News
கொழும்பு போட்சிட்டி சிங்கப்பூருக்கும், துபாய்க்கும் இடையிலான நிதிமையமாக செயற்படும்
சீனாவினால் நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு போட்சிட்டி உரிமை தொடர்பில் ஆங்கில சட்டங்கள் பின்பற்றப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இது தொடர்பாக அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்க, பிரித்தானிய குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளதாக தெரிவித்துள்ளார். போட்சிட்டி என்ற இந்த நிர்மாணம் நிதிநகரம் என்ற பெயரில் கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் அமைக்கப்படுகிறது. இது சிங்கப்பூருக்கும் துபாய்க்கும் இடையிலான நிதிமையமாக செயற்படும் என்று ரணில் தெரிவித்துள்ளார். இந்தநிகழ்வில், தெலுங்கானா வணிக அமைச்சர்…
இலங்கை முஸ்லிம் மக்கள் ஐக்கியத்தை குலைப்பவர்களல்ல: ரணில்
இலங்கை முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்தனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பங்குகொண்டுள்ளீர்கள். உங்கள் முன்னிலையில் நான் ஒரு உத்தரவாதம் வழங்குகிறேன். இலங்கையில் இனவாதத்துக்கு இடமில்லை. இலங்கை இனவாதத்தை எதிர்க்கிறது. இனி ஒருபோதும் இலங்கையில் இனவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக முஸ்லிம் லீக்கின்…
சிறுவர் நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்சபைக்கூட்டம்
இலங்கை சிறுவர்நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19 ஆவது வருட பொதுக்கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முந்தினம்(11) பிற்பகல் காலிமுகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. சிறுவர் நோய்களைக் கண்டறிவதற்கும் அந்நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய வைத்தியர்களை கௌரவிக்கும் வகையில் பேராசிரியர் ஆசிரி குணவர்த்தனவுக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வைத்தியர் அமித் குப்தாவுக்கும் வைத்தியர் ஸ்ரீனிகா குலரத்னவுக்கும் ஜனாதிபதியினால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை…
நாட்டின் முன்னேற்றத்திற்கு நோர்வே அரசாங்கம் தொழில்நுட்ப உதவி
நாட்டின நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு நோர்வே பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே பிரதமர் எர்னா சோல்பேர்க் நேற்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே இந்த இணக்கத்தை தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த நோர்வே பிரதமர் சோல்பேர்க்கினை ஜனாதிபதி வரவேற்றதுடன், இரு தலைவர்களுக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றது….
உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு அடுத்த மாதம் இலங்கையில்
உலக ஏற்றுமதி அபிவிருத்தி மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு கொழும்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் நடைபெறுவதற்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த இரண்டு நாள் மாநாடு “வர்த்தக தொடர்புகள், போட்டித்தன்மை, மாற்றங்கள்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஏற்றுமதி வர்த்தக சபை குறிப்பிட்டுள்ளது. நடைபெறவுள்ள இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் உரை நிகழ்ந்தவுள்ளதாக ஏற்றுமதி…
மஸ்கெலியவில் பாரிய மண்சரிவு
மஸ்கெலியா காட்மோர் கல்கந்த தோட்டத்தில் இன்று காலை பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (13) காலை 07 மணியளவில் இடம் பெற்றது. இந்த அனர்தத்தினால் 41 குடும்பங்களைச் சேர்ந்த 211 பேர் இடம்பெயர்ந்து தோட்டத்தில் உள்ள வெளிகல உத்தியோகத்தரின் விடுதியிலும், தோட்ட ஆலயத்திலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரண பணிகளை மேற்கெள்ள தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலகம் முன்வந்துள்ளமை குறிப்பிடதக்கது. இதேவேளை…
தகவலறியும் ஆணைக்குழு அமைக்க தீர்மானம்
தகவலறியும் உரிமை சம்பந்தமான ஆணைக்குழுக்கு உறுப்பினர்களை நியமித்து அதை ஆணைக்குழுவாக ஸ்தாபிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடிய அரசியலமைப்பு பேரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் தற்போதைய நிலமைகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பேசப்பட்டுள்ளது. அத்துடன் தகவலறியும் உரிமை சட்டம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவை தீவிரமாக பேசப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச நிர்வாக…
08 அண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபடிப்பு; விசாரிக்க உத்தரவு
இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் குளிர்பதன சேமிப்பு கிடங்கில் இருந்து சுமார் எட்டு ஆண்டுகள் பழமையான 03 தொன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை சம்பந்தமாக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவராக கடமையாற்றும் கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ் பாலசுகமுனியமுக்கு அமைச்சர் இது தொடர்பில் ஆலோசனை வழங்கியுள்ளார். வௌிநாடொன்றில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட இந்த மீன்கள், விநியோகம் செய்யப்படாமையினால் கூட்டுத்தாபனத்திற்கு பாரியளவில் நட்டம்…
பிரதமர் சீனாவுக்கு பயணமானார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட 17 பேர் அடங்கிய குழுவினர், சீனா நோக்கி பயணமாகியுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இரவு 9.30 மணியளவில் அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும் – அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய வேண்டும். தற்போது இலங்கையில் சமாதானச்சூழல் நிலவுகின்றது. பல்வேறு தொழிற்துறைகளுக்கான கேள்வியும் சாதகமான காலநிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தச் சாதகமான சந்தர்ப்பத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் இலங்கையில் பொருளாதார அபிவிருத்தியில் முன்னேற்றமடைவதோடு, வேலைவாய்ப்புப் பிரச்சினையும் கணிசமானளவு தீர்க்க முடியுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறினார். நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய வேலைவாய்ப்பு நெருக்கடி பற்றி கேட்ட…
சார்ள்ஸ் நிர்மலநாதன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும்!
அமைச்சர் ரிசாத் மீது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் அபாண்டங்களை சுமத்தியுள்ளமையை உலமா கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, இதற்காக அவர் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்சபை கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் அமைச்சர் ரிசாத் பற்றிய பேச்சு ஒரு தனி நபர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் அல்லாமல் ஒரு…
மீற்றர் முறை அறிமுகம்
அடுத்த வருடத்தின் நடுப்பகுதி அளவில் இலங்கையின் சகல முச்சக்கர வண்டிகளையும் வாடகை வண்டிகளையும் உள்ளடக்கும் விதத்தில் மீற்றர் கட்டண அறவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் கீழ் தூரத்திற்கு அமைய திட்டவட்டமான கட்டணங்களை அறவிட நடவடிக்கை எடுக்கப்படுமென வணிக கைத்தொழில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார். இதற்குரிய ஏற்பாடுகளை அமைச்சின் பொறுப்பில் இயங்கும் நிறுத்தல், அளத்தல் தரச்சேவைகள் திணைக்களம் நிறைவேற்றவுள்ளது. வாடகை வாகன கட்டண அறிவீட்டு முறை தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
