News
விமானப் பணிப்பெண் நித்தியா கைது!
– எம்.எப்.எம்.பஸீர் – பணச் சலவை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்க்ஷவின் கவர்ஸ் கோப்ரேஷன், என்.ஆர். கன்சல்டன் நிறுவன பணிப்பாளரும் விமானப் பணிப் பெண்ணுமான நித்திய சேனாதி சமரநாயக்க நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
குவாண்டம் செயற்கைக் கோளை வெற்றிகரமாக செலுத்தியது சீனா
குவாண்டம் போட்டான் துகள்களை எளிதில் உடைக்கவோ, பிரிக்கவோ முடியாது என்பதால் செயற்கைக் கோள் தகவல் தொடர்புக்கு இதனை பயன்படுத்தும் முயற்சியில் சீனா இறங்கியது. அதன்படி, சீனாவின் விண்வெளி அமைப்பு உலகின் முதல் குவாண்டம் தகவல் தொழில்நுட்ப செயற்கைக் கோளை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் கோபி பாலைவனத்தில் உள்ள ஜிகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்…
உதவிகளை வழங்க உலக முஸ்லிம் லீக் இணக்கம்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாசபை இலங்கை முஸ்லிம்களுக்கு செய்யும் சேவைகளைப் பாராட்டிய உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லா பின் முஹ்சின் அல்துர்க்கி உலமா சபையின் சேவைகளுக்கு முடியுமான உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற உலக முஸ்லிம் லீக்கின் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வருகை தந்திருந்த உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் அல்துர்க்கி கொழும்பிலுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்துக்கு விஜயம் செய்தார். அவரை…
இராணுவத் தளபதியின் பதவிக் காலம் நீடிப்பு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டிசில்வாவின் பதவிக் காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். இந்த பதவி நீடிப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ,குறித்த பதவி நீடிப்பு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியில் இருந்துஅமுலாகும் விதமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து டில்சான் ஓய்வு
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான திலகரட்ன டில்சான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்ரேலியாவுடனான ஒரு நாள் போட்டி தொடர் முடிவுடன் டில்சான் ஓய்வுபெற போவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இதுவரையில் தமது ஓய்வு குறித்து டில்சான் உத்தியோகப்பூர்வ அறிவிக்கவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.
பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் ; பாடசாலைகள் மூடப்படும் விபரம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது. இதன்படி குறித்த நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி வரைமேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக 27 பாடசாலைகள்பயன்படுத்தப்படவுள்ளதாகவும், அதில் 6 பாடசாலைகள் முழுமையாகவும் 21பாடசாலைகள் பகுதியளவிலும் மூடப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளீர் கல்லூரி, கொழும்பு இராஜகிரிய வித்தியாலயம்,நாலந்தா வித்தியாலயம், கண்டி விஹாரமஹாதேவி பெண்கள் மகாவித்தியாலயம், கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலை,…
படை வீரர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதியால் கையளிப்பு
யுத்தத்தின்போது நாட்டுக்காக உயிர் நீத்த படைவீரர்களுக்கும் யுத்த களத்தில் காயமடைந்த படைவீரர்களுக்குமாக நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் படைவீரர்களிடம் கையளிக்கப்பட்டது.
இலங்கையர்கள் குறித்து ஆய்வின் முடிவுகள்
இலங்கையர்களில் 80 சதவீதமானோர் ‘நேரமில்லை” என்ற போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று -16- நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலின் போது குறித்த அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகர உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்…
எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது
-சுஐப் எம்.காசிம் – பல்வேறு கஷ்டங்களுக்கும், அழுத்தங்களுக்கும் மத்தியிலேயே தான் எதிர்நீச்சல் போட்டே மக்கள் பணியாற்றி வருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (16/08/2016) யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன், யாழ் முஸ்லிம் வாட்டாரத்துக்குச் சென்று, அங்கு மஸ்ஜிதுல் மரியம் ஜும்ஆ பள்ளிவாசலில் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மீள்குடியேறிய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டறிந்த அமைச்சர், எதிர்வரும் காலங்களில் இந்தக் கஷ்டங்களை படிப்படியாகத் தீர்க்கக்கூடிய நல்ல…
சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம் -அமீர் அலி
-நாச்சியாதீவு பர்வீன் – சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம். இப்போது நாட்டில் பல பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகமும்,சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்து பாவனை பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகம் காணப்படுகின்றன இவற்றை கட்டுப்படுத்தவும், போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளம் பரம்பரையை மீட்டெடுக்கவும் நவீன பாதுகாப்பு பொறிமுறை அவசியம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் பொதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்…
பிறந்த குழந்தையாக கடத்தப்பட்ட யுவதி 18 ஆண்டுக்கு பிறகு மீட்பு
தென் ஆப்பிரிக்காவில் குரூட் செக்குர் ஆஸ்பத்திரியில் கடந்த 1997-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு ஷெபானி நர்ஸ் என பெயரிட்டனர். தாய் மயக்கமாக இருந்தபோது ஒரு பெண், பிறந்த பச்சிளங் குழந்தையை கடத்தி சென்றார். அதை தனது குழந்தை எனக்கூறி வளர்த்து வந்தார். இதற்கிடையே கடத்தப்பட்ட குழந்தை வளர்ந்து பெரியவளாகி 18 வயது நிரம்பிய நிலையில் ஒரு பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அதே பள்ளியில் படித்த ஒரு சிறுமி இவளது முக தோற்றத்தில் இருந்தாள்….
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது நிறைவாண்டு விழா
நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை ஒழுங்கு செய்துள்ளார். 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடத்திய பொதுத் தேர்தல் மூலம் உருவான தேசிய அரசாங்கத்தின் மூலம் நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற நன்மைகளை புலப்படுத்தும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த…
