News
முப்படைகளின் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பேன் ; ஜனாதிபதி
முப்படைகளின் உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரையிலான அனைத்து அங்கத்தவர்களதும் பாதுகாப்பிற்காகவும் அபிமானத்திற்காகவும் முன்னிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முப்படைகளின் பிரதானி என்ற ரீதியிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் தனது பொறுப்புக்கள் தொடர்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறைத்து மதிப்பிட்டு தான் நடவடிக்கை மேற்கொள்வதில்லையெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற 09 ஆவது பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியின் பூர்த்தி விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு…
மஹிந்த வர வாய்ப்பில்லை!
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இரவு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட முன்னாள் ஜனாதிபதி, அன்றையதினம் (ஆண்டுவிழா நாளில்) தனக்கு சர்வதே…
முஹம்மத் நிஷாத் குவைதில் வபாத்!
-ஹரீஸ் ஸாலிஹ் – மினுவாங்கொடையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நவ்ஷாத் அவர்களின் செல்வப் புதல்வர் 19 வயதுடைய முஹம்மத் நிஷாத் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் குவைத் நாட்டில் காலமானார் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (22) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து, குவைத் சப்ஹான் மையவாடியில் இடம்பெற்றது அல்லாஹ் அவரின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக..!
சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி நாதன் காலமானார்
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை உடையவர். 92 வயதான அவர் கடந்த ஜூலை 31ம் திகதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், ஜனாதிபதி டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு…
நாடு கடத்தப்பட்ட 6 பேரும் நீதிமன்றில் ஆஜர்!
சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 6பேர் இலங்கைக்கு அண்மையில் நாடு கடத்தப்பட்டனர். அதற்கமைய இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த வேளைகுற்றப்புலனாய்வு அதிகாரிகளால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நபர்கள் கடந்த மாதம் 21ம் திகதிகாத்தான்குடி கடற்பரப்பின் ஊடாக அவுஸ்திரேலியா சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக கடலில்தத்தளித்துக் கொண்டிருந்த நேரத்தில் இலங்கை அரசின் கோரிக்கமைய இவர்கள்அவுஸ்திரேலிய படகுகள் மூலம் காப்பற்றப்பட்டு மீண்டும்…
குறைவடைந்தது பணவீக்கம்
இந்த ஆண்டின் ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் அமர சத்தரசிங்க இதனை தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின் செலவுப் பெறுமதி 0.7 சதவீதத்தாலும், உணவில்லா பொருட்களின் செலவுப் பெறுமதி 0.1 வீதத்தாலும் குறைவடைந்தமை இந்த மாற்றத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மாதத்தில் மரக்கறி, தேங்காய், உடன்மீன், சீனி, கோதுமை மா, அரிசி, மைசூர் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விலைகள் குறைவடைந்தன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் பெறுமதியும்…
கவர்ச்சிமிக்க இடமாக கொழும்பு உருவாக்கப்படும்!
லண்டன், நியூயோர்க் மற்றும் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்ட ஹொங்கொங்இ சிங்கப்பூர் மற்றும் டுபாய் என்பவற்றின் அனுபவங்களை பெற்று அதனை விட கவர்ச்சி மிக்க இடமாக கொழும்பு நிதி நகரத்தை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். நேற்று (22) கொழும்பில் நடைபெற்ற முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான நிகழ்வில் உரையாற்றிய அவர் தெரிவித்ததாவது: துறைமுகம், விமான நிலையம் மற்றும் நிதி நகரத்தை அண்டியதாக மாநகர திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எமது தேசிய பூகோள வரைபடத்தை மீள…
அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் முயற்சியின் பயனாக எமது மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தேசிய பாடசாலையான அநுராதபுரம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 108 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன் நிகழ்வின்போது கெளரவ கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்கள் முஸ்லீம் பாடசாலை ஒன்றிற்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்…
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் தமிழ், முஸ்லிம் மாணவர்கள் மீது தாக்குதல்
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களால் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துருக்கி தாக்குதல் குறித்து இலங்கை கண்டனம்
துருக்கியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக 51 பேர் பலியாகியுள்ளதாகவும், 100இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
நல்லாட்சி அரசாங்கத்தை ஆதரிக்க வேண்டும் – பைஸர் முஸ்தபா
– எம்.ஆர்.எம்.வஸீம் – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரிப்பவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தையும் ஆதரிக்க வேண்டும். மக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு தனியாக ஆட்சி நடத்த முடியாமல் உள்ளது என மாகாண கபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார். பண்டாரவளையில் நேற்று (22) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2020 இல் புதிய அரசாங்கம் அமைக்க திட்டம்
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியில் சவால்கள் பல உள்ளன. எனவே 2020 ஆம் ஆண்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்தார். மேல்மாகாண சபை முதலமைச்சரின் உத்தியோபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளும் உரையும் இன்று பல விமர்சனங்களுக்கு உள்ளானவண்ணமுள்ளன. தற்போது…
