்குகள்திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்படி நேற்று இம்முற்றுகை இடம் பெற்றுள்ளது. ஒரு ஹோட்டலின் பின் பகுதியில் இரும்புக் கம்பிகளால் அமைக்கப்பட்டகூடுகளில் இவை அடைக்கப்பட்டிருந்த வேளை அதிகாரிகள்கைப்பற்றியுள்ளனர். மேற்படி விலங்குகள் காயமடைந்திருந்ததன் காரணமாக வைத்தியசிகிச்சைக்காக அவற்றை தாம்…
புத்தெழுச்சி பெற்றுள்ள நோர்வே இலங்கைக்கிடையிலான உறவு
நோர்வே பிரதமர் எர்னா சோல்பெக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தினூடாக இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு புத்தெழுச்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோர்வே பிரதமர் இலங்கைக்கு வந்ததன் மூலம் இரண்டு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்தவும் மீள்உருவாக்கம் செய்யவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. விசேடமாக இரண்டு நாடுகளினதும் அர்ப்பணிப்பு புத்தொழுச்சி பெற்றுள்ளது. நோர்வே பிரதமர் எர்னா சொல்பெக் ஐ.நா. செயலாளர் பான்கீமூனினால் நிரந்தரமான அபிவிருத்தி இலக்கு குழுவின் இணைத்தலைவராகவும்…
காஷ்மீர் சுதந்திரம் வெகு தொலைவில் இல்லை – பாகிஸ்தான்
-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் – பாகிஸ்தான் இன்று தனது 70-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடுகிறது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினவிழாவை கொண்டாடிய அந்நாட்டு தூதர் அப்துல் பாசித் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா உடனான உறவை மேம்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வருட சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்காக சமர்பிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்களின் தியாகம் வெற்றியடையும் என்று எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலைக்கு நாங்கள் எப்போதும் ஆதரவு கொடுத்து…
இணைந்து செயற்படத் தயார்!- சந்திரிக்கா
கடந்த அரசாங்கத்தினால் பாழடிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஐக்கியதேசிய கட்சியுடன் இணைந்து கொள்ள தீர்மானித்தமையில் எந்த தவறும் இல்லை என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் நாட்டை முன்னோக்கி கொண்டுச்செல்லவும் யாருடன் வேண்டுமென்றாலும் இணைந்து செயற்பட தாம் தயார் என்றும்சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார். அத்தனகல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வேட்டை ஆரம்பம்
கொழும்பு நகர் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவியுள்ள ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கண்காணிப்பின் கீழ், இன்று திங்கட்கிழமை (15) முதல், விசேட தேடுதல் நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய படையணி மூலம், இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்த பாதுகாப்புத் தரப்பினர், தேவையேற்படின், விமானப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படும் என்றனர். போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்படும் இந்த நடவடிக்கையின் முன்னேற்றம்…
