News
சலாவ இராணுவ முகாமிற்கு அருகில் மீண்டும் வெடிப்பு!
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமின் ஆயுத கிடங்கு அண்மையில் வெடித்து சிதறியதன் மூலம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் குறித்த இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீட்டு தோட்டத்தில் மேலும் ஒரு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டு தோட்டத்தை துப்பரவு செய்துக் கொண்டிருக்கும் போது நிலத்துக்கு கீழ் புதைந்து கிடந்த வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டு ஒன்றின் மேல் பகுதியே இவ்வாறு வெடித்துள்ளதாகவும், வெடிப்பு…
வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் எச்சரிக்கை
நாட்டைச் சுற்றியுள்ள கடற் பிரதேசங்களில் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலைமை காரணமாக மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் இன்று வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில பிரதேசங்களில் மழை பொழியும் சாத்தியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
19 வயது இஸ்லாமிய சகோதிரியை உலகின் சிறந்த சமூக சேவகராக ஐநா சபை அறிவித்தது!
படத்தில் நீங்கள் பார்க்கும் சகோதிரி சவுதி அரேபியாவை சார்ந்தவர் 19 வயதை நிரம்ப பெற்றவர் அவரது பெயர் ருஸான் பர்ஹான் சிறுவயதிலேயே சிறப்பான முறையில் சமூக சேலையாற்றியதற்காக அவரை சிறந்த சமூக சேவகராக ஐநா சபை அறிவித்து அவருக்கு பரிசுகளையும் பாராட்டு பத்திரங்களையும் வழங்கி மரியாதை செய்ததோடு அவரை ஐநா சபையின் நல்லெண்ண பிரதிநிதியாகவும் அறிவித்துள்ளது அண்மையில் சவுதி அரேபியா அறிவித்த கனவு 2030 என்ற திட்டத்தை சுற்றி விரிவான சமூக பணி அவர் ஆற்றிவருதாலும் அவர் இந்த விருதுக்கு…
சவூதியில் விபத்துக்களை படமெடுத்தால் 5 ஆண்டு சிறை தண்டனை !
துபாயில் விபத்துக்களை படமெடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் குறைந்தபட்சம் 3 மாதத்திலிருந்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சவூதியிலும் அதைவிட கடும் தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சவூதியில் நடைபெறும் சாலை விபத்துக்கள், கடல், காற்று, நெருப்பு மற்றும் இதர வகை விபத்துக்கள் அனைத்தையும் படமெடுத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ தனிமனித அந்தரங்க பாதுகாப்பு…
அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு உலமாக் கட்சி பாராட்டு
அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் நீண்டகால பிரச்சினையான கரும்பு செய்கைக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுவதற்காக அமைச்சர் ரிசாத் பதியுதீனை, உலமா கட்சி பாராட்டியிருப்பதுடன் இது விடயத்தில் நல்லாட்சி அரசில் துரித வெற்றி கிடைக்க பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இது பற்றி அக்கட்சி குறிப்பிட்டிருப்பதாவது, 1970களில் ஹிங்குரானை சீனிக்கூட்டுத்தாபனத்துக்கென முஸ்லிம்களின் பல காணிகள் நஷ்ட ஈடு தருவதாக கூறப்பட்டு சுவீகரிக்கப்பட்டன. இவற்றில் கன்னியம்பத்தை, கல்மடுக்கண்டத்தின் குடுவில் காட்டுவெளிக்கண்டத்தில் உள்ள 319 ஏக்கர் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடோ மாற்றுக்காணியோ…
வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு உதவ புதிய திட்டம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் சென்றுள்ளவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உதவுவதற்காக நடமாடும் சேவைகளை பிரிடோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடமாடும் சேவை நாளை காலை 9 மணிமுதல் டயகம நகர மண்டபத்தில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பலர் விசேடமாக வீட்டுப்பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்களில் பலர் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர். இடைத்தரகர்களால் ஏமாற்றப்படுதல், மத்திய கிழக்கில் வேலை செய்யும் வீடுகளில் துன்புறுத்தப்படுதல், இதன் காரணமாக அங்கிருந்து தப்பி தூதரகத்தில்…
வெலிக்கடை சிறைச்சாலை ஹொரணைக்கு மாற்றம்
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையை அங்கிருந்து அகற்றி அதற்கு பதிலாக ஹொரணை பகுதியில் சிறைச்சாலையை அமைக்க அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்றத்துறை அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதேவேளை, புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இதன்படி, தற்போது…
மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க கோரிக்கை
இந்த வருடம் டிசம்பர் மாதம் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள அதிகமான மாணவர்கள் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கவில்லை என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடமொன்றிட்கு 4 இலட்சம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதாகவும், இதுவரை இந்த வருடத்திற்கு இரண்டு இலட்சம் மாணவர்களுக்கான அடையாள அட்டை விண்ணப்பங்களே கிடைத்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார். மேலதிகமாக இரண்டு இலட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களை அனுப்பாமல்இருப்பதாகவும்,எனவே துரிதமாக தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்புமாறும்…
திருகோணமலை துறைமுகத்தில் சர்வதேச கப்பல்கள்
அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ் நியூ ஒர்லியன்ஸ் கடற்படை கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு அண்மையில் வந்து சென்றது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக திருகோணமலை துறைமுகத்தை வந்துடைந்துள்ளது. கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி வரை திருகோணமலை துரைமுகத்தில் பிரான்ஸ் கப்பல்…
உயர்தரப் பரீட்சை : 4 அதிகாரிகள் பணிநீக்கம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மண்டபங்களில் பணியாற்றிய 4 கண்காணிப்பாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிரிஉல்ல, நுவரெலிய மற்றும் வெலிவேரிய ஆகிய கல்வி வலயங்களில் பணியாற்றிய கண்காணிப்பாளர்கள் நால்வரே இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த நால்வருக்கும் பரீட்சை மண்டபங்களில் பணிபுரிய வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு
நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் எம்-2 சிறைப் பகுதியில் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவுடன் சுதர்சன கனோகொட என்ற மற்றுமொரு நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவின் நிறுவனத்தில் இந்த நபர் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார். நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த சென்றுள்ளார்….
மின்னியல் உபகரணங்களுக்கு ஒரே நாளில் அனுமதி
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் மின்னியல் உபகரணங்களுக்கான அனுமதியை ஒரே நாளில் பெற்றுக்கொடுக்க தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. மின்னியல் உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு குறித்த ஆணைக்குழுவின் அனுமதி பெறுவது அவசியம். அத்துடன் அனுமதிக்காக ஒரு வாரங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதால் நுகர்வோர் அதிகம் சிரமங்களை எதிர்கொள்வதாக தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுனில்.எஸ்.சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே குறித்த சிரமங்களை தவிர்ப்பதற்காக புதிய வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் அது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர்…
