News
நிகாப் அணிந்து, விமானம் ஓட்டும் முதல் முஸ்லிம் பெண் (படங்கள்)
-Ash-Sheikh TM Mufaris Rashadi- முகத்திரை ( நிகாப் ) அணிந்து விமானம் ஓட்டும் முதல் முஸ்லிம் பெண் விமானி சகோதரி ஸஹ்னாஸ் லகாரி. ( பாகிஸ்தான் ) ஹிஜாப் மறைப்பது பெண்களின் அழகைத்தான் அறிவையல்ல.
நாசாவில் கடமையாற்ற, பலஸ்தீன சகோதரி தேர்வு
பாலஸ்தீன் ரமல்லாவில் நடந்த தேசிய அளவிலான PS தேர்வில் பாலஸ்தீன் ரமல்லாவை சேர்ந்த சகோதரி இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் வெற்றி பெற்றதை அடுத்து நாசாவில் கடமையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார் மேலும் இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் சிறந்த ஓவியர் ஆவார். அவரது திறமையின் அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள நாசாவில் பணியாற்ற நாசா அழைப்பு விடுத்து இருந்தது என்பது குறிப்பிட்ட தக்கது.
மக்கள் காங்கிரஸுக்கும் மருதூர் அன்சாருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்ட மருதூர் அன்சாருக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாதெனவும், அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்புரிமை கொண்டவரல்ல, அம்பாறை மாவட்டக் கொள்கைபரப்புச் செயலாளர் என்ற பதவி அவருக்கு எச்சந்தர்பத்திலும் வழங்கப்படவில்ல எனவும் அக்கட்சியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அகில இலங்கை மக்கள் காங்கிஸில் நாடளாவிய ரீதியில் கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் அதிகாரம், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பிக்கு மாத்திரமே உரித்துடையது எனவும்,…
போலி நிறைகள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு தொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் மீட்பு
போலியாக நிறையிடப்பட்ட நிலையில் விற்பனைக்குத் தயாராக இருந்த ஒருதொகை பிஸ்கட் பக்கற்றுக்கள் பேதுருதுடுவ பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது, கைப்பற்றப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதன்படி, 100 கிராம் என நிறையிடப்பட்டுள்ள பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 85 கிராமாகவும், 190 என நிறையிடப்பட்ட பிஸ்கட் பக்கற்றுக்களின் உண்மையான நிறை 180 கிராமாகவும் இருந்ததாக, விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனவே, அந்த பிஸ்கட் பக்கற்றுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த நிறுவனம் மற்றும் அதன்…
கைத்தொழில் பேட்டைக்கு சீனா முன்மாதிரி
இலங்கையில் அமைப்பதற்கு உத்தேசித்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு தேவையான பல பாரிய முன்மாதிரிகளை சீனாவின் சொங்சி மாநகரிலுள்ள பானன் சுக்ஆன் கைத்தொழில் பேட்டையில் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்ததாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சீனாவுக்கு ஐந்து நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் அங்குள்ள கைத்தொழில் பேட்டையைப் பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.
இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்
ஒப்பந்த காலத்துக்கு மேல் சட்ட விரோதமாக பணிபுரிந்த 71 இலங்கை பணிப்பெண்களை குவைத்திலிருந்து மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதின நிகழ்வில் சையத் சகில் ஹிசைன்
தெற்காசிய நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுடனான அரசியல் பொருளாதார காலாசார நகர்வுகளே எமது பிராந்திய எதிர்கால நகர்வுகளை தீர்மானிக்கும் என பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகர் சையத் சகில் ஹிசைன் தெரிவித்தார். பாக்கிஸ்தானின் 70 ஆவது சுதந்திரதினமான இன்று (14) கொழும்பில் அமைந்துள்ள பாக்கிஸ்தானிய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
அதிரடிகளை ஆரம்பிக்கவுள்ள மைத்திரி – மஹிந்தவுடனும் பேச்சு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாட்டில் அதிரடித் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதோடு கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விசேட அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கப்படுத்தவுள்ளார். அதேவேளை இந்த விழாவின் மேடையில் ஜனாதிபதிக்கு இருபுறமும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் ஆசனங்கள் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடப் பூர்த்தி செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதியாகும். அன்றைய தினம் வேலை நாள் என்பதால் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…
புலமைப்பரிசில் பரீட்சை மாணவருக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை
எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற் றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது. இதனையிட்டே இத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பரீட்சார்த்திகளுக்கு பிரத்தியேக வகுப்பு, கருத்தரங்கு, விரிவுரை, பயிற்சிப்பட்டறை, மாதிரி வினாத்தாள்களை அச்சிட்டு விநியோகித்தல் மற்றும் பதாதைகள் ஒட்டுவது, துண்டுப்பிரசுரங்களை வழங்குவது, தொலைக்காட்சி வானொலி விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு…
இலங்கையர் ஒருவர் இந்தியாவில் மாயம்
கொழும்பில் இருந்து யாத்திரீகர்கள் சிலருடன் யாத்திரைக்காக சென்ற முதியவர் ஒருவர் புதுடில்லி விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹியங்கனை பிரதேசத்தை ராமநாயக்க முதியான்சலாகே ஜெயசேகர என்ற முதியவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓட்ட போட்டியில் முதல் இடம்பெற்ற மாணவனுக்கு அமைச்சர் றிஷாட் பாராட்டு!
-றிஸ்கான் முகம்மட் – இன் நிகழ்வு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளர் எ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் கைத்தொழில் வர்க்க அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது இன் நிகழ்வில் கிழக்கு மாகாண ரீதியில் 5000 மீட்டர் ஓட்ட போட்டியில் முதல் இடம் பெற்ற கல்முனை அல்/பஹ்ரியா மாக வித்தியாலய மாணவன் முகம்மட் அல் அஸ்ரால்ளுக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிஷாட் பதீயுதின் பாராட்டியதுடன் இவருடைய எதிர் கால முயற்சிக்கு…
அமைச்சர் றிஷாத் அங்கம் வகிக்கும் வடக்கு மீள் குடியேற்ற செயலணி
பாராளுமன்றத்தில் கடந்த 10.08.2016 அன்று கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பேசும் போது ரிஷாட் பதியுதீன் அங்கம் வகிக்கும் வட மாகாண மீள் குடியேற்ற செயலணி மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும் என அவர் கேட்ட கேள்வி ஆச்சரியத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் கொண்டதாக உள்ளது. 1990 ஆம் ஆண்டு பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட 90,000 வடபுல முஸ்லீம் அகதிகள் ஒருபுறம் இருக்க 2009 இல் இடம் பெயர்ந்த…
